மலேசியாவில் பெண் எழுத்தாளர்கள் இயங்குவதே ஆண்களின் பெருந்தன்மையினால்தான்!

இப்போது காலை மணி ஏழு. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் மூன்றாவது நாளாக காட்டுக்குள் முகாமுக்குச் செல்லவேண்டும். எந்தத் தொடர்பும் இருக்காது. நாளை இதுகுறித்து பேசும் அளவுக்கு மனம் இன்னும் அமைதியாகவில்லை. ஒரு நிமிடம் மலேசிய இலக்கியத்தின் நிலை குறித்த வேதனையும் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் குறித்த கோபமுமே மிஞ்சியிருந்தது.

13 ஜூலையில் க.பக்கியம் ஏற்பாட்டில் நடந்த ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூலின் அறிமுகவிழா நடந்தது. மணிமொழி தான் கலந்துகொள்ளப்போவதாகச் சொன்னார்அதில் கற்றுக்கொள்ள ஒன்றும் இருக்கப் போவடில்லை என்றேன். அவருக்கு நிகழ்வினைக் காட்டிலும் தனது தோழிகளைச் சந்திப்பதில் விருப்பம் அதிகம். நள்ளிரவில் காட்டைவிட்டு வெளிவந்து அழைத்தபோது. அங்கு நடந்த கூத்துகளைச் சொன்னார். அப்போது ஏற்பட்ட வருத்தம் யோகி அந்த பேச்சை முகநூலில் பதிவேற்றம் செய்தபோது மேலும் அதிகரித்தது.

மலாயா பல்கலைக்கழகத்தில் நான் மதிப்பு வைத்திருப்பவர்களில் முனைவர் கிருஷ்ணன் மணியமும் ஒருவர். அவர் வாயிலிருந்து இதுபோன்ற வார்த்தைகள் உதிரும் என நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. “தமிழகத்தில் பெண்ணியம் என வரம்பு மீறி போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மலாதி மைத்ரி குட்டி ரேவதி போன்றவர்கள் அவையங்களை படைப்பிலக்கியங்களில் கொண்டுவருகிறார்கள். நாம் இன்னமும் அந்த நிலைக்குப் போகவில்லை. நம்முடைய இலக்கியம் அந்தச் சூழலுக்கும் போகவில்லை. இந்தச் சமூகமும் அதற்கு தயாராக இல்லை. நாம் நம்முடைய வழியிலேயே அந்தப் பெண்ணியத்தைப் பாக்கமுடியும்.” என அவர் சொன்னபோது யாராவது டப்பீங் செய்துவிட்டார்களா என்றுக்கூட தோன்றியது. முனைவர் அவர்களிடம் நாம் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய இயலும்தான். முதலில் அவர் உரையாடலுக்குத் தயாரனவர் என்பதில் ஐயம் இல்லை.

– இந்த ‘வரம்பு… வரம்பு’ என்கிறீர்களே அது என்ன? தமிழ்ச் சமூகத்தின் வரம்பா? அல்லது உலகம் முழுக்க உள்ள பெண்களின் வரம்பா? முதலில் தமிழ்ச்சமூகம் என்பது என்ன? அதன் வரம்புகள் எப்படித்தீர்மாணிக்கப்படுகின்றன? இது ஒரு தலைமுறையோடு நின்றுவிடுகிறதா? அல்லது தலைமுறை மாறுதல்களில் இதுவும் மாற்றப்படுகிறதா? எந்த அளவுக்குள் இந்த வரம்பு இருக்க வேண்டும் என்கிறீர்கள்? தமிழ் இலக்கிய மரபில் இது புதிதாக நடக்கும் மாற்றம் என்கிறீர்களா? இல்லை என்றால் அச்சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது என நீங்கள் சொல்ல காரணம் என்ன?

– ‘நாம் இன்னமும் அந்த நிலைக்குப் போகவில்லை என்பது’… அந்த நிலை அவ்வளவு கேவலமானது என்கிறீர்களா? ஏன்? அது சமூகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்கிறீர்களா?

– உங்களுக்கு விருப்பங்களும் வாசிப்பின் தேர்வுகளும் ஒருபுறம் இருக்க… அதை பொதுவில் நீங்கள் வைக்கும் போது எல்லோருக்குமான கருத்தைச் சொல்கிறீர்கள். இந்தச் சமூகம் அதை ஏற்கத் தயார் இல்லை என்கிறீர்கள். இந்தச் சமூகம் என்றால் எந்தச் சமூகம்? அதில் நீங்கள் அங்கத்தினராகப் பார்ப்பது யாரையெல்லாம். ஒருவேளை என் போன்றவர்கள் அதில் அங்கம் இல்லையா?

