கடிதம்/எதிர்வினை

கடிதம்: மீண்டும் கேரளம்

13நண்பர் நவீனுக்கு,

தங்களின் மீண்டும் கேரளம் பயணக்கட்டுரையை வாசித்தேன். தொடக்கத்திலேயே கன்னங்களில் வலிக்க தொடங்கியது. முகம் விட்டு சிரித்து பல நாட்கள் ஆகிவிட்டதை உணர்ந்தேன். விமானத்தில் இடம் மாற்றிக்கொள்ளாமல் கறார் செய்த முதியவர் தொடங்கி, கரப்பான் பூச்சி கலவரம் மற்றும் கடல் உணவு கடையில் நடந்த ‘ருசி’ ஏமாற்றம் என  தங்களுக்கே உரிய நகைச்சுவை கலாட்டாக்களோடு  எழுதியுள்ளீர்கள் கட்டுரையை.

மேலும்

கடிதம்: வெள்ளைப் பாப்பாத்தி

indexநிஜத்தில் ஒரு பாப்பாத்தி என் மீது  சில கனங்கள் வந்து அமர்ந்துவிட்டுச் சென்றது போல இந்தக் கதையை வாசித்த நிமிடங்கள் முழுக்க  தோன்றியது. ஒரு பாப்பத்தியோடு கதைப் பேசிய உணர்வுதான் அது. ஒரு குழந்தையின் வெண்மையான மனப்போக்கிற்கும், கரை படியாத சிந்தனைக்கும் நீங்கள் தெரிவு செய்த அந்தப் பாப்பத்தியின் வெள்ளை நிறம் எத்தனைப் பொருத்தம். பொதுவாக வண்ணம் நிறைந்த பாப்பத்திகளையே விரும்பும் என்னைப் போல பல வாசகர்களிடம் ஒரு வெள்ளைப் பாப்பாத்தியின் அழகைப் பேசிய இந்தக் கதை ஒரு தேவதைக்கான கதை.

மேலும்

மனசலாயோ : கடிதங்கள் 4

indexகேரளாவிற்கு மூன்று முறை பயணம் செய்திருக்கிறேன். நீண்ட கால இடைவெளிகளில். சட்டென்று பார்ப்பதற்கு மாற்றம் இல்லாததுபோலிருக்கும். ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் பெரும் மாற்றம். நவீனின் மனசிலாயோ தொடரைப் படித்த பின்னர் நான் அறிந்த சில விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் எனத் தோன்றியது.

முதலாவது, பூமி முழுக்க பருவநிலை மாறிவிட்டது. குளிர்காலத்து காலை நேரக் குளிர்ச்சியை கேரளாவில் இப்போது எல்லா இடங்களிலும் அனுபவிக்க முடியவில்லை. மலைப் பகுதிகளில்தான் நடுங்க வைக்கும் காலைக் குளிரை உணரமுடிகிறது. மற்றது வேகமாக நடைபெற்று வரும் நகரமயமாக்கலில் கேரளத்தின் பசுமைச் சூழல் மெல்ல மெல்ல கண்ணுக்குச் சட்டென்று தெரியாமல் குறைந்து வருகிறது.

மேலும்

மனசலாயோ : கடிதங்கள் 3

புனிதாதிரு.நவீனின் பயணக்கட்டுரை  மிகவும் உயிரோட்டமாக இருக்கும். அலங்காரச்சொற்கள் கிடையாது. ஜிகினா தூவல் கிடையாது. உள்ளதை உள்ளபடியே ஒரு திரைப்படமாக சலிப்புத்தட்டாமல்  வாசகரின் முன் வைத்து எழுதும் முறை மிகவும் வியக்கத்தக்கது. ஒரு வாசகரைப் கைப்பிடித்து  அழைத்துச்சென்று ஒவ்வொரு காட்சியை நேரடியாக பார்த்த அனுபவம் கிடைக்கும். அவரின் எழுத்துக்கள் ஓவ்வொன்றும் வாகனின் கண்கள் எனலாம். நாமே சென்று நேரடியாகப்பார்த்தாலும் இவ்வளவு  கூர்மையாக் கவனிப்போமா என்பது சந்தேகமே. சிகிச்சைச்சென்றும் அடங்கமாட்டாரா  இந்த சார்? காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் நடனமணியை போல கையில் கட்டிக்கொண்டே ஆடுகிறாரே எனக் குழப்பம் வந்தது.   ஆனால் கட்டுரைப்படிக்கப்படிக்க நான் சுயநலவாதியாக மாறிவிட்டேன். அவரின் எழுத்தைப் பார்வையாககொண்டு நானும் எல்லாக்காட்சிகளையும்  இரசிக்க ஆரம்பித்தேன் .

