Author: வல்லினம்

சு.வேணுகோபால் பதில்கள்

உங்களின் தமிழ்ச்சிறுகதை பெருவெளி நூலுக்கு கே.என் செந்திலின் விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?  பூவேந்தன் அன்புடன் பூவேந்தனுக்கு, அறத்திற்குப் புறம்பான திட்டமிட்ட வக்கிற நாடகங்களை காலம் பொசுக்கி விடும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தங்களின் ஆன்மிகம் என்ன? மத நம்பிக்கை உண்டா உங்களுக்கு?…

“பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன” டாக்டர் ஜெயக்குமார்

காலஞ்சென்ற கிளந்தான் மாநில முதல்வர் நிக் அப்துல் அசிஸ் அவர்களுக்குப் பிறகு எளிமையான வாழ்க்கை மூலம் அரசியல் சூழலில் கவனத்தைப்பெற்றவர் டாக்டர் ஜெயகுமார். எளிய வீடு, வாகனம் என்பதோடு ஆண்டுதோறும் அவர் அறிவிக்கும் தனது சொத்துடமை பிரகடனம் மலேசிய அரசியல்வாதிகளில் யாரும் கடைப்பிடிக்காத கொள்கைகள். 2008 ஆம் ஆண்டு மலேசிய சோசலிசக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான…

“உலகுக்கு நான் விட்டுச்செல்வது எனது நூல்களைத்தான்” – பி.கிருஷ்ணன்

சிங்கப்பூரின் முன்னோடி மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான  பி. கிருஷ்ணன் இலக்கியப் பணிக்காக சிங்கப்பூரின் உயரிய விருதான கலாசார பதக்கம் முதல், தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது எனப் பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1953ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்பகால நிறுவனராகவும் துணைச் செயலாளராகவும் இருந்த…

சடக்கு அறிமுகமும் சீ.முத்துசாமி படைப்புலகமும்

வல்லினம் சம கால இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் வரலாறு மற்றும் ஆவணத் தொகுப்பிலும் ஊக்கத்துடன் செயல்பட்டு வரும் இயக்கம். தொடர்ந்து ஆவணப்படங்களை வெளியிடுவதுடன்  தகுந்த படைப்பாளிகளைக் கௌரவிக்கவும் அவர்களின் படைப்புகளை தீவிரமான வாசிப்புப்  பரப்புக்கு முன்னெடுத்துச் செல்லவும்  வல்லினம் முனைப்பு காட்டி வந்துள்ளதை மலேசிய இலக்கியத்தை ஊன்றி கவனித்து வரும் யாரும் மறுக்க முடியாது.…

வாசகர் கடிதம்

அன்புள்ள நவீனுக்கு, பேச்சி கதை வாசிப்பின் முடிவில்,  புதிதாக தீட்டப்பட்டு அதன் தணல் கூட குறையாத கத்தி, முதல் பலியினை அறுத்து அதன் குருதியில் தோய்ந்த  உடனேயே, தன் கூர்நுனி கொண்டு பிரசவித்த பெண்ணின் மார்புக் காம்பில் நுண்துளையிட்டு, உறைந்து அடைத்த முலைப்பாலை, இளக்கி வெளிக்கொணர்ந்து, பிறந்த குழந்தைக்கு பருகக் கொடுத்த காட்சியை கண்டது போல…

“ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா

தமிழகத்தில் மிக நீண்ட காலம் விமர்சனத்திலும், ஆய்வுகளிலும் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் கௌதம சன்னாவைச் சந்திக்கும் வாய்ப்பு மலேசியாவில் கிடைத்தது. தமது ஆய்வுகளைக் களபணிகளின் மூலமே சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமுடைய அவரது ‘குறத்தியாறு’  இலக்கியச் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்த காப்பியம். மாணவர் பருவம் தொட்டு இடதுசாரி இயக்கத்தின் இணைத்துக் கொண்டு பணியாற்றியதுடன், சங்கம் என்னும்…