முனைவர் அவர்களின் கருத்துகளுடன் நாம் விவாதிக்கலாம். காலம் உண்டு. முனைவர் தன் கருத்தை மீட்டுக்கொள்வதானாலும் வரவேற்கிறோம். கருத்துகளில் மாற்றத்தைக் கொடுப்பதுதானே கல்வி. அதுபோல உங்கள் கருத்துகளுடன் எவ்வளவு வேண்டுமானாலும் விவாதம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அடுத்ததாக நகைச்சுவை நேரம்.

சந்தானத்தின் நகைச்சுவை சி.டி யாருக்கும் கிடைக்கவில்லை என்றால் முகநூலில் உள்ள மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரனின் பேச்சைக் கேட்கலாம். அவர் ஒரு நகைச்சுவை பேச்சாளர் என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது. பெண்ணியம் தொடர்பாக அவர் புரிந்துவைத்திருக்கும் விதமே தனி. அவர் உதித்த நகைச்சுவை துணுக்குகள் இவை:

– மாமியார் மருமகள் சண்டைய பாத்திருப்போம்…ஆனா ஒருமகன மாமியார் குறை சொல்லியிருக்கிறார்களா?
– தமிழ் சார்ந்த கருத்தரங்குகளில் எங்காவது ஆண்களுக்கான கருத்தரங்கு என மட்டும் உண்டா?
– எங்காவது ஆண்களின் சிறுகதை/ கவிதைகள்/ கட்டுரைகள் மட்டுமே என வெளியீடுகள் கண்டடுள்ளதா?

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக ” இதெல்லாம் ஆண்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.” என முடித்தார்.

அதன் பிறகு அவர் எப்படி பெண்ணியத்தைப் பேணுகிறார் எனவும் பேச ஆரம்பித்தார். “எழுத்தாளர் சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விருது பட்டியலில் பெண்களை இணைத்துக்கொள்கிறோம். நான் தலைவர் ஆனப்பின்பு அதை கூட்டியுள்ளேன்.” என்றபோது கைத்தட்டல் ஓசையெல்லாம் வேறு கேட்கிறது.

நகைச்சுவை பேச்சாளரிடம் நாசுக்காகத்தான் பேச வேண்டியுள்ளது.

ஐயா… நீங்கள் மேலே போட்ட பட்டியலில் ஆண்களின் பெருந்தன்மையை எடுத்துக்காட்ட இன்னும் சில உதாரணங்களை விட்டுவிட்டீர்கள். உதாரணமாக:
– பொது கழிவிடங்களில் பெண்களுக்கும் தனியாகக் கழிவறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
– ஆண்கள் குடிக்கும் அதேபோன்ற கோப்பைகளில் பெண்களுக்கும் பானம் வழங்கப்படுகின்றது.
– பொதுவிடங்களில் பெண்கள் பேசுகிறார்கள்.
– பெண்களுக்குக் காலணி அணியும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
– கடைகளில் பெண்களுக்கான பொருள்கள் அதிகம் விற்கப்படுகின்றன.

இன்னும்கூட நீங்கள் இணைத்துக்கொள்ளலாம். உங்களுக்குச் சிந்திக்கவா சொல்லித்தர வேண்டும். பெண் என்பவள் இன்னமும் ஆணின் கரிசனத்துக்கும் உத்தரவுக்கும் அடிபணிபவள் என நம்பும் உங்களைப் போன்றவர்களை நிகழ்ச்சியில் பேச விட்டது ஏற்பாட்டாளர்களின் தவறன்றி வேறென்ன? ஒருமுறை லீனா மணிமேகலை தனது நேர்காணலில் “பிரதிகளின் ஜட்டியைக் கலட்டிப்பார்ப்பவர்களின் என்ன உரையாடுவது” எனக்கேட்டிருந்தார். நீங்கள் நன்றாகவே ஜட்டியைக் கலற்றிப்பார்க்கிறீர்கள்.

