Author: ஜி.எஸ். தேவகுமார்

இ. ஆ. சி அல்லது ஆ. இ. சி

அந்தக் கதையின் போலிக் கதையை என்னால் எழுத முடியும். ஆனால், என்னதான் இருந்தாலும் போலி போலித்தானே. டேனியல் கிரேக் ‘ஜேம்ஸ் பாண்ட்’ திரையில் கட்டியிருக்கும் ஒமேகா கைக்கடிகாரத்தில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் தொடக்க விலை மலேசிய ரிங்கிட் முப்பதாயிரம். ஆனாலும், அந்த ஒமேகா கைக்கடிக்காரத்தை ‘மூடா டாட் காம்’ என்ற மலேசிய இணையச் சந்தையில்…

இருள் நிரப்பி மிரட்டும் புனைவு

ம.நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவலில் ஒரு பகுதி அதிகம் என்னை ஈர்த்தது. அந்நாவலின் நாயகன் தீபன் அவசரத்தில் இன்னும் தயாராகாத கரிபாப்பை கடையிலிருந்து எடுத்து ருசித்துக் கொண்டே செல்கிறான். அதே நாளில் கரி மீ , நாசி ஆயாம், சென்டோல் என்று வயிற்று பசிக்கேற்பத் தின்றுக் கொண்டே மனதில் திட்டம் ஒன்றை சுமந்து நடக்கிறான். யோசித்துப்…

டோலிசாமி

மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் டோலி தூக்கும் தொழிலாளிகளால் மன்னரைப் போலவே மதிக்கப்பட்டார் ராமசாமி. பெயரே ராமசாமியாக அமைந்ததால் இன்னொரு சாமியை இணைத்து ‘ராமசாமி சாமி’ எனக் கூப்பிட சாமிகளின் வாய்க்கு அவ்வளவு பொறுமை இல்லை. தனியாகப் பட்டப் பெயரையும் அவருக்குச் சூட்டுவதில் எந்தச் சாமியும் மும்முறமாக இதுவரை முயன்றதில்லை. மூக்கு நீளமாக இருந்ததால் ஒருவருக்கு ‘மூக்கு…

பிரிட்னி

கோயில் வாசலில் சட்டையை முந்தித் தள்ளியத் தொப்பை வைத்திருக்கும் தன் நண்பன் மகேன் ராவோடு காத்திருந்தான் தமிழ்செல்வம். மௌன சிரிப்புடன், வெட்கப்பட்டு, கீழே குனிந்தப்படி அவனைக் கடந்தாள் தமிழ்செல்வி. அவளுக்கு முன்பே மாப்பிள்ளை யாரென்பது காட்டப்பட்டிருக்க வேண்டும். நேற்று இரவே இந்த தமிழைப் போலவே எல்லாத் தகவலையும் சமூக ஊடகங்களின் வழியாக அந்த தமிழும் ஆராய்ந்திருப்பாள்.…