மேலும்

மனசலாயோ : கடிதங்கள் 2

46670559_299852633983828_6854628398367506432_nஎழுத்தாளர் நவீன் அவர்களுக்கு வணக்கம், நல்ல படைப்புகளை வாசிக்கும்போது நானுமே என்னை நல்ல வாசகனாக நினைத்துக்கொள்ளுமபடியான ஒரு உணர்வு என்னுள் ஏற்படுகிறது. அதன் மீதான புரிதல் நமக்குள் ஒரே இடத்தில் நிலையாய் நின்று விடுவதில்லை. அது ஒரு கொடியைப் போல படர்ந்து பரவிக் கொண்டே செல்லும். அப்படி ஒரு ஆழமான புரிதல் நம்மில் நின்று வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு படைப்பாகத்தான் உங்களின் இந்த பயணக் கட்டுரையை நான் பார்க்கிறேன். பொதுவாக நான் யாருடைய படைப்புகளையும் வாசித்து விமர்சித்ததும், கருத்துரைத்ததும் இல்லை. காரணம் அந்த அளவிற்கு நான் ஒரு தீவிர வாசகரல்ல.

மேலும்

மனசலாயோ : கடிதங்கள் 1

46807044_287766291872702_2024474607821520896_nபடைப்பாளி வாழ்வின் அனுபவத்திலிருந்து  அரூபமாகத் திரண்டு உருவெடுக்கும்  தான் பெற்ற தனக்கான தனி உண்மையை/ கேள்வியை/ சந்தேகத்தை  சத்தம், ஒளி, வண்ணம், மொழி போன்ற மூலங்களைப் பயன்படுத்தி வாசகனுக்கு / ரசிகனுக்கு அவ்வரூபத்தைக் கடத்துகிறான்.  கைவினைக் கலைஞன் இந்த மூலங்களைக் கொண்டு அனைவருக்கும் பரிட்சயமான பொது உண்மையை/ பொது ரசனையை/ அறுதியிட்ட நீதியை/ திட்டவட்டமான கட்டமைப்பை  வேறு வகையில் மறுநிர்மாணிப்பு செய்துபார்க்கிறான்.

அருமையான விளக்கம்… மனசலாயோ தொடர்ந்து வாசிக்கிறேன். அருமையாக இருக்கிறது. இனிமேல் சாராவைப் பற்றி எழுத இடம் இருக்காதே என எண்ணும்போது வருத்தம் மேலிடுகிறது. ‘மனசலாயோ’ ஒரு புத்தகமாகவே தாங்கள் போடலாம்

முனியாண்டி ராஜ்

மேலும்

போயாக் சிறுகதைகள் – கிறிஸ்டி

கிறிஸ்டிஅன்பு நவீன் அவர்களுக்கு,

தங்களின் ‘போயாக்’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். அதில் இடம்பெற்றுள்ள கதாமாந்தர்களின் வாழ்க்கை அனுபவம் இதுவரை என்னிடம் ஏற்படுத்தாத சலனத்தை ஏற்படுத்தியிருந்ததன் விளைவு, இரண்டு வாரங்களாக என்னால் வேறு எந்த படைப்பையும் வாசிக்க இயலவில்லை. கதைகளின் பேசுபடுபொருளை உள்வாங்கி செரித்துக்கொள்ள சிறிது காலஅவகாசம் தேவைப்பட்டது. தங்கள் எழுத்தைப் பற்றி முன்னுரை வழங்கியுள்ள திரு. சு.வேணுகோபால் அவர்கள் மற்றும் யாக்கை, போயாக் பற்றி கூறியுள்ள திரு. ஜெயமோகன் அவர்கள் இருவரின் எழுத்துகளையும் படித்தபிறகே என்னால் குறுஞ்சித்தரிப்புப்பாணி கொண்ட தங்கள் கதைகளை உள்வாங்கிக்கொள்ளவும் விரித்தெடுக்கவும் முடிந்தது.

