யுவன் சந்திரசேகர் வருகை – ஒரு பதிவு

ஜூன் 10 – 11 ஆகிய இரு நாட்கள் வல்லினம் ஏற்பாட்டில் நவீன கவிதை முகாம் நடைபெற்றது. இந்தப் பட்டறையை வழிநடத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பு வருகை புரிந்தார். 

ஜூன் 10 காலை 9 மணிக்குப் பட்டறை தொடங்கியது. காலை உணவுக்குப்பின் பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டனர். மொத்தம் 25 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்தப் பட்டறை நடைபெறுவதற்கு ஒருமாதம் முன்பே கவிதைகள் அனைத்தும் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எனவே பங்கேற்பாளர்களால் கவிதைகள் முன்னமே வாசிக்கப்பட்டிருந்தன.

யுவன் சந்திரசேகர் எளிமையான முறையில் தன் அறிமுக உரையைத் தொடங்கினார். இந்தப் பட்டறை கவிதையை அறிவதற்காகவும் அதன் ஆழங்களை தொடுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை தெளிவு படுத்தினார். நவீன கவிதைகளை அறிவதற்கு முன் ஏற்கனவே கவிதை வாசிப்பவர் மனதில் உள்ள கவிதை குறித்தான முன்முடிவுகளை அவரது அணுகல் மெல்ல மெல்ல களைந்தது. கவிதையை நேரடியாக எதிர்க்கொள்ளும் மனநிலையை பல்வேறு உதாரண கவிதைகள் வழி பயிற்றுவித்தார். 

பிரமிள், தேவதச்சன், பசுவய்யா, நகுலன், கலாப்ரியா, சுகுமாரன், சமயவேல், கல்யாண்ஜி என தமிழின் முதன்மையான கவிஞர்களின் முக்கியமான கவிதைகள் வாசிக்கப்பட்டு அதை புரிந்துகொள்ளும் விதமும் ஆராயப்பட்டது. பலதரப்பட்ட புரிதல்கள், பல்வேறு வாசிப்பு முறைகள் என யுவன் எளிமையாகவும் தீவிரமாகவும் பட்டறை வழிநடத்தினார். கவிதைகளை மறுபடி மறுபடி வாசித்து படிமங்களை உள்வாங்குவதன் வழி பெரும் அனுபவம் குறித்து விளக்கிப் பேசினார்.

முதல்நாள் பட்டறை மாலை 6 மணி வரை தொடர்ந்தது. 

மறுநாள் ஜூன் 11 காலை 9 மணிக்குப் பட்டறை தொடங்கியது. யுவன் மொழிப்பெயர்த்த ஜெஃப் ரிப்ஸ், ச்சோ ஓ-ஹ்யுன், நட்ஸ் ஸ்குசெனீக்ஸ், ஜேஸன் டானிகுச்சி, போரிஸ் ஏ நோவக், ஆலன் அஹ்ல்பெர்க், ஜலால்பர்ஸாஞ்ஜி, அப்பாஸ் கியரோஸ்டமி போன்ற உலக கவிஞர்களின் கவிதைகளும் எம். கோபாலகிருஷ்ணன் மொழிப்பெயர்த்த இந்திக்கவிஞர்களின் கவிதைகளும் விரிவாக உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன. 
மதியம் 12.00 மணிக்கு கேள்வி பதில் அங்கத்துடன் நவீன கவிதை முகாம் நிறைவடைந்தது. (பங்கேற்பாளர்களின் கடிதகள்)

மதியம் 1 மணிக்கு மெல்ல மெல்ல பொது நிகழ்ச்சிக்கான அரங்காக அவ்வறை மாறத்தொடங்கியது. திட்டமிட்டபடி மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. 

குமாரி சாலினி நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பொறுப்பேற்றிருந்தார். ஆசிரியரான அவர் தீவிர இலக்கிய வாசிப்பில் ஆர்வம் காட்டி வருபவர். 
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ம.நவீன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியின் நோக்கத்தையும் வல்லினம் சென்று கொண்டிருக்கும் இலக்கையும் குறித்து பேசினார். 

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் தலைமை உரை ஆற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். (சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி உரை)

இவ்வரங்கு யுவன் சந்திரசேகர் படைப்புலகத்தை அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அரவின் குமார், அ.பாண்டியன், ம.நவீன் ஆகியோர் அவரது புனைவுலகம் குறித்து வெவ்வேறு வகையில் விளக்கினர். 

அரவின் குமார் உரை

அ. பாண்டியன் உரை

ம.நவீன் உரை

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய யுவன் சந்திரசேகர் மூன்று உரைகளின் அடிப்படையில் தனது உரையை வடிவமைத்துக்கொண்டு பேசினார். இறுதயில் வாசகர்கள் கேள்விகளுக்கு தன் பதில்களையும் வழங்கினார். 

யுவன் சந்திரசேகர் உரை

நிகழ்ச்சி சரியாக 5 மணிக்கு நிறைவடைந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...