கட்டுரை/பத்தி

“பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?”

குறிப்பு : ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்கள் நெடுங்கால‌மாக‌வே மிக‌ச் ச‌ம‌த்தாக‌ ஒளித்துவைத்து வ‌ள‌ர்த்தெடுக்கும் பார்ப்ப‌ன‌ர் ஏற்ப‌டுத்திய‌ சாதிய‌ அடையாள‌ங்க‌ளின் க‌றைக‌ளை நெம்பிக்காட்ட‌ பார்ப்ப‌ன‌ர் ஏற்ப‌டுத்திய‌ சாதிய‌ அடுக்குக‌ளையே க‌ட்டுரையில் சில‌ இட‌ங்க‌ளில் ஆயுத‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டியிருக்கிறது.

நமது நாட்டில் அவ்வப்போது தமிழர்களிடம் ஏதாவது பிரச்சனையை ஒட்டி மிகப்பெரிய கொதிப்பலை வேகமாக எழுந்து அதன் அதிர்வு நாடு முழுதும் பற்றிப் படர்வதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த எழுச்சி போராட்டங்கள் பல்வேறு சமயங்களில் சாதகமான விளைவுகளை நமது சமூகத்துக்கு ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. ம‌லாயா ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் த‌மிழ்த்துறை உருவாக்க‌ப்ப‌ட்ட‌து முத‌ல், மிக‌ அண்மையில் எஸ்.பி.எம் பாட‌ விவ‌கார‌த்தில் த‌மிழில‌க்கிய‌த்தை நீக்கிய‌தில் ஏற்ப‌ட்ட‌ கொந்த‌ளிப்பு வ‌ரை ச‌ட்டென‌ மலேசிய‌த் த‌மிழ‌ர் போராட்ட‌ வ‌ர‌லாறு ஒரு ப‌ட்டிய‌லாக‌ ம‌ன‌தில் உருவாகிற‌து.

Continue reading

‘பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கிறாரா?’

முப்ப‌த்தைந்தாவ‌து ம‌து புட்டியைக் காலியாக்கிய‌ க‌ளிப்பில் ந‌ண்ப‌ன் கேட்டான். “பிர‌பாக‌ர‌ன் இன்னும் இருக்காராடா?” சுற்றியிருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் என் ப‌திலுக்கு ஆவ‌லாக‌க் காத்திருந்த‌ன‌ர். கோலால‌ம்பூரில் வ‌சிப்பதாலும் இத‌ழ் ந‌ட‌த்துவ‌தாலும் உல‌கின் அத்த‌னை ம‌ர்ம‌ங்க‌ளுக்கும் என்னிட‌ம் விடை உண்டு என்ப‌து அவ‌ர்க‌ள் க‌ணிப்பு. என் ப‌திலுக்குக் காத்திருக்காம‌ல் இன்னொரு ந‌ண்ப‌ன் “அவ‌ரு எப்ப‌டிடா சாவாறு… திரும்ப‌ வ‌ருவாருலா ஜோ. பெர‌ச்ச‌ன‌ கொடுப்பாரு. த‌முல‌ன்னா சும்மாவா” என‌ குர‌லை உய‌ர்த்தினான். அழுத்த‌ம் திருத்த‌மான‌ ந‌ண்ப‌னின் பேச்சு நெடுநாளைக்குப் பின் ஒட்டுமொத்த‌மான‌ வெற்றிக்கூச்ச‌லை ந‌ண்ப‌ர்க‌ளிட‌மிருந்து கேட்க‌ உத‌விசெய்த‌து. முன்பு கேள்வி எழுப்பிய‌ ந‌ண்ப‌ன் என்னையே கூர்ந்து பார்த்த‌ப‌டி இருந்தான். அவ‌னுக்கு என் ப‌தில் தேவைப்ப‌ட்ட‌து. “அவ‌ர் இருந்தா என்ன… இல்ல‌னா என்ன‌… உங்க‌ளுக்கு இப்ப பிர‌பாக‌ர‌னோட‌ தேவை என்ன‌?” என் ப‌தில் ப‌ல‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு தீபாவ‌ளிக்குக் கெடாவில் குழுமியிருந்த‌ ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் கோப‌மடைய‌ வைத்த‌து. அடுத்த‌ நிமிட‌மே நான் ஒரு த‌மிழின‌ துரோகியின் ம‌திப்பீட்டோடு ந‌ண்ப‌ர்க‌ள் முன் வீற்றிருந்தேன்.

Continue reading

வேதாளம் சொன்ன கதை

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் வேதாளத்தைத் தூக்கித் தோள்மீது போட் டான். எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரனின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் சிக்கிச் சின்னா பின்னமாகிய வேதாளம் அப்போதுதான் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. விக்ரமாதித்தனின் தொல்லை தாங்காமல் வேதாளம் கடுப்பாகிக் கதை கூறத் தொடங்கியது…

விக்ரமாதித்தனே உன் முயற்சியை மெச்சினோம். ஆனா, இப்படித் தூங்கும்போது தொந்தரவு பண்றதுதான் உங்கிட்ட எனக்குப் பிடிக்காத பழக்கம். என்னை மட்டுமல்ல இந்தச் சமுதாயத்தையும் நீ எழுப்ப நினைச்சா, நீ ஐ.எஸ்.ஏ வுல உள்ள போறது திண்ணம். அதனால, யாரையும் எப்பவும் எழுப்ப முயற்சி பண்ணாத. முடிஞ்ச வரைக்கும் தமிழ்,இலக்கியமுன்னு பேசி பணம் சம்பாரிச்சிக்கோ. ஆனா, உம்மவன மட்டும் தமிழ்ப் பள்ளியில போட்டுறாத. ஒரு நல்ல தலைவராக இதுதான் முதல் குணம்.

Continue reading