குண்டர் கும்பல் கலாச்சாரமும் தமிழ்ச் சமூக மெளனமும்

முன்னுரை மலேசியத் தமிழ்ச்சமூகம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் அவலங்களையும் சீர்கேடுகளையும், அதனால் ஏற்படும் வீழ்ச்சியையும் இந்த இயற்பியல்  விதியைச்சார்ந்தே ஒப்பிட முடிகிறது. அறிவியல், பொருளாதாரம், கல்வி, இலக்கியம் என எல்லாவற்றிலும் முன்னணி வகித்த தமிழர்களின் நிலையை இன்று  ஒரு வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாகத்தான் கணிக்க முடிகிறது. இந்த மாற்றத்தைச் சங்கத்தமிழ் மரபிலிருந்தெல்லாம் கணக்கெடுக்க வேண்டியதில்லை. கடந்த 200…

வல்லினத்தின் குறுநாவல் பதிப்புத்திட்டம் நாள் நீட்டிப்பு

மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்குத் தனது பங்களிப்பைத் தொடர்ந்து ஆற்றிவரும் வல்லினம் இவ்வருடம் குறுநாவல் பதிப்புத்திட்டத்தில் காலக்கேடு 28 பிப்ரவரி 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத்திட்டத்தின் மூலம்: பதிப்பிக்கப்பட்ட குறுநாவல்கள் உலகம் முழுதும் உள்ள தமிழ் வாசகர்கள் மத்தியில் சென்று சேரும். நூலாக்கப்பட்ட குறுநாவல்களை ஒட்டிய தொடர் கலந்துரையாடல்கள் நாடு முழுவதும்…

விஷ்ணுபுரம் விருது 2017

2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16 ஆம்தேதி காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 ஆம்தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி…

சீ.முத்துசாமி : ரப்பர் விதைகளுடன் விளையாடும் கலைஞன்.

யு.பி தோட்டத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் பெரியாற்றின் மேல் பரப்பில் விரிந்திருக்கும் மரக்கிளையில் இருந்து குதித்து, எல்லா சிறுவர்களும் ‘சொரப்பான்’ பாய்ந்துகொண்டிருக்க கரை ஓரமாக நீந்தியபடியே பாய்ந்த வேகத்தில் தன் நண்பர்கள் ஆற்றின் ஆழம் சென்று மீள்வதை  ரசித்துக்கொண்டிருந்த சிறுவன்தான் முத்துசாமி. ஆற்றில் ஆழ நீந்துவதில் பயம் இருந்தாலும் அதில் கால்களை நனைக்காமல் அவரால் இருக்க முடிவதில்லை.…

உண்மைகளை மறைக்க என் புனைவுகளை நான் அனுமதிப்பதில்லை!

கேள்வி: உங்கள் தொடக்க கால வாழ்வைப் பற்றி கூறுங்கள். அ.ரெங்கசாமி: தந்தை தாயார் எல்லாம் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் 1927-ல் இந்நாட்டிற்கு வந்தார்கள். அப்போது பெற்றோருடன் அண்ணனும் அக்காவும் வந்திருந்தார்கள். 1928இல் இன்னொரு அண்ணன் இங்கு பிறந்தார். 1930-ல் நான் பிறந்தேன். அதன் பிறகு என் தங்கை பிறந்தாள்.அப்பாவும் அம்மாவும் பால்மரம் சீவும் தொழிலாளிகளாக…

வல்லினம் கலை இலக்கிய விழா 9 : ஒரு பார்வை

கடந்த 17.9.2017 (ஞாயிறு) கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் வல்லினம் குழுவினரின் வருடாந்திர நிகழ்ச்சியான கலை இலக்கிய விழா ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்றது. சரியாகப் பிற்பகல் 2.00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 280க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கென தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த எழுத்தாளர் கோணங்கியுடன் சிங்கையிலிருந்தும் பல இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.…

வல்லினம் 100 : சர்ச்சைகள், கேள்விகள், விவாதங்கள்

தமிழ் நூல்களைப் பதிப்பித்தல், அதனை விற்பனைக்குக் கொண்டு வருதல் போன்றவை மலேசிய இலக்கியச் சூழலில் ஆபத்தான காரியங்களாகவே பலகாலமாக வர்ணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் ஒருவர் பெரும் நஷ்டங்களைச் சந்திக்க நேரும் எனவும் அதனை சரிகட்ட அரசியல்வாதிகள் அல்லது தனவந்தர்களை முன்னிலைப்படுத்துவதன் மூலமாகவே தமிழ் நூல் பதிப்புத்துறையில் இயங்குபவர்களும் எழுத்தாளர்களும் காக்கப்பட முடியும் எனவும்…