
பொதுவாக எந்தக் கவிஞரையும் யாரும் நிராகரித்துவிட முடியாது. ஏதாவது ஒரு சமயத்தில் அசாத்தியமான கவிதையை எழுதியவர்களாக, எழுதக்கூடியவர்களாகவே எல்லாக் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஏகப்பட்ட தொகுப்புகள் ஆண்டுதோறும் வெளிவந்தபடி இருக்கின்றன. அவற்றுக்கு தவறாமல் முன்னுரைகளும் மதிப்புரைகளும் தாராளமாகக் கிடைத்து விடுகின்றன. கவிதைகளை விமர்சிக்கத்தான் ஆளைக் காணமுடிவதில்லை. இன்றைய கவிதை இயக்கச் சூழலில் இது மிகப்பெரிய குறையாக இருக்கிறது.…