மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு மற்றும் இலக்கியச்செயல்பாடுகளில் அவரது பங்களிப்புக்காக இந்தச் சிறப்பு விருது வழக்கப்படுவதாக தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்துள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது.
சிறுகதை, கவிதை, கட்டுரைகள், நேர்காணல்கள், பத்தி எழுத்து எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் ம.நவீன் வல்லினம் இலக்கியக் குழு மூலம் சிற்றிதழ்கள், ஆய்விதழ்கள், ஆவணப்பட இயக்கம், பயிலரங்குகள், கண்காட்சிகள், நூல் பதிப்பு, வீதி நாடகம் போன்ற கலை, இலக்கியம் தொடர்பான பல முயற்சிகளை மலேசிய நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். (ம.நவீன் அகப்பக்கம்)
தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது தமிழ் மொழி, இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஈழத்தின் மதிப்புமிக்க கல்வியாளர், இலக்கிய விமர்சகர் A.J.கனகரத்னம். தமிழ் மொழி, இலக்கிய ஆய்வாளரான சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ஷாசா எபெலிங் (Sascha Ebeling), தமிழ் இலக்கியத் தோட்டத்திற்குப் பேராதரவு அளித்துவரும் தமிழ் மொழி ஆர்வலர்களான திரு & திருமதி ஆசீர்வாதம், சோ.பத்மநாபன், முனைவர் ப்ரெண்டா பெக், தமிழறிஞர், கல்வியாளர் டாக்டர் டேவிட் ஷூல்மன் இரா. இளங்குமரன் மறைந்த கவிஞர் செழியன், தி. ஞானசேகரன், முனைவர் நிக்கோலப்பிள்ளை சேவியர் ஆகியோருக்கு இதுவரையில் இந்தச் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் 2001ம் ஆண்டு டொரோன்டோவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்காகப் பங்காற்றி வருகிறது. தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பு, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பயிலரங்குகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது என பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தமிழ் மொழியின் வளர்ச்சியில் இவ்வியக்கம் பங்காற்றுகிறது. இயல் விருதுடன், சிறந்த தமிழ்ப் படைப்புகளுக்கான விருதுகள், சிறப்பு விருது போன்றவற்றையும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிவருகிறது.
வாழ்த்துகள் நவீன். மிகச் சிறந்த ஒருவருக்கு முற்றிலும் பொருத்தமான விருது! நேர்மையான இயக்கங்கள் இருக்கவே செய்கின்றன என்பதில் வியப்பான மகிழ்ச்சி! கனடா பயணக் கட்டுரை நிச்சயம் எங்களுக்கு விருதாக அமையும். ஆவலுடன் நான்.
கலைசேகர்
மிகமகிழ்ச்சி
நல்வாழ்த்துக்கள்
Valthukal Sir
இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துகள். நமக்கு கிடைத்த பெருமை.
எம். பிரபு, பெந்தோங்.
வாழ்த்துக்கள் நவீன்! எத்துறையிலும் தீவிரமும் உண்மையும் உழைப்பும் மட்டுமே
உயரங்களை எட்ட மிகச் சிறந்த வழி என்பதை நிரூபிக்கும் மேலும் ஒரு சான்று! வாழ்துக்கள்!
சீ.முத்துசாமி
மகிழ் ச்சி நவின்….
வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி..
வாழ்த்துகள் நவீன்…
Proud of you Navin. All the best.
வாழ்த்துகள்நவீன்!
Valthukkal
Valthukkal . Melum pala viruthukal pera manamaarntha valthukkal.
வாழ்த்துகள் நவீன். மகிழ்ச்சியாக இருக்கிறது
Naveen deserves this award. My exposure to Naveen s book s are limited.I came to know about him through Keysmohan My hearty congratulations.
இந்த விருதுக்கு மிகவும் தகுதியானவர் திரு.நவீன், இலக்கிய உலகில தனக்கென்று ஒரு பாதையை அமைத்து அதில் முழுகவனத்தையும் செலுத்தி , சிறந்த பங்கினை ஆற்றி வருகினறார், சிறந்த உலக தமிழ் படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களை கௌரவித்துவரும் கனடா தமிழ் இலக்கிய தோட்ட அமைப்பிற்க்கு நன்றி, இவ்விருது நவீன் அவர்களின் இலக்கிய தேடலுக்கு நிச்சயம் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, திரு.நவீன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நவீன் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
தகுதியானவரை தேடி விருது வந்திருக்கின்றது. வாழ்த்துகள் சார்.