செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய மற்றும் தமிழக நாவல்கள் தொடர்பான மனப்பதிவுகளை முன்வைத்து ம.நவீன் எழுதியுள்ள ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் ம. நவீன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார்.
கேள்வி : உங்களின் இந்த மூன்றாவது நூல் குறித்து கூறுங்கள்?
ம.நவீன் : படைப்பிலக்கியம் குறித்த வாசிப்பு அனுபவங்கள் விர்ந்த தளத்தில் நடக்கவில்லை என்பது நமது நெடுநாளைய குறைபாடு.
அதிலும் மலேசியப் படைப்பிலக்கியம் தொடர்பான விரிவான பகிர்வுகள் நம் மத்தியில் நடப்பதில்லை. ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு ‘ என்ற இந்தத் தொகுப்பின் வழி மலேசிய மற்
கேள்வி : உங்கள் நூலின் வழி இந்தச் சமூகத்தைவிட்டு தொலைவாகி போன நாவல் வாசிப்பை மீட்டுக்கொணர முடியுமா?றும் தமிழக நாவல்கள் குறித்த எனது பார்வையை முன்வைத்துள்ளேன். இதை விமர்சனம் எனச் சொல்லும் துணிவு எனக்கு இல்லை. எனது ரசனை சார்ந்து கருத்துகளை முன்வைத்துள்ளேன்.
ம.நவீன் : நாவல் வாசிப்பு இன்னமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது ரமணி சந்திரன், வைரமுத்துவோடு நின்றுவிடுவதுதான் வருத்தம். நான் இந்த நூலின் வழி தீவிரமான ஒரு வாசிப்பு தளத்தை நோக்கி சக வாசகர்களை நகர்த்தும் முயற்சியில் இயங்குகிறேன். அதேபோல மலேசிய நாவல் இலக்கியத்தின் போதாமைகளையும் சுட்டிக்காட்ட முனைகிறேன்.
கேள்வி : நாவல் வாசிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும்?
ம.நவீன் : எனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல வாசிப்பு ஓர் அகம்பாவத்தின் செயல்பாடாக இருப்பதில் எந்த நன்மையும் இல்லை. நவீன வாசிப்பு முறை என்பது ஆசிரியனோடு எல்லா நிலைகளிலும் ஒத்துப்ப்போவதில்லை. மாறாக விமர்சனத்துடன் ஒரு பிரதியை அணுக வேண்டியுள்ளது.
கேள்வி : இந்த நூலிலுள்ள நாவல்கள் அனைத்தும் உங்கள் தனிப்பட்ட இரசனையின் தேர்வா அல்லது தமிழ் இலக்கியச் சூழலில் பேசப்பட்ட நாவல்களா?
ம.நவீன் : தனிப்பட்ட ரசனையில் தேர்வு செய்ய மிக விரிந்த வாசிப்பு தேவை. அதாவது தமிழ்ச்சூழலில் வெளிவரும் அனைத்து நாவல்களும் வாசிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும். நான் தமிழ்ச்சூழலில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட நாவல்களை மறுவாசிப்பு செய்கிறேன். மிகையாக போற்றப்பட்ட சில நாவல்கள் என் வாசிப்பில் மிகச்சாதாரணவையாக உள்ளன. அது குறித்து இந்நூலில் பகிர்ந்துகொள்கிறேன். அதோடு மலேசிய நாவல்களில் கவனிக்கப்பட வேண்டிய நாவல்களையும் முன்வைத்து பேசுகிறேன். நாவல் வாசிப்பு ஒரு வகை கூட்டு வாசிப்பின் மனநிலையில்தான் தொடர்கிறது. பல்வேறு விமர்சகர்களின் கருத்துகளை ஏந்திகொண்டு வாசிக்கும் மனநிலையிலிருந்து முற்றிலுமாக விலக முடியவில்லை.
கேள்வி : உங்கள் நூல் சமுகத்தில் எத்தகையதொரு பாதிப்பைக் கொடுக்கும் என நினைக்கிறீர்கள்?
ம.நவீன் : எந்த பாதிப்பையும் கொடுக்காது. சிக்கலானதாகக் கருதப்படும் வாசிப்புக்கு இந்நூல் துணை நிர்க்கலாம். ஒரு நாவலை வாசிக்க பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. இளம் வாசகர்களுக்கு சிக்கலான சில நாவல்களை வாசிக்க என் அணுகுமுறை ஒரு வழிக்காட்டியாகக் கூட இருக்கலாம். நாவலை புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ள முரண்களுக்கு ஒரு சான்றாகவும் இருக்கலாம். மிக முக்கியமாக நம் நாட்டில் எழுதுவதால் மட்டுமே பெரும் இலக்கியவாதிகளாக தூக்கி நிறுத்தப்படுபவர்களின் பிம்பங்கள் கொஞ்சம் தகர்க்கப்படலாம்.
கேள்வி : பெரும்பாலும் இன்றைய சூழலில் வீட்டுப்பெண்மணிகள் ரமணிசந்திரன், ராஜேஸ்குமார் போன்றவர்களின் நாவல்களைத்தான் உடனுக்குடன் வாசிக்கிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அது போன்ற நாவல்கள் வாரம் இரண்டு என வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் நூலில் நீங்கள் எழுதியிருக்கும் நாவல் விமர்சனங்கள் இதுபோன்ற நாவல்களை எப்படி பரிசீலிக்கின்றன?
ம.நவீன் : திட்டமிடப்பட்ட ஒரு வடிவத்தில் வாசக ருசிக்காகவும் அவர்களின் மலிவான ரசனைக்குத் தீனிபோடவும் உருவாக்கப்படும் இவ்வித பிரதிகள் குறித்து எவ்வித கருத்தையும் இந்நூலில் கூற வில்லை. அவற்றிற்கு தமிழ் இலக்கியச் சூழலில் எவ்வித மதிப்பும் இல்லை. அவை குறித்தும் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
கேள்வி : இந்த நூல் உருவாக்கத்திற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்கள்? இந்தக் காலக்கட்டத்தில் இந்த நூலின் அவசியமும் தேவையும் என்ன?
ம.நவீன் : முதலில் ஜெயமோகன். அவர் மலேசியாவில் நாவல் இலக்கியம் குறித்து முன்வைத்த விமர்சனமே நல்ல நாவல்களை முன்வைத்து பேசுவது சமகால படைப்பாளியின் கடமை எனப் புரிந்தது. அதோடு ஸ்வாமி பிரமானந்த சரஸ்வதி மற்றும் டாக்டர் சண்முகசிவாவின் தொடர் ஊக்குவிப்பும் விமர்சனமும் நான் தொடர்ந்து எழுத காரணமாக இருந்தது. ஜெயமோகனும் தனது வலைதளத்தில் எனது நாவல் தொடர்பான பார்வை குறித்து தனது கருத்துகளையும் முன்வத்தது உற்சாகம் கொடுத்தது. ஒரு தீவிரமான வாசிப்பின் வழி மலேசிய நாவல்களின் தன்மைகளையும் அதன் போக்குகளையும் அயலக இலக்கிய வாதிகள் முன்னிலையில் வைக்க வேண்டிய அவசியம் உண்டு. அதன் மூலம் அவர்கள் தேர்ந்தெடுத்து நாவல்களை வாசிக்க முனைவர். இந்நூல் அப்பங்கை ஆற்றுவதே அதன் முதன்மை பங்காகக் கருதுகிறேன்.
சந்திப்பு : தயாஜி