பெண் எழுத்தாளர்களுக்கு

முனைவர் முல்லை ராமையா உட்பட எழுத்தாளர் சங்கத்தில் நிறைய பெண்ணியம் அறிந்த எழுத்தாளர்கள் உண்டு. அவர்களைப் போன்றவர்கள் ராஜேந்திரனின் கருத்தோடு ஒத்துப்போகிறார்களா? அல்லது மாற்றுக் கருத்தை வைப்பார்களா என்பது இன்னும் தெரியவில்லை. அதேபோல நாடு முடுவதும் உள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் எப்போதும் போல இதற்கும் மௌனம் சாதிக்கப்போகிறார்களா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கவனிக்க: இது எழுத்தாளர்களுக்கு நடக்கும் பிரச்னை. இதிலும் பெண் எழுத்தாளர்களின் பிரச்சினை என பேசுபவர்கள் உரையாட வரவேண்டாம்.   ”நாங்களெல்லாம் ரொம்ப பிஸி” என இப்போது சொல்லிவிட்டு நாளைக்கு எல்லா சூடும் ஆறியப்பின் எங்காவது கோப்பிக்கடையில் யார் காதுக்கும் கேட்காமல் புலம்புவதை வரலாறு பதிவு செய்யும்.

(Visited 386 times, 1 visits today)

4 thoughts on “மலேசியாவில் பெண் எழுத்தாளர்கள் இயங்குவதே ஆண்களின் பெருந்தன்மையினால்தான்!

  1. முனைவர் முல்லை ராமையா, வாணி ஜெயம், பாவை, மங்கள கெளரி, கே.எஸ். செண்பகவள்ளி, பாக்கியம், மகேஸ்வரி போன்றவர்கள் இன்னும் எழுத்தாளர் சங்கத்திற்கும் ராஜேந்திரனுக்கும் விசுவாசமாக இருப்பவர்கள்தான். அவரகள் ராஜேந்திரனின் கருத்தோடு உடன் படுகிறார்களா என்பதை விளக்கம் கொடுத்தால் தெளிவாக இருக்கும். அல்லது இவர்களிடமிருந்து ஒரு மிகப்பெரிய மௌனம் மட்டுமே எஞ்சியிருக்கும். சுரணையில்லாமல் இருப்பதும் ஒரு தந்திரமே என்று பாலமுருகன் சொல்வதைப் போல்தான் இருக்குமா?

  2. மலேசிய எழுத்தாளர் சங்க நிகழ்ச்சியை புறக்கணிக்கிறேன்..

    இதுவரையில் பெண்களுக்கு எழுத்தாளர் சங்கம் கொடுத்து வந்த மரியாதை, பரிசு , முக்கியத்துவமெல்லாம்…. அவர்களின் எழுத்துகளை படித்ததால்தான் என நினைந்திருந்த அவர்களுக்கும் சரி, இன்னமும் எழுத்தாளர் சங்கத்தில் அதி பயங்கரமாக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் சரி… சரியா புரிய வைத்துவிட்டார்கள்… கொடுத்தது எல்லாமே கட்டாயத்தின் பெயரிலும், ஒரு பெண்ணுக்காவது பரிசு, கொடுக்கனுமே என்ற ஆண்களின் பெருந்தன்மையாலும்தானாம்.

    என்ற தனது ஆணாதிக்க சிந்தனையை மேடையேற்றியிருந்த மலேசிய எழுத்தாளர் சங்க தலைவர்.ராஜேந்திரனின் பேச்சிக்கு எத்ரிவினையாக , தன்கூற்றை அவர் திருமப பெரும்வரை, அவர்கள் விரைவில் நடத்தவிருக்கும் சிறுகதை பரிசளிப்பு நிகழ்ச்சியினை நான் புறக்கணிக்கிறேன். என் கதையும் பரிசளிப்பில் ஒரு கதையாக தேர்வு பெற்றிருந்தாலும், அதன் வழி கிடைக்கும் RM 250.00 வெள்ளிக்காக சுரணையற்ற ஒருவனாய் பல்லைக் காட்டிக் கொண்டு முன்னே போய் முகம் காட்ட எனக்கு உடன்பாடில்லை..

    இந்த எதிர்வினையைக் கூட செய்யவில்லையென்றால் “நானும் எழுதுகிறேன்” என சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

  3. ஏற்பாட்டாளர்களின் தவறன்றி வேறென்ன!!!!யார் காதுக்கும் கேட்காமல் புலம்புவதை வரலாறு பதிவு செய்யும்.pathivu seiyanum.

Leave a Reply to தயாஜி from Seremban, Negeri Sembilan, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *