
பசித்திருக்கும் மனிதனை அகக்கண்கொண்டே பார்த்துணரமுடியும். எல்லா சாமான்ய மனிதர்களுக்கும் இந்த அகப்பார்வை அமைவதில்லை. பசியால் இருக்கும் மனிதர்களுக்குத்தான் பசியோடு இருக்கும் சக மனிதனைக் கண்டுணரும் நுண்ணியம் வாய்க்கும். கருணை உள்ளங்கொண்டவர்களாலும் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும். இவர்களில் துல்லிதமாய் உணர்பவன் படைப்பாளன் மட்டுமே. ஏனெனில் அவன் தன்னைச் சுற்றிவாழும் சமூகத்திடமிருந்தே கதையை உருவி எடுக்குகிறான். மனிதர்களின்…


