பெருமழையின் காரணமாக சென்னை புத்தக் கண்காட்சி அரங்கில் நீர் புகுந்து சில பதிப்பகங்களின் நூல்கள் பாதிக்கப்பட்டன. அதில் யாவரும் பதிப்பகத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் நட்டம் எனக் கேள்விப்பட்டேன். நேற்று யாவரும் பதிப்பகத்திற்கு மலேசிய நண்பர்கள் சார்பாக 50,000 ரூபாய் அனுப்பி வைத்தோம். (நண்பர் அனைவருமாக கொடுத்த மொத்தத் தொகை 2750) இது தவிர என் முகநூலைப் பார்த்து சிங்கையைச் சேர்ந்த மதிப்பிற்குறிய அழகிய பாண்டியன் அவர்கள் தன் சார்பாக 10,000 ரூபாய் வழங்கினார். இத்தொகை யாவரும் பதிப்பகம் அடைந்த நட்டத்தில் இருந்து ஓரளவு மீண்டுவர உதவும் என நம்புகிறேன்.
இந்த நன்கொடை திரட்டலை எந்த அமைப்பின் சார்பாகவும் செய்யவில்லை. மலேசியாவின் நவீன இலக்கிய வளர்ச்சிக்கு யாவரும் பதிப்பகத்தின் பங்களிப்பு முக்கியமானது. என் நூல்களைத் தவிர அ.ரெங்கசாமி, சை.பீர்முகம்மது, கோ. புண்ணியவான், சீ. முத்துசாமி, மா. சண்முகசிவா, அ. பாண்டியன், விஜயலட்சுமி, சரவண தீர்த்தா, செல்வன் காசிலிங்கம் என ஏராளமான மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை இன்று பதிப்பிப்பதும் மலேசிய எழுத்தாளர்களின் நூல்களுக்கு தமிழகத்தில் வெளியீட்டு விழா செய்வதும் யாவரும் பதிப்பகம்தான். இன்று அச்சில் இல்லாமல் போன ‘இமயத்தியாகம், நாடு விட்டு நாடு’ போன்ற சில மலேசிய நூல்களை மறுபதிப்பு செய்ய முன்வந்துள்ளதும் யாவரும் பதிப்பகத்தின் முக்கிய முன்னெடுப்பு.
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தை முன்னகர்த்த முனையும் ஒருவருக்கு பின்னடைவு வரும்போது அவர் பக்கத்தில் இருப்பதை என் கடமையாக எண்ணினேன். எல்லாவற்றையும் தாண்டி, நம் முன்னால் ஒருவர் கண்ணீர் சிந்தும்போது அதை துடைத்துவிட முனையாமல் அன்றிரவு எப்படி உறங்குவது? எனவே அவர்களின் இழப்பில் நானும் பங்கெடுக்க நினைத்தேன். என் நோக்கத்தைச் சொன்னதும் சக நண்பர்களும் என்னுடன் இணைந்துகொண்டனர். அவர்கள் இணைவால் மட்டுமே இத்தொகையை வழங்க சாத்தியமானது.
இந்நிலையில் நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுதல் அவசியமாகிறது. வெளிப்படை தன்மை மட்டுமே அமைப்புகளற்ற என்னைப் போன்றவர்கள் தடையில்லாமல் இயங்க ஆதாரமாகின்றது.
ம.நவீன் – RM 500.00
பரிமித்தா – RM 100.00
சுப்புலட்சுமி – RM 100.00
தேவகுமார்-RM 100.00
சாலினி – RM 50.00
கோகிலவாணி – RM50.00
ஸ்ரீராமுலு – 200.00
லாவண்யா – RM 100.00
அரவின் குமார் -100.00
புஷ்பவள்ளி- RM100.00
மு. நிர்மலா-RM50.00
சிவகுமார் -RM50.00
கலைமணி – RM50.00