Author: கடலூர் சீனு

அன்னம்

கிளப்புகள் சில கூடி நடத்தும் மயானம் அது. ஊருக்கு மையத்தில் பழைய பேருந்து நிலையம் பின்புறத்திலேயே அந்த மின்தகனமயானம் அமைந்திருக்கும் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என்பது முதல் பார்வையில் தெரியா வண்ணம், எட்டு அடி உயர மென் நீல வண்ண  காம்புண்டு சுவர். உள்ளே அதை ஒட்டி வளர்க்கப்பட்ட பொன் கொன்றை…

திரிபுகளின் இருள்வழியே – சிகண்டி

நவீன இலக்கியத்தின் செயல்முறையை இப்படியும் வரையறுக்கலாம். எது ‘வெளியே’ சொல்லப்படாததோ, எது ‘வெளியே’ சொல்லக்கூடாததோ, எது ‘வெளியே’ சொல்ல முடியாததோ அதைச் சொல்ல வந்ததே நவீன இலக்கியம்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ராமாயண மகாபாரத காலம் துவங்கி பக்தி காலம் வரை, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் தொட்டு கம்ப ராமாயணம், பக்தி காலம் தொடர்ந்து…

அன்னை ஆடும் கூத்து

அறுவாள் வகைமைகள் பல. தென் தமிழக அடியாட்கள்  வசம் புழக்கத்தில் இருப்பது இரண்டு. ஒன்று வீச்சறுவாள் மற்றது வெட்டறுவாள். வீச்சறுவாளுக்கு படை மிரட்டி என்றொரு பட்டப் பெயரும் உண்டு. குறிப்பிட்ட வகையில் வீச்சறுவாள் கொண்டு வீசி எதிரியை ரத்தம் தெறிக்க (உயிருக்கு ஆபத்து இன்றி) விட்டு, அப்படித் தெறிக்கும் ரத்தம் கொண்டு, அந்த எதிரிக்கு பின்னால்…

வெண்முரசு: ஒரு தன்னுரை

2013 இறுதி. ஒருநாள் ஆசிரியர் ஜெயமோகன் அழைத்திருந்தார். வியாச பாரதத்தை, அந்தக் களத்தைத் தனது தேடல் வெளியாகக் கொண்டு, வெண்முரசு எனும் தலைப்பில் பெரும்புனைவாக எழுதப் போவதாகக் கூறினார். எனக்கு அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை. காரணம் வெளியே அறிவிக்கும் முன்பே வேறொரு நிகழ்வின் பொருட்டு அவர் மகாபாரதத்தை எழுதத் துவங்கிவிட்டார். துரியோதனன் பிறப்பு…

மலையும் மனிதர்களும்

[ 1 ] எண்ணி எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்ச பின்னாலும் இன்னும் வெட்டு  என்கிறானே வேலையத்த கங்காணி. உதையும் பட்டோம் மிதியும் பட்டோம் இங்க வந்து மானம் கெட்டோம் முட்ட முழிச் சாமி கையால் மூங்கில் கழி அடியும் பட்டோம்… [மலையகக் கூலித்தொழிலாளர்கள் நாட்டுப் பாடலொன்றின் சில வரிகள்.] பாரத நிலத்தை ஆண்டு சுரண்டிச்…

செல்லாத பணம் : அலைந்து எரிந்த நிலம்

பார்த்த இடமெங்கும் கண்குளிரும் பொன்மணல் என் பாதம் பதித்து நடக்கும் இடத்தில் மட்டும் நிழல் தேடி என்னோடு அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம். பாலை – பிரமிள் பொன்மணல் விரித்த பாலைவெளி. கண் தீண்டக் குளிர்ச்சி. கால் பதிக்க, தழல்த்தீண்டல். எல்லா உறவுகளும், அதைக் கட்டி வைக்கும் உணர்ச்சிகளும், அது வெளிக்காட்டும் உணர்வுகளும் இந்தப்…