Author: நோவா

பேய்கள் உலவும் உல்லாச உலகிதுவே

குட்டிச்சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான பேய்கள் உள்ளன. அம்புலிமாமா நூல்களில் வேதாளம் குறித்துப் படித்ததுபோக வருடத்துக்கு எப்படியும் பழிவாங்கும் வகையறாக்களாகப் பத்து பேய்ப்படங்கள் திரையரங்குகளை நிரப்பிவிடுகின்றன. அக்கால விட்டாலாச்சாரியார் மாயாஜாலப்படங்கள் முதல் இன்றைய கொரிய-ஜப்பானிய பேய்ப்படங்கள் வரை தனிசந்தை மதிப்புக் கொண்டவையாக இருக்கின்றன. இடையிடையே திகிலூட்டும் நிகழ்ச்சிகள் என…

மிஞ்சியிருப்பவர்களின் கதை

எழுத்தாளர் செல்வன் காசிலிங்கம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. அவர் எழுதிய படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. அவரின் புனைவில் முதன் முதலாய் படித்த எழுத்துப்படிமம் இந்த ‘மிச்சமிருப்பவர்கள்’ நாவல் மட்டுமே. என்னுடைய முதல் அனுமானம், இவ்வளவு சிறிய நாவல், கண்டிப்பாக அவ்வளவு சுவாரசியமாக இருக்காது என்பதுதான். ஆனால் இந்நாவல் இண்ட்ராப் (HINDRAF) பற்றியது என முகவுரையில் வாசித்ததும்…

சு. வேணுகோபாலின் நாட்டார் வழக்காற்றியல் ஒருபார்வை

21.12.2019 அன்று சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்தில் மூன்றாம் அமர்வாக நாட்டார் வழக்காற்றியல் பற்றி சு. வேணுகோபால் ஒரு சிறந்த தெளிவுரை வழங்கினார். சரியாக பிற்பகல் 2.30 மணியளவில் உரை ஆரம்பித்தது. எழுத்தாளர் சு. வேணுகோபால் அளித்த கடந்த உரைகள் அனைத்தும் கேட்கும் போதே நம் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் உராய்ந்து விட்டு செல்வதாகவே…

புங் ஜாகோய்: குன்றும் குறுங்குழுவும்

சரவாக் பல இரகசியங்களைத் தன்னகத்தே வைத்து அங்கு வாழ்வோருக்கும் வருகை தரும் பயணிகளுக்கும் ஒரு விந்தையான நிலமாகவே இருந்து வருகிறது. சரவாக், சரவாக் என அடையாளம் பெறுவதற்கு முன்னர், அதாவது 1963 மலேசிய ஒப்பந்தத்திற்கு முன்பு (Perjanjian Malysia 1963) முன் போர்னியோ நிலப்பரப்பாக இருந்தது. இன்றும் உலகின் பல மூலைகளிலிருந்தும் இங்கு வரும் மக்கள்…

சரவாக் : கதைகளால் நிரம்பிய காற்றின் நிலம்

சரவாக். என்னை எனக்கு அறிமுகப்படுத்திய மாநிலம். இதை நான் மாநிலம் என குறிப்பிடுவதை விட இனம், மொழி, மதம், சீதோசன சூழல் என மாறுப்பட்ட இந்த நிலத்தை நாடு என்று சொல்வதுதான் சரியாகப் பொருந்தும். படிக்கும் காலங்களில் பாடப்புத்தகத்தில் சரவாக் பற்றி படித்ததோடு சரி. பின்னர் அதைப்பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. பல்கலைக்கழகத்தில் என்னோடு வேதியல் வகுப்பில்…

‘கலைக்கு வயதாவதில்லை’ – ஆர்தர் பொர்மன்

சுற்றிலும் செடி கொடிகள், வானுயர வளர்ந்த மரங்கள், சலசலத்து ஓடும் தெளிந்த நீரோடை. வீடோ முற்றிலும் மூங்கில்களால் ஆனது. இயற்கைதான் இங்கே ஜீவ நாதம். கூச்சிங் நகரத்திலிருந்து ஒரு மணி நேர காரில் பயணம். சரவாக் என்றாலே நீண்ட வீடுகளின் கலாச்சாரம், இசை, நடனம், உணவு, வாழ்க்கை முறை என முற்றிலும் மாறுபட்ட சூழல். அது…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 4

