பாடாங் செராயில் உள்ள விக்டோரியா தோட்டத்தில் தலைமையாசிரியராக இருந்தார் கோ.புண்ணியவான். சிறுகதைகளைவிட அவரிடம் கவிதைகள் குறித்து அதிகம் உரையாடியதுண்டு. அவர் அப்போது அப்துல் ரகுமானின் கவிதைகளை அதிகம் நேசிப்பவராக இருந்தார். வைரமுத்துவின் மேல் எனக்கு இருந்த பிடிப்பை மெல்ல முதலில் அசைத்தவர் புண்ணியவான். வைரமுத்துவின் போலியான உணர்ச்சிகளையும் கவிதைகளையும் அவர் கூறும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். என் ஆதர்ச கவிஞரைத் தர்காக்கத் தெரியாமல் விழிப்பேன். அவரின் ‘நிஜம்’ தொகுதியில் இருந்த சிறுகதைகள் ஆரம்ப வாசகனான எனக்கு சுவாரசியமாக இருந்தது. Continue reading