திருடர்கள் என்றலே எனக்கு மிகவும் பயம். அப்போதெல்லாம் எண்ணெய் மனிதன் (Orang Minyak) குறித்தப் பேச்சு எங்கள் ஊரில் அதிகம் இருந்தது. கம்பத்தில் வசித்தபோது நள்ளிரவுகளைத் தாண்டியும் பேய் பயமெல்லாம் இல்லாமல் சுற்றியுள்ளேன். கம்பத்து வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பகலில்கூட திருடர்கள் பயம் கௌவிக்கொள்ளும். குறிப்பாக எண்ணெய் மனிதன் என் பொழுதுகளை அச்சமடைய வைத்தான். எங்கள் வீடு…
Category: தொடர்
நீயின்றி அமையாது உலகு -10
அன்று காலை அலுவலகத்தில் ஓர் அதிசயம் நடந்தது. அழகியொருத்தி வேலை கேட்டு வந்திருந்தாள். பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் வேலை என்பதால் ஓரிடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் சுற்றை முடிக்கும்போது அலுவலக வாசல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த யுவதியைப் பார்க்க நேர்ந்தது. யுவதியைக் கண்டதும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் போல ஏதோ ஒன்று காதில்…
காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 9
ஒருகாட்சியை அப்படியே கண்முன் விரியுமாறு விவரிப்பதை படிமம் என்று சொல்கிறோம். சங்கப்பாடல்களில் அதுவும் அகநானூற்றில் பெரும்பாலானவை படிமங்கள் கொண்டவைதான். இந்தப்படிமங்கள் எதற்கு எடுத்தாளப்படுகின்றன என்றால் உணர்வை அழுத்தமாகச் சொல்ல அதுவே ஏதுவாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ‘சுண்ணாம்புக்கல் வெடித்ததுபோல் மலர்ந்திருக்கும் வெண் கடம்ப மலர்’ என்றொரு உவமை. அந்தக்காலத்தில் எல்லாம் வீட்டுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்புக்கல்லை வாங்கி வந்து…
நீயின்றி அமையாது உலகு 9
பலவித நாகங்களுக்கு நடுவில் நான் மட்டும். என் இரு கைகளையும் இறுக்கப்பிடித்த மலைப்பாம்புகள் ஆளுக்கு ஒருபக்கம் என இழுத்தன. தப்பித்து ஓடிவிட முடியாதபடி கால்களை கருநீல நாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்திருந்தன. சுற்று வளைத்துவிட்ட நாகங்களின் பளபளத்த மேனி கண்களைக் கூசியது. இருக்கும் இடைத்தைப்பற்றியோ கிடக்கும் நிலை பற்றியோ என்னால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை.…
நீயின்றி அமையாது உலகு 8
கடந்த இதழின் தொடர்ச்சி அதன் பின் சந்திக்கும்போதெல்லாம் அந்த அக்காவிற்கு நன்றி சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரிடத்திலும் சிடுசிடுவென இருக்கும் அவர் என்னிடம் சிரமமின்றிப் பழக ஆரம்பித்தார். தொழிற்சாலையில் வேலை செய்யும் மற்றவர்க்கு அது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. அது நிர்வாகத்தினர் வரை சென்றது. அன்று பணியாளர்களும் மேனேஜரும் சந்திக்கும் நாள். முதல் நாள்தான் எங்களுக்கு தெரியும்.…
நீயின்றி அமையாது உலகு – 7
உதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டன. கண்களைத் திறக்கத் தேவையான விசை எதுவென பிடிபடவில்லை. புருவங்கள் துடித்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. அந்த நொடி வாழ்வின் எல்லையில் நின்று எல்லையற்ற எதையோ பார்ப்பதாகப் பட்டது. கருமேகங்களின் மேல் நான் மிதப்பதாகவும், நானே மழையாகப் பொழிவது போலவும். நானே கடலாக, நானே நீராவியாக, அருவமானதாக, நானே அண்டம் முழுதும் நிறைந்துவிட்ட…
நீயின்றி அமையாது உலகு – 6
மீண்டும் பார்க்க விரும்பும் முகங்களில் ஒன்றுதான் அவளுடையது. முதன் முதலில் அவளைப் பார்த்த பிறகுதான் என் பெரியமூக்கின் கீழ் சில உரோமப்புள்ளிகள் உருவாகியிருந்ததை முழுமையாக உணர்ந்திருந்தேன். லேசாக அதனைக் கிள்ளியும் பார்த்தேன். அவை மூக்கின் கீழ், உதட்டின் மேல் முட்டிக்கொண்டு இருந்தன. இன்னும் சில நாட்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போதுதான் கவனித்தேன். இனி நானும்கூட…
