
“எத்தனை முறை சொல்லிவிட்டேன், உனக்கு வலதுமூளை செயல்படவில்லையா இல்லை இடதுமூளையா? இல்லை இரண்டுமே இல்லையா?” லீனா காம்பிலிருந்து நேராக நிறுத்தியிருந்த ஒரு பூ உதிர்வதைப்போல ஒரே நொடியில் படக்கென்று காலையெடுத்து இடதுபுறம்வைத்து குதிரையின் மீதிருந்து கீழே இறங்கினாள்.