
‘தொலைந்தது எதுவென்றே தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்…’ என்ற யுவனின் இந்தக் கவிதை வரியைத் தொடக்கத்தில் வாசிக்கும்போதெல்லாம் நிலையற்ற தேடலின்மை, இலக்கற்ற வாழ்க்கை, குழப்பமான மனநிலை, மனச்சோர்வு என சில நேரங்களில் எனக்குள் எழும் எண்ணங்களே நினைவில் வருவதுண்டு. எதை தேடிப் பயணிக்கின்றோம், எதை அடைகின்றோம், இதற்கிடையில் எழும் சவால்களைக் கண்டு துவண்டு போகுதல் போன்ற எதிர்மறை எண்ணங்கள்…










