Author: உமா கதிர்

உப்பிலி

1 மேனேஜரிடம் முறையிட்டு நான்கைந்து நாட்களாகிவிட்டது. ஒன்றும் பதில் இல்லை. ஒருவேளை என் விருப்பத்திற்கு எதிராக அவர் முடிவு எடுப்பாரெனில் இங்கிருப்பதில் பயனில்லை. பேப்பர் போட்டுவிட்டு வேறிடம் பார்க்கலாம். ஒரு மணி நேரத்தில் அடுத்த வேலையை வாங்கிவிடலாம். ஆனால் இங்கே இருக்கும் வசதிகளாலும் பழகிய முகங்களாலும் அவ்வளவு எளிதில் விட்டுக் கிளம்பிட மனம் ஒப்பவில்லை. பதினைந்து…

கடவுளின் மலம்

அப்பா வரும் நேரம் ஆயிற்று. அவர் வரும்போது படிப்பதுபோல பாவனை செய்தே ஆகவேண்டும். எனக்குத் தெரிந்த கலைகளில் முக்கியமானது படிப்பதுபோல பாவனை செய்வதுதான். ஈர வேட்டி சரசரவென தொடைகளில் உரச தோளில் துண்டும் இரு கைகளையும் மறைக்கும் விதமாக கை முழுக்க ஒற்றைச் செம்பருத்திப் பூக்களை முத்தாப்பிள்ளை தோட்டத்தில் பறித்துக்கொண்டு நடந்து வரும் நேரம் இது. நாள்…

ரொட்டி கோசம்

சரியாக எட்டுக்கு அலாரம் வைத்து எட்டரைக்கு விழிப்பதுதான் ஷாகுலின் வழக்கம். சில சமயங்களில் எட்டு நாற்பதுக்குப் போகும். அன்றைய தினம் தோற்றுப்போன அந்த பத்து நிமிடத்தை ஜெயிக்கவே முடிந்ததில்லை. அவனின் வேலை அப்படி. கீழே 24 மணி நேரமும் இயங்கும் சாப்பாட்டுக்கடை; மேலே படுக்கை. தினசரி வேலை. வருடம் முழுவதும் அதுதான் வாடிக்கை. ஒன்பது மணிக்கு…

பவா செல்லத்துரை: பேச்சாளனாக மாறிய எழுத்தாளன்

சாயங்கால வேளைகளில் நரிக்குறவர்கள் ஏரிக்கரைகளில் கொக்கு சுட்டு ஊர்த்தெருக்கள் வழியாக விற்றுச்செல்வார்கள். வாணலியில் வறுக்கப்பட்ட கொக்கு, நாரைகளுக்கு தனித்த சுவையுண்டு. அம்மா வாணல் சோறு என்று அடி தீய்ந்த வாணலில் துளி சோறு போட்டு பிறட்டித்தருவார்கள். எச்சுவைக்கும் ஈடானதல்ல அது. அப்படி ஒருநாள் தெருவழியாக குறவர்கள் கொக்கு விற்றுக்கொண்டு சென்றார்கள். இரண்டு முழ சணலை கொக்கின்…

”ப்ளூடூத் ஜோஹன்”

ப்ளூடூத் என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதும் அது தானாகவே வந்து ஜோஹனின் காதுகளில் அமர்ந்துகொண்டது. அது தரம் உயர்த்தப்பட்டு வெவ்வேறு வடிவம் எடுத்தாலும் உடனுக்குடன்  எப்படியாவது அவரை வந்தடையும் ரகசியம் யாரும் அறியாதது. அவற்றின் வழியேதான் நானாவித உலகப்பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டிருந்தார். சிலுவாருக்குள் நேர்த்தியாக நுழைக்கப்பட்ட சிவப்பு பனியனும் இடையில் பெல்ட்டும் அணிந்து புல்தரையில் அவர் பேசிச்செல்லும்…

“விரிந்த வாழ்வின் விசித்திர அனுபவங்களே எனக்கான கதைகள்” – கே.ராஜகோபால்

குறும்படங்களுக்கான போட்டி அறிவிப்பொன்றில்தான் கே.ராஜகோபால் எனும் இயக்குனரை முதன்முறையாக அறிந்தேன். நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரைப்பற்றி அறிந்துகொள்ள மேலும் தேடியபோது நிறைய குறும்படங்களையும் ஒரு திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார் என்றும் அறிந்தேன். அத்திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த நொடியில் அவர் எத்தனை முக்கிய படைப்பாளி என்பதை உணர முடிந்தது. அப்படம் “மஞ்சள் பறவை”…

வல்லினம் 100 நேர்காணல்கள் – ஒரு பார்வை

ஒரு விழாவை இத்தனை ஒழுங்கோடு ஒரு குழப்பமும் இல்லாமல் நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.இதற்கான ஏற்பாடுகளை நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்திருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன்.மூன்று மாதமிருக்கும், மலேசிய எண்ணிலிருந்து அழைப்பு. “நான் நவீன் பேசறேன்” என்றார். வல்லினம் நூறாவது இதழ் வரப்போகிறது. சிறப்பிதழாக கொண்டு வரலாம் என்று நினைக்கிறோம். சிங்கப்பூரிலிருந்து உங்களது பங்களிப்பாக படைப்புகள் அனுப்புங்கள்…

பிணை

ஞாயித்துக்கெழம முடிஞ்சி திங்கக்கெழம ஆச்சுன்னா எதாச்சும் ஒரு ஏழறையோடதான் ஆரம்பிக்குது என் பொழப்பு. ஊர்லருந்து வந்தமா ஒழுக்கமா வேல செஞ்சி பொழப்பமான்னு இல்லாம ஒனக்கு என்னா குடி வேண்டி கெடக்குது? வாரம் முழுக்க வேல செய்றேல்ல, ஒழுங்கா மூடிகிட்டு தூங்க வேண்டியதுதான, ஊர்ல ஆத்தா, அப்பன் கஸ்டபடறாங்க, தங்கச்சி, தம்பிகள கரையேத்தனும்னு சொல்லிதான வந்த? அதுக்குதான…