நேர்காண‌ல்

எதிர்

எதிர் வலைப்பக்கத்தில் என் நேர்காணல் இடம் பெற்றுள்ளது. சேனனுக்கும் எதிருக்கும் கருத்தைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

http://ethir.org/?p=1039

இலக்கியவாதிக்கு கூர்மையான அரசியல் உணர்வு தேவை – ம. நவீன்

மலேசியத் தமிழ் இலக்கியப் பரப்பில் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் அடையாளம் ம. நவீன். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து என இடையறாது எழுதிக்கொண்டிருக்கும் நவீன் ‘வல்லினம்’ (vallinam.com.my) இணைய இதழின் ஆசிரியராகவும் ‘முக‌வ‌ரி’ எனும் மாத‌த்திற்கு இரு முறை வெளிவ‌ரும் இத‌ழின் ஆசிரியராகவுமிருக்கிறார். ‘வல்லினம்’ பதிப்பகத்தின் மூலம் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த‌ ஆண்டுத் தொட‌க்க‌த்தில் சிலாங்கூர் மாநில‌ அர‌சால் வழங்கப்ப‌ட்ட‌ தமிழ் மொழிக்கான ‘இள‌ம் க‌விஞ‌ர் விருது’ நவீனுக்குக் கிடைத்த‌து. ‘தாமான் மெலாவாத்தி’ த‌மிழ்ப்ப‌ள்ளியில் த‌மிழ் ஆசிரிய‌ராக‌ப் பணிசெய்யும் நவீனுடனான இந் நேர்காணல் மின்னஞ்சலூடாகவும் தொலைபேசி வழியேயும் நிகழ்த்தப்பட்டது.

– ஷோபாசக்தி
18.07.2010 Continue reading

என‌து நேர்காண‌ல்

மாற்றுப்பிர‌தி எனும் த‌ள‌த்தில் ந‌ண்ப‌ர் றியாஸ் குரானா நேர்காண‌ல் ஒன்று செய்தார். என‌து சில‌ க‌ருத்துக‌ளைப் ப‌கிர‌ அப்பேட்டி வாய்ப்பாக‌ இருந்த‌து.
ந‌ன்றி,
ம‌. ந‌வீன்

01.  உங்களை கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் தோழர்…

த‌மிழ்ப்ப‌ள்ளி ஆசிரிய‌னாக‌க் க‌ட‌ந்த‌ 5 ஆண்டுக‌ளாக‌ப் ப‌ணியாற்றுகிறேன். ஆசிரிய‌ர் தொழிலைப் பிடித்துத் தேர்வு செய்ய‌வில்லை. எதிர்கால‌ ம‌லேசிய‌ ச‌ந்த‌தியின‌ரையும் இந்த‌க் க‌ல்வித் திட்ட‌ம் சிந்திக்கும் ம‌னித‌ர்க‌ளாக‌ உருவாக்கும் வ‌கையில் அமைக்க‌ப்ப‌ட‌வில்லை. உய‌ர்ர‌க‌க் கூலிக‌ளை வேண்டுமானால் உருவாக்க‌லாம்.இந்நிலையில் ம‌லேசிய‌ அடித்த‌ட்டுத் த‌மிழ் ம‌க்க‌ளின் ம‌ன‌ம் செய‌ல்ப‌டும் வித‌த்தை அறிந்து கொள்ளும் க‌ட‌மை ஓர் எழுத்தாள‌னாக‌ என‌க்கு உண்டு என‌ ந‌ம்புகிறேன். தீவிர‌மாக‌ச் சிந்திக்கும் போக்கு உள்ள‌ ஓர் ச‌முதாய‌த்தை உருவாக்க‌த் த‌மிழ்ப்ப‌ள்ளி என‌க்கு ஓர் க‌ள‌மாக‌ உள்ள‌து. ஏற‌க்குறைய‌ நான் செய‌ல்ப‌டும் இல‌க்கிய‌ம், இத‌ழ், அக‌ப்ப‌க்க‌ம் என‌ அனைத்துமே இந்த‌ச் சிந்த‌னையை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌தே. Continue reading