கடிதங்கள் (அற்புதம்)

அற்புதம் என்றே தலைப்பு வைத்துவிட்டதால், வேறு எதுவும் சொல்லமுடியாது 😁 புனைவு எழுத்தாளரை அமெரிக்கா அழைத்துவந்தால் இப்படித்தான் நம்மையே பாத்திரங்களாக மாற்றி அழகு பார்ப்பார்கள் போலும். மானுடத்தின் சிறப்பைச் சொல்லும் இக்கதை அற்புதம்!

சௌந்தர், ஆஸ்டின்

Dear நவீன், ஒரு புலம் பெயர்ந்த மனிதனின் பாதுகாப்பின்மையிலிருந்து விளையும் அவநம்பிக்கையும் அவன் தன் நம்பிக்கையும் கண்டு கொள்ளும் தருணத்தை இந்த கதை சொல்கிறது.

அதிகமாக புற உலகோடு ஒட்டாத, சற்றே சுயநலவாதி என்று சொல்லக்கூடிய பால்கி. மனைவியின் விருப்பத்தை கூட அதிகமாக பொருட்படுத்தாதவன். யாரையும் நம்பாதவன் – post office ஐ கூட. அவன் சட்டென்று மனம் மாறி அந்த கடிதங்களை கதவடியில் ஒரு குருட்டு நம்பிக்கையில் கொடுப்பது அவன் மனிதர்களை நம்ப ஆரம்பித்து விட்டதை காட்டுகிறது. கதையில் அந்த வீடு கைலாவின் வீடாக இல்லாமல் இருக்கவும் சாத்தியம் இருப்பதை காண முடிகிறது. அதையும் மீறி பால்கி அது கைலாவின் வீடென்று நம்ப தலைப்படுவதே அற்புதம் என்று தலைப்பு குறிப்பதாக படிக்கிறேன்.

ஸ்ரீனி சங்கரன்

பால்கி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவனாகவே இருக்கின்றான். அமெரிக்கன் துப்பாக்கியைக் காட்டிய சம்பவம் அவனை இன்னும் அச்சமுடுத்தியது. தன்னை அமெரிக்க சூழலில் பொருத்திக்கொள்ள முயற்சிக்கும் அவனுக்கு இவையெல்லாம் தடைகளாகவும் ஒவ்வாமையாகவும் அமைகின்றது. அவனின் அச்சத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் இன்னும் அதிகரிக்கச் செய்கின்றது. அதிலிருந்து விடுபட துப்பாக்கிச் சுடும் பயிற்சுக்குச் சென்றாலும் அங்கும் அவனுக்கு அவமானமே மிஞ்சுகின்றது.

இப்படித் தாழ்வு மனப்பான்மையால் நிறம்பியிருக்கும் அவனுக்குள் உள்ள மனிநேயம்தான் அவன் வீட்டு விலாசத்திற்கு தவறாக வந்துள்ள பணத்தை உரியவரிடமே ஒப்படைக்க தூண்டுகின்றது. ஒரு அமெரிக்கனால் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்பட்டவன் மற்றொரு அமெரிக்கனால் அவனின் மனிதநேயச் செயலுக்குப் பாராட்டப்பட்டபோது பால்கி அவனின் தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் அவனை ஒட்டிக்கொட்டிருந்த அவமானத்திலிருதும் விடுபட்டு வாழ்க்கையின் அழகை உணர்கின்றேன்.

சாலினி

(Visited 57 times, 1 visits today)