கடந்த தொடரில் பெண்ணும் அவநம்பிக்கையும் எப்படி ஒன்றோடு ஒன்று செர்த்து பிணைக்கப்படிருக்கின்றன என்பதை பற்றி பார்த்தோம். இத்தொடரும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் பெண்ணுக்கு மட்டுமே ஏற்படும் இயற்கை உபாதை எப்படி சில நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது என்பதை பார்ப்போம். உலகை ஒரு பெண் தாய்மை அடைய வேண்டுமாயின் அவளுக்கு மாதவிடாய் கண்டிப்பாக எற்பட்டிருக்க வேண்டும். தாய்மையுடைய முதல்…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 3

நிறைய பேர் மனதிலும் மூளையிலும் குடி கொள்ளும் ஒரு பிம்பம் பெண். அவள் குழந்தையாக இருக்கும் போதும் சரி, பூப்படையும் போதும் சரி, அவள் தாய்மையடைந்த கர்ப்பக்காலத்திலும் சரி, தொடர்ந்து மீண்டும் குழந்தை என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல நம்பிக்கைகளுக்கு உள்ளாகிறாள் (உள்ளாக்கப்படுகிறாள்). பெரும்பாலும் பெண்ணின் வாழ்க்கை முறையை கட்டமைக்க பல நம்பிக்கைகள் உட்புகுத்த படுகின்றன.…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 2

Magic mirror on the wall, who is the fairest one of all? ஒரு நாள் வீட்டின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அந்த அறையில் இரண்டு அலமாரிகள் உள்ளன. ஒன்றில் முழு கண்ணாடி பதிக்க பட்டிருந்தது. இரண்டு அலமாரிகளிலும் சேலைகள்தான் மடித்து வைக்க பட்டிருந்தன. எப்போதும் விடுமுறைக்கு வீட்டுக்கு போனாலும் நான்தான்…

அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 1

‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’ ‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’ என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன். அடுத்து நண்பர்கள்…

மரண பயத்துடன் தொடரும் பயணம்

மலையிலிருந்து இறங்கி கொண்டிருந்த போது ஒரு செங்குத்தான இடம். அங்கே மரக்கட்டையின் மேல் கால் வைத்துதான் கவனமாக இறங்க வேண்டும். நான் சரியாகதான் இடம் பார்த்து கால் வைத்தேன். அது மிகவும் செங்குத்தான இடம். இருந்தும் என் காலும் மரக்கிளையில் பதிந்திருந்த என் கையும் எப்படியோ நழுவிவிட்டன. எனக்கு முன்னாடி யாரும் இல்லை. பின்னாடிதான் சிலர்…

ரகசிய மனிதர்கள்

நாங்கள் இன்னும் நத்தை மாதிரி நகர்ந்து மேலே ஏறி கொண்டிருந்தோம். மெல்ல அடி வைத்து சென்று கொண்டிருந்த போது எங்களை தாண்டி சிறு கூட்டம் செனறது. ஒரு ஆண், ஒரு பெண், 7 வயது என அணுமானிக்க கூடிய சிறுமி, பெண்ணின் இடுப்பில் 3 வயது மதிக்கதக்க சிறுக்குழந்தை. இது தான் அந்த சின்ன குடும்பம்.…

சரவாக் எதிர்க்கட்சி வசமாகுமா?

தேர்தல்…தேர்தல்..தேர்தல்… இப்போதைய மலேசியாவை அசைத்து பார்க்கும் இன்னொரு பேரலை. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைப்பெறும் நாட்டின் பொதுத்தேர்தல் இம்முறை 2008-ம் ஆண்டுக்கு பின்னர் நான்காண்டுகள் கடந்து ஐந்தாம் ஆண்டில் இடம்பெற்றுள்ளது. பன்னிரண்டு பொது தேர்தல்களை கடந்து விட்ட மலேசியாவுக்கு இது பதிமூன்றாவது தேர்தல். எனவே சென்டிமென்ட் காரணமாக பதிமூன்றாவது தேர்தல் 2013-ம் ஆண்டு தான்…