மேலும்

மண்டை ஓடி: கிறிஸ்டி கடிதம்

கிறிஸ்டிஅன்பு நண்பர் நவீன் அவர்களுக்கு,

கிறிஸ்டி எழுதிக் கொள்வது. கடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் தங்களை நான் சந்தித்தது  நினைவிருக்கலாம். எனக்கு உங்கள் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தை “வாசித்துவிட்டு  எழுதுங்கள்” என்று சொல்லிக் கொடுத்ததும் நினைவிருக்கலாம். அடுத்த சிறுகதைத் தொகுப்பையே வெளியிட்டு விட்டீர்கள் என்று நண்பன் சுரேக்ஷ் கூறினான். மிகவும் தாமதமாக கடிதம் எழுதுவதற்கு மன்னிக்கவும். இடையில் சில காரணங்களால் இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. மீண்டு வந்ததும்  உங்கள் சிறுகதைத் தொகுப்பைத்தான்  முதலில் வாசித்தேன். உடனே எழுத மனம் துடித்தாலும் அலுவலகப் பணிச்சுமையும் அலைச்சலும்  தடைகளாகவே இருந்தன. இன்றைய தினத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுபோல எனக்கும் இன்று இரண்டு மணி நேரம் ஓய்வு கிடைத்தது.

மேலும்

கடிதம் : சிவமணியம்

அன்புள்ள நவீனுக்கு,White butterfly 04

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

சிறுவர்கள் தங்கள் உலகின் வாயிலில் நின்றபடி, பரிசுத்தமான குட்டி கைவிரல்களால் நம் பெரிய கைகளை அழுத்தமாகப் பற்றி,  நம்மை ஓயாமல் உள்நுழைய அழைக்கிறார்கள். நேரமின்மை என்கிற சல்லிசான சாக்கு கூறிக்கோண்டு, சுருங்கி சுருண்ட குழாய் போன்ற அந்த கலைடாஸ்கோப்பினை,  நம் அலட்சிய கைகளால் ஒதுக்கி கடந்து செல்கிறோம். மாறாக, நம் ‘பெரியத்தனம்’ என்னும் மன உடைகளை உதறிவிட்டு, அவர்களின் விழிமனப் பாதைக்குள் ஒப்புக் கொடுத்து,  அந்த வாயில் வழியாக தடையின்றி நுழைந்தால், முடிவிலா வண்ணக் கலவைகளால் நிறைந்த ஒரு புதிய உலகினை நாம் கண்டு அதிசயிக்க நேரும். இந்த அழகிய தேவ தேவதைகள் வாழ்வின் துளிகளை ‘அதி பெரியவைகளாக’ உருப்பெருக்கி காட்டி நம்மை வியக்க வைக்கின்றார்கள்.  என் இரண்டு வயது மகன் ரிஷிவர்தனுடன் நான் பழகிப் பெற்று வரும், குழந்தைமை ஆசியளித்த அனுபவங்களை இந்த கதை மூலம் மீண்டும் நான் காண்கிறேன்.

மேலும்

கடிதம் 6: என்னுள் சுற்றும் கொடி மலரின் சிறகுகள்!

indexவெள்ளைப் பாப்பாத்தி

ஒரு இடைவெளிக்குப் பின் எழுதும் கருத்துரை அல்லது சிறிய எதிரொலி. சிறிது நேரம் அழகு காட்டி மறையும் வண்ணத்துப்பூச்சி வாழ்வு. அவ்வுலகில் நிறைந்திருப்பது அடர்த்தியான வண்ணங்களும் சிறகுகளும் மட்டுமே.

வெண்டைக்காயில் தொங்கட்டான் போட்டு தங்களை அழகுப்படுத்திக் கொண்ட ‘கோணங்கியின்’ கொல்லனின் பெண் மக்கள் : தின்பண்டத்துக்கு ஏங்கிய தன் குழந்தைகளுக்கு சோழ தட்டையை நிலக் கசக்காய் கசக்கி கொடுத்த கொல்லன். இந்த உலகுக்குள் ஊடுருவிப் புதைந்திருப்பது அற்புத வாழ்வியல் வண்ணங்கள். கவிதை மொழியில் பின்னிக் கலந்த கதையுலகம்.

மேலும்