அன்னா கரீனினா

பேரிலக்கியங்களும் பேருரைகளும்

சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய இலக்கியங்கள் குறித்த உரையாடலை உருவாக்க முயன்று அதைத் தொடங்க முடியாமல் போக கோவிட் பெருந்தொற்று காரணியாக அமைந்தது. மலேசியாவில் உரைநடை இலக்கியம் 1916இல் (மீனாட்சி அல்லது மலாய்நாட்டு மங்கை) தொடங்கிவிட்டது. 1923இல் ‘பொதுஜனமித்திரன்’ நாளிதழில் வெளிவந்த ‘பாவத்தின் சம்பளம்’ இவ்வட்டாரத்தில் முதல் சிறுகதையாகக் கருதப்படுகிறது. என் வாசிப்பில் நவீன இலக்கியத்தின் அழகியலை அறிந்த படைப்புகள்  50களில் மெல்லத் தலைகாட்டத் தொடங்கி 70களில் உச்சம் பெற்றன.

Continue reading →