
வல்லினம் மற்றும் யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ் சிறுகதை போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு விழாவாக அது அமைந்தது. இவ்விரு பதிப்பகங்களின் நிர்வாகி எழுத்தாளர் ம.நவீனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. எழுத்தாளர் கி.…