வல்லினம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் நடைப்பெறுகிறது.
திகதி: 1.11.2015 (ஞாயிறு)
நேரம்: 1.00pm
இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur
இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு:
மண்டை ஓடி (சிறுகதை தொகுப்பு) – ம.நவீன்
அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை (கட்டுரை தொகுப்பு) – அ.பாண்டியன்
துணைக்கால் (கட்டுரை தொகுப்பு) – விஜயலட்சுமி
ஒளி புகா இடங்களின் ஒலி (பத்திகள்) – தயாஜி
இந்நிகழ்வுக்கென தமிழகத்திலிருந்து பல முக்கியமான ஆளுமைகள் வருகின்றனர்.
1. ஆதவன் தீட்சண்யா – (புதுவிசை இதழின் ஆசிரியர். எழுத்தாளர், கவிஞர்)
இவரது அகப்பக்கம்: http://aadhavanvisai.blogspot.com/
2. எழுத்தாளர் இமையம் – (கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங் கதெ – போன்ற பல முக்கிய நாவல்களை எழுதியவர்.)
இவரது அகப்பக்கம்: http://imayamannamalai.blogspot.com/
3. வ.கீதா – (எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.)
4. ஓவியர் டிராட்ஸ்கி மருது (தமிழகத்தின் மிகச்சிறந்த ஓவியர்)
மேலும் நிகழ்வை சிறப்பிக்க இம்முறை ‘தோட்டமும் வாழ்வும்’ என்ற கருப்பொருளில் மலேசிய ஓவியர் சந்துருவின் ஓவியக்கண்காட்சி இடம்பெறுகிறது.
அனைத்து விபரங்களுக்கும்: ம.நவீன் 0163194522 அல்லது தயாஜி 0149005447
(இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு முக்கியம்)
நிகழ்வு சிறப்புற நடைபெற எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
வல்லினம் கலை இலக்கிய விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
நிகழ்வு சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்