
மலேசிய நவீன இலக்கிய உலகில் கவனத்திற்குரிய கவிஞர் ரேணுகா. மனதிற்கு உவப்பான பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அதிகப்படியாக கவிதைகளை அரசியல் சார்ந்து; சமூக சூழல் சார்ந்து எழுதியிருக்கிறார். பொதுவாகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் சார்ந்த நிகழ்வுகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் படைப்புகளில் எழுதுவதற்குத் தயங்குகிற சூழலில் ரேணுகா துணிந்து எழுதியிருக்கிறார். வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார். “என்னை நாயென்று கூப்பிடுங்கள்”…