நீயின்றி அமையாது உலகு – 5
பெண்கள் மீதான ஈர்ப்பு என்பது எங்கிருந்து தொடங்கும் என யூகிக்கவே முடிவதில்லை. தான் ஆண் என்பதும் அவள் பெண் என்பதும் புரிகின்றபோதா? அல்லது பெண் என நினைக்கும்போதே ஆணின் மனது ஈர்ப்புக்குள்ளாகிறதா என புரியவில்லை. பெண்கள் மீது ஆண்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு போலவே பெண்களுக்கும் ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். ஒருவேளை அப்படியெல்லாம் செய்யாதோ?…
காற்றைப்போல், நான் எழுவேன் – மாயா ஏஞ்சலோ கவிதைகள்
இல்லாத திசைகள் 6 – நெருப்பு ஆசிரியர்
நெருப்பு ஆசிரியர் பொறுப்பெடுத்த பின் அப்பத்திரிக்கையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. சிறிய அறைக்குள் இருந்த வாரப் பத்திரிகை அலுவலகத்தைப் பக்கத்தில் இருந்த கட்டடத்திற்கு மாற்றினார்கள். பெரிய இடத்தில் வசதியாக இருந்தது. அதுதான் நெருப்பு ஆசிரியரின் குணம். யாரோடும் ஒட்டாமல் தனித்தீவு அமைக்கும் குணம். மலேசிய நண்பன் நாளிதழில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் நெருப்பு ஆசிரியர்.…
அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 2
Magic mirror on the wall, who is the fairest one of all? ஒரு நாள் வீட்டின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். அந்த அறையில் இரண்டு அலமாரிகள் உள்ளன. ஒன்றில் முழு கண்ணாடி பதிக்க பட்டிருந்தது. இரண்டு அலமாரிகளிலும் சேலைகள்தான் மடித்து வைக்க பட்டிருந்தன. எப்போதும் விடுமுறைக்கு வீட்டுக்கு போனாலும் நான்தான்…
அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 1
‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’ ‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’ என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன். அடுத்து நண்பர்கள்…
இல்லாத திசைகள் 4 – பழிவாங்கும் படலம்
என் 21-ஆவது வயதில் அந்த வாரப்பத்திரிகையில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால் அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அது தானாக நடந்தது. அரசாங்கம் நடத்திய ஒரு மாத தமிழ்ப்பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நான் வேலை செய்த வாரப்பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தார். அவர் இப்போதிருக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கெல்லாம்…
இல்லாத திசைகள் 3 – காத்திருத்தல்
எனக்கும் என் மனைவிக்கும் பெரும்பாலும் நிகழ்கிற சண்டைக்குக் காரணம் சொன்ன நேரத்துக்கு வந்து சேர்வதில்லை நான் என்பதுதான். பெரும்பாலும் அவரை காக்க வைத்து விடுவேன். அதனாலையே சண்டை வந்துவிடும். தப்புதானே… அதுவும் காத்திருக்கும் கோடூரம் அறிந்த நானே காக்கவைப்பது பெரிய தப்புதானே. கோலாலம்பூருக்கு வந்திறங்கிய முதல் நாள் இரவு காத்திருப்பை மறக்க முடியுமா? கோலாலம்பூருக்கு வந்து…
இல்லாத திசைகள் 2 – கோலாலம்பூர் எனக்குத் தண்ணீர் காட்டியது
தண்ணீர்… இது இல்லாமல் ஏதும் உண்டா. என் இளமைக் காலங்கள் தண்ணீர் நிறைந்ததாய்த்தான் இருந்தது. எனக்கு விபரம் அறியும் வயதில் என் அப்பா அம்மா பால் மரம் சீவிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களோடு செல்வேன். அம்மாதான் மரம் சீவுவார். அப்பா நல்ல நிழல்தரும் மரமாக பார்த்து அதற்கடியில் பாய்விரித்து தூங்கி விடுவார். அம்மா பாலைச் சேகரித்து…