என்
பீறிடும் அழுகையும்
கனத்த கோபமும்
எப்போதும் உன்னை
ஒன்றும் செய்வதில்லை.
அவை ஒரு
கரப்பான் பூச்சியை கொள்வதற்குக் கூட
சக்தியற்றவை
கால்களும் கைகளும் அறிவுமற்ற
அவை
எப்போதும் என்னைச் சுற்றி
நான் விரும்பாத போதும்
வட்டம் போடும்
ஒரு பட்டாம் பூச்சியைப்
பிடிக்க
அவை பின்னிக்கொண்டு உருவாக்கும் வலையில்
கழுகு ஒன்று புகுந்து சென்று
இரை பிடிக்கும்
அவை உருவாக்கும் வார்த்தைகள்
அர்த்தங்கள் தேடிச்செல்லும்
ஒரு குருடனின்
தனிமை பயணத்தில் காணக்கிடைப்பவை
அவை ஒன்றும் செய்ய திரணியற்றவை
அற்ப ஆயுள் கொண்டவை
சுயமாக இறப்பவை
பின்
தன்னைத் தொடரும்
அழுகையையும் கோபத்தையும்
காண முடியாதவை
(Visited 94 times, 1 visits today)
arumai….ippadiyum oru karpanaiya???allathu yosanaiya????pinnithinge….ilainyargalukku ezhutulaga rolemodel neengal….paddayaik kilappungal navin…ungal kavithaigalil uyir irukirathu…