அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 1

‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’

‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’

‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’

‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’

‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’

‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’

‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’

Black-Cat-Wallpaper-46

என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன்.

அடுத்து நண்பர்கள் மத்தியில். அதை அடுத்து எனது மாணவர்களிடையே இந்த ஆராய்ச்சி தொடர்பான கேள்விகள் தொடர்ந்து கேட்க பட்டன.

இதையெல்லாம் நான் கேட்ட போது குறிப்பிட்ட ஒரே ஒரு உணர்வு மட்டும் எல்லாரிடமும் மேலோங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதாவது இந்த நம்பிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஏதோ ஒரு வகையான திருப்தியை எல்லார் முகத்திலும் காணமுடிந்தது. அது ‘எனக்கு இது தெரிந்ததால் தான் நான் நன்றாக இருக்கிறேன்’ என்பதை பறை சாற்றுவது போல் இருந்தது. ஆனாலும் இவர்களையெல்லாம் இந்த நம்பிக்கைகளின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்தது என்ன என்பதை அறிந்து கொள்ள்வதில் தான் என்னுடைய அடுத்த கட்ட நகர்வு இருந்தது. பொதுவாகவே ஒரு இடத்தில் இருவர் மூவர் கூடும் போது எப்படியாவது இந்த நம்பிக்கைகள் தொடர்பான உரையாடல்கள் முளைத்து கொண்டே இருக்கும். இந்த நம்பிக்கைகள் யாவை? இவை எப்படி மூடநம்பிக்கைகளாக உருமாற்றம் கண்டன? இங்கிருந்து தான் நமது பகிர்வு தொடர்கிறது.

மூடநம்பிக்கைகள் (Superstitious beliefs) எனபடுவன முன்னொரு காலத்தில் மதம் சார்ந்த அல்லது இறைவனின்/அரசன் பால் பயத்தை ஏற்படுத்தவோ மற்றும் சுயபாதுகாப்புகாகவோ தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த ஒரு செயல். இது அகம் தொடர்பான சிந்தனையாகவே தான் குறிப்பிட்ட காலகட்டதுக்கு இருந்து வந்துள்ளது. தொடர்ந்து செய்யபட்ட செயல்கள் நாளைடைவில் பழக்கமாக மாறி போக, கால போக்கில் அச்செயல்களின் பயன்பாடு செயல்பாட்டிலிருந்து காணாமல் போனாலும் அவை ஏதோ கடமைக்காக கடைப்பிடிக்க பட்டன. தொடர்ந்து வந்த சந்ததியினர் சிந்திக்க மறந்தனரோ இல்லை பழக்கமாகி போனாதால் விட முடியாமல் விரும்பியே தங்களின் அடையாளமாக மாற்றி கொள்ளவே முற்பட்டு உள்ளனர். இப்படி அடையாளமாகி போன பழக்கவழக்கங்கள் கால நகர்வில் கற்பனை கலந்து மிகை படுத்த பட்டு மூடநம்பிக்கையாக உருவெடுத்து நிற்கின்றன.

மூடநம்பிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் ஏதோ அறிவு சார்ந்த காரணம் இருக்கத்தான் வேண்டும். அதுமட்டுமின்றி தன்னை சுற்றி நடப்பவைகளுக்கெல்லாம் காரணத்தை அறிவியல் பூர்வமாக கண்டுணர முடியாமல் போனதன் பொருட்டாக சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட சமய அறிவு மூடநம்பிக்கைகள் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது. இதைதான் செல்பெர்க் என்பவர் ‘Talking Superstitions Seriously’ என்னும் தனது கட்டுரையில் தெளிவாக கூறியிருக்கிறார். தனது சமயத்தை தற்காக்கவும் அதை பிறவற்றிலிருந்து உயர்வாக காட்டவும் பல நேரங்களில் மூடநம்பிக்கைகள் ஆயுதமாக பயன்படுத்த படுகின்றன. மதம் என்று வந்தாலே நம்மில் பெரும்பாலோர் அறிவை கொஞ்ச நேரம் பூட்டி வைத்து விடுகின்றனர் என்பதை இவர் மிக துல்லியமாக எழுத்துரைத்துள்ளார்.

இந்த காரணமாகத்தான் பல பகுத்தறிவாளர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏன் என்ன எதற்கு என கேள்விகள் கேட்க வேண்டும் என வலியுறுத்துக்கின்றனர். இது தவறான ஒன்று கிடையாது. ஆத்திகத்தை பரப்பும் கருத்தும் கிடையாது. ஆனால் பகுத்தறிவை பயன்படுத்துங்கள் பயன்படாத ஒரு செயலுக்கு உங்கள் விலைமதிகப்பில்லா சக்தி இயக்கத்தை வீணாக்காதீர்கள் என்பதற்கான அறைகூவல். நம்மில் பலரும் பல செயல்களுக்கு காரணம் அறியாமல் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றோம். கொஞ்சம் நிதானித்தால் அறிவியல் பூர்வமாக பெரும்பாலானவற்றுக்கு விளக்கம் கண்டுபிடிக்கலாம். இதனால் வருங்காலத்தில் சிந்திக்க தெரிந்த சமுதாயத்தை உருவாக்கலாம்.

பின்வருவன வழக்கமாக கேள்விபடும் ஒரு சில நம்பிக்கைகளும் அவற்றின் பின்புலத்தின் அறிவியல் கூற்றுகள். அவற்றில் முதலாவது

  1. வெளியில் புறப்படும் போது குறுக்கே பூனை வந்தால், சகுனம் சரியில்லை.

இது பல்லாண்டு காலமாக சொல்ல பட்டு வரும் ஒரு பழைய வியாக்கானம். இது சொல்ல பட்ட காலம் மிகவும் முக்கியமான ஒன்று. அது மக்கள் இன்னுமும் காட்டை அண்டி அதை சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த காலம். இன்னொன்று இதில் சொல்ல பட்ட பூனை உண்மையாகவே பூனையைதான் குறிக்கிறதா என்ற கேள்வி நிறைய பேருக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான். அக்கால மக்கள் எதையும் இலைமறை காயாக சொல்லித்தான் இன்பம் புசிப்பார்கள். சரி இப்போது கருத்துக்கு வருவோம்.

அக்கால மக்கள் காட்டை சார்ந்து வாழ்ந்து வந்ததால் சரியான பாதுகாப்பு இன்றி இயற்கை மாற்றங்களையும் சுற்று சூழலில் ஏற்படும் மாற்றங்களியும் வைத்து தான் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தனர். ஆக பூனை வகையை சார்ந்த புலி, சிறுத்தை என பெரிய பூனைகளின் நடமாட்டமும் இருந்திருக்கிறது. புலி, சிறுத்தை போன்றவை இயல்பாகவே சாலையையோ நடைபாதையையோ அல்லது மனித நடமாட்டங்கள் உள்ள பகுதிகளையோ கடக்க நேரிட்டால் பதுங்கி தாக்க கூடியவை. இப்படி இவை கடந்து போகும் நேரமும் நாம் வெளியில் புறப்படும் நேரமும் எதிர்பாராத வகையில் ஒன்றாக அமைந்து விட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடும்.

வெளியில் செல்லும் போது குறுக்கே எதிர்படும் இப்பெரிய வகை பூனைகள் நாம் வரும் வரை புதர் மறைவில் காத்திருந்து நம்மை தாக்கலாம் அல்லது நமது இருப்பிடத்தையோ அதில் இருப்போரையோ தாக்கலாம். எனவே இது முழுக்க முழுக்க கெடுதலான ஒரு விஷயம். எனவே ஒட்டு மொத்தமாக சகுனம் என கூறப்பட்டது. எனவே எதிர்பாராத விதமாக வெளியில் போகும் போது இவை அதாவது புலி அல்லது சிறுத்தை போன்ற பெரிய பூனை வகைகள் குறுக்கே எதிர்ப்பட்டால் செல்லும் காரியத்தை ரத்து செய்து விட்டு வீட்டுக்கு சென்று பாதுகாப்பை தேடி கொள்ளுங்கள் என சொல்லாமல் சொல்லப்பட்டது.

இந்த விஷயம் அந்த காலக்கட்டத்தில் சரியான அறிவான சமயோதிதமான ஒரு கருத்து. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த கருத்து நாம் வாழும் நகர வாழ்வின் நடைமுறைக்கு சரியான ஒன்றா? சிறிது சிந்திக்க வேண்டிய ஒன்று. அன்று பூனை என சொல்லபட்டவை இன்று நாம் காணும் குட்டி பூனைகளும் வீட்டு பூனைகளும் என தவறாக கணிக்க பட்டு விட்டன. எனக்கு தெரிந்து எந்த வீட்டு பூனையும் மனிதனை கொன்றதாக நான் கேள்வி பட்டது இல்லை. ஒரு கால் நாம் வெளியே போகும் போது இந்த குட்டி பூனைகளும் வீட்டு பூனைகளும் எதிர்பட்டால் பாவம் அவற்ருக்கு தான் சகுனம் சரியில்லை. காரணம் காரின் சக்கரங்களில் மிதிபட்டு அவை உயிர் இழக்க கூடும்.

ஆனால் பாருங்கள் நம் மக்களின் சிந்திக்கும் திறனை. பூனை என்று சொன்னதுமே எதையும் யோசிக்காமல் தினசரி காணும் பூனைகளின் மீது பழி போட்டு கொஞ்சம் மூடநம்பிக்கையை நீரூற்றி வளர்த்து வைத்திருக்கின்றனர். இதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா!. எனவே பூனைகள் குறுக்கே போவது ஒன்றும் பாதகமில்லை. ஆனால் கண்முடிதனமாக இதன் உட்கருத்தை அறியாமல் பின்பற்றுகிறோமே இந்த மூடதனத்தால் பெரிய பாதகம். ஆக இனிமேலாவது பூனைக்கு ஹை சொல்லி காரியத்தை தொடங்குவோம்.

தொடரும்

பின் குறிப்பு: இக்கருத்து ஒரு சிலரோடு உரையாடியும் பின்வரும் அகப்பக்கத்திலிருந்தும் பெறப்பட்டது.

https://www.questia.com/read/1G1-113757571/taking-superstitions-seriously-1

http://tamilblog.ishafoundation.org/nambikkai-moodanambikkai-aanathu-eppadi/

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...