Category: அறிவிப்பு

கலை இலக்கிய விழா 9

வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…

வல்லினம் போட்டி படைப்பு முடிவுகள்

வாசகர்களும் எழுத்தாளர்களும் வழக்கமாக வல்லினத்துக்கு அனுப்பும் படைப்புகளையே ஒரு போட்டியாக நடத்தி, அதன் வழி சிறந்த படைப்புகளை வெளிக்கொணரலாம் என்ற திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கம்பாரில், நண்பரும் வல்லினம் குழு எழுத்தாளருமான கங்காதுரையின் வீட்டில் நடந்த சந்திப்பில் முடிவானது. வல்லினம் போட்டி படைப்புகள் குறித்த அறிவிப்பு வந்தது முதலே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு…

சிங்கை ஆளுமைகள் பற்றிய ஆவணப்பட வெளியீடும் இலக்கியச் சொற்பொழிவும்

சிங்கப்பூரில் தமிழ்ச்சூழலில் இயங்கும் மூத்த எழுத்தாளர்கள் பி.கிருஷ்ணன், இராம கண்ணபிரான், மா.இளங்கண்ணன் ஆகியோரின் ஆவணப்படங்களைச் சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆதரவில் வல்லினம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் சிறப்பு வருகை புரிகின்றனர். ஆவணப்பட வெளியீட்டுடன் பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியச் சொற்பொழிவும் இடம்பெறும் இந்நிகழ்ச்சி…

வல்லினம் பொறுப்பாசிரியர் அ.பாண்டியன்

வல்லினம் தொடர்ந்து புதிய சாத்தியங்களை மலேசிய இலக்கியச் சூழலில் உருவாக்க முயன்றுவருகிறது. அவ்வகையில் கடந்த சில மாதங்களாக எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்கள் வல்லினம் இதழை வழிநடத்தினார். அவரது மேற்பார்வையில் வல்லினத்தில் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களும் தமிழகத்தில் புதிய தலைமுறையினரின் படைப்புகளும் சங்க இலக்கிய அறிமுகங்களும் அதிகம் இடம்பெற்றன. இது வல்லினம் இதழுக்குப் புதிய முகத்தைக்…

படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் 2017 – நாள் நீட்டிப்பு

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் வல்லினத்தில் பிரசுரமாகும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…

வல்லினம் குறுநாவல் பட்டறை & சிங்கப்பூர் இலக்கிய அறிமுகம்

வல்லினம் இவ்வாண்டு குறுநாவல் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குறுநாவல் பட்டறையைத் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் வழிநடத்துவர். இரண்டு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் மலேசிய சிங்கை எழுத்தாளர்கள் கலந்துகொள்ளலாம். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் குறுநாவல் இலக்கியம் வளர வல்லினம் சில செயல்திட்டங்களை வகுத்துள்ளது. அவ்வகையில் வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டத்திற்காக இந்தப்…

வல்லினத்தின் ‘படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம்’ 2017

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி வல்லினத்துக்கு அனுப்பப்படும் சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் நூல்கள்

6.1.2017 – இல் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் குழுவினர் கலந்துகொள்வர். வல்லினம் பதிப்பித்த நூல்களை புலம் புத்தக அரங்கில் வாங்கலாம்.

கலை இலக்கிய விழா 8 : தொடங்கும் முன் சில வரிகள்.

‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 8ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆளுமைகளும் ஆவணங்களும் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய ஐவரை ஆவணப்படம் எடுப்பதென முடிவானபோது அப்பட்டியலில் மா.சண்முகசிவா, சீ.முத்துசாமி, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான்…

கலை இலக்கிய விழா 8

வல்லினம் இலக்கியக் குழு வருடம்தோறும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் மிக உற்சாகமாக ஏற்பாடாகி வருகிறது. ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனத் தலைப்பின் கீழ் மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது, அரு.சு.ஜீவானந்தன், கோ.புண்ணியவான் ஆகியோரின் ஆவணப்படங்களை வெளியிடுவதோடு அவர்களின் தேர்ந்தெடுத்த இரு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து உலக இலக்கிய ஆர்வளர்களின் பார்வைக்கும் எடுத்துச்செல்லும் திட்டமும் இவ்வருட கலை இலக்கிய…

கலை இலக்கிய விழா – 8

வல்லினம் இலக்கியக் குழு வருடம்தோறும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் மிக உற்சாகமாக ஏற்பாடாகி வருகிறது. ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனத் தலைப்பின் கீழ் மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது, அரு.சு.ஜீவானந்தன், கோ.புண்ணியவான் ஆகியோரின் ஆவணப்படங்களை வெளியிடுவதோடு அவர்களின் தேர்ந்தெடுத்த இரு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து உலக இலக்கிய ஆர்வளர்களின் பார்வைக்கும் எடுத்துச்செல்லும் திட்டமும் இவ்வருட கலை இலக்கிய…

வல்லினம் சிறுகதைப் போட்டி 2016

கடந்த 10 ஆண்டுகளாக மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் ‘வல்லினம்’ தனது 8ஆம் ஆண்டு கலை இலக்கிய விழாவுக்கென சிறுகதை போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை மலேசியச் சூழலில் சிறுகதை போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகைகளைக் காட்டிலும் அதிகமாக வழங்கி எழுத்தாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்போட்டி தொடங்கப்பட்டுள்ளது. கலந்துகொள்ளும் அனைத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளில் சிறந்த…

மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும்

மைஸ்கீல்ஸ் அறவாரியம் மற்றும் வல்லினம் இலக்கியக் குழு  ஏற்பாட்டில்  மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும் இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலும்பூர்  திகதி: 11.10.2015 (ஞாயிறு) நேரம்: மாலை 3.30 – 5.30 வரை சிறப்புரை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை பேராசிரியர் வீ.அரசு, தமிழ்நாடு ம.நவீன் நூல் வெளியீடு தற்காலக் கல்வி முறை குறித்த…

வல்லினம் கலை இலக்கிய விழா 7

வல்லினம் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் நடைப்பெறுகிறது. திகதி: 1.11.2015 (ஞாயிறு) நேரம்:  1.00pm இடம்: Asian Art Museum, Universiti of Malaya, Kuala Lumpur இந்நிகழ்வில் நான்கு எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றின் விபரம் பின்வருமாறு: மண்டை ஓடி (சிறுகதை தொகுப்பு) – ம.நவீன் அவர்களின் பேனாவிலிருந்து…