Author: குமார். எம். கே.

உயிர்க்காடு -இறுதி பாகம்

uyir 2

திடுமென ஒலித்த ஒரு காரின் ஹார்ன் சத்தம் அவளை எழுப்பியது. ரோட்டைத் தாண்டி ஓடிய, ஒரு சிறுவிலங்கு அந்த வண்டியிலிருந்து தப்பி, அவள் இருக்கும் குகையை நோக்கிப்புகுந்து மறைந்தது. ‘இன்னும் ஏன் சில்வன் வரவில்லை என்று யோசனையுடன் ஆழ்ந்தாள் மெலிசா. இரவு பத்தரை மணி அளவில், அவளுடைய கைத்தொலைப்பேசிக்குச் செய்தி அனுப்பியிருந்தான் சில்வன். ‘இரவு 4…

நல்லிணக்கம்

mkk 1

இன நல்லிணக்க மேம்பாடு மற்றும் ஒற்றுமையுணர்வை வலியுறுத்தும் விதமாய் சிங்கப்பூரின் அரசாங்க நிறுவனமொன்றில் உயர்ந்த பதவியிலிருக்கும் ராசய்யா டேவிட் வீட்டிற்கு, அன்று காலை பத்து மணியளவில் செம்பவாங்க் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. குங் சங் கூவாங் அவர்கள் வருவதாயிருந்தது. வரலாற்றுச்சிறப்பு மிக்கதாய் டேவிட் கருதியதால் அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்து குளித்து முடித்து பட்டுவேட்டி சட்டையோடு…

உயிர்க்காடு

uyirkadu 1

“நான் கீழேதான் போகிறேன், எலியாஸ் என்னைப் பொதுத் தொலைபேசியிலிருந்து, அவனுக்குப் போன் போடச்சொல்லியிருக்கிறான். இரு, வந்துவிடுகிறேன், அதற்குள்,  முடிந்தால் சூசனை இங்கிருந்து அனுப்பிவிடு. அவள் இங்கு இருந்தால், நடப்பது யாவற்றையும் அவள் தெரிந்துகொண்டால், உனக்கும் எனக்கும் எல்லாவிதத்திலும் பிரச்சனைதான்” என்று எரிந்து விழுந்தான் ரானே. “அவளை விடு, அவள் அதிகாலையில்தான் நன்றாகத் தூங்குவாள். அந்த அறையின்…

உயிர்க்காடு – 2

kumar 4

வேறு வழியில்லை, தான் கிளம்பித்தான் ஆகவேண்டும்’ என்று முடிவுசெய்தவுடனே, மனதளவில், யு.எஸ்.எஸ் ட்ரூமேனை, அவனேகூடத் தேற்றிக்கொள்ள முடியாதிருந்தான். இந்தவாழ்க்கையை சில மாதங்களுக்காகவது வாழ்ந்துபார்க்க வேண்டும் என்றுதான் அங்கு வந்திருந்தான் அவன். அங்கு வந்து, மூன்று வாரங்களாகிவிட்டன. மூன்று வாரங்களுக்குள் நான்கு மூத்த மருத்துவர்களும் ஆறு பயிற்சிமருத்துவர்களும் எட்டு செவிலியர்களும் அவனைச் செய்யாத பரிசோதனை எல்லாம் செய்து…

உயிர்க்காடு

kumar-3

ரானே திகைத்தான். என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. தலையை பெரிய உருளைக்குள்ளே விட்டு மாட்டிக்கொண்டது போல உடலும் மனமும் வலித்துக்கிடந்தன. இந்தநாள், நல்ல நாளாக விடியவில்லை. லேசாகத் தூறிக்கொண்டிருந்த வானம், மென்புழுக்கத்தை ஏற்றியதும் வியர்வையும் அதிகமாகியது. ‘எப்படி இதைச் சரிசெய்யப்போகிறோனோ’ என்று மிகவும் பதட்டமானான். மனதின் உள்ளுக்குள் ஒரு சுடுநீராவிக்குடிலுக்குள் அமர்ந்துள்ளது போலிருக்க, ’நான் யாருக்கும்…

மோர்கன் என்றொரு ஆசான்

ilappu-150x150

மோர்கன் த/பெ பெருமாளுக்கு ஏற்பட்ட எரிச்சலில் எதிரில் இருக்கும் கணினித்திரையை காலால் எத்தவேண்டும் போலிருந்தது. அசைவின்றி நிற்கின்ற அத்திரை ஏற்படுத்திய கோபத்தைவிட, செந்திலைக் கூப்பிட்டல்லவா அதைச் சரி செய்யவேண்டும் என்றபோது கடுப்பு எகிற, கதவை எத்திவிட்டு வெளியில் வந்து ஒரு சிகரெட்டை எடுத்தார். மோர்கன் தமிழர்தான். பிறந்தது செம்பவாங் நேவி குடியிருப்பில். அப்பா பிரிட்டிஷ் நேவியில்…

எம்.கே. குமார் கவிதைகள்

கிணற்றைத் தாண்டி கரையில் ஏறுகிறது நிலவு தொடந்துண்டு கொழுத்த தவளை இயலாமையில் நகர்கிறது.     ஒற்றைக்குரலில் ஓங்கிக் கதருகையில் செவியிழந்தவனின் விழிபோல விதிர்ச்சியாய்க் கிடக்கிறது இரவு.     அண்மையில் உதித்திருந்த உண்மை பழைய பொய்களின் எஞ்சியிருக்கும் சாம்பல்களுக்கிடையில் படாதபாடு படுகிறது. சாம்பலிலும் நழுவி ஓடுகிறது ஒரு துளி.     விஷத்தில் இறங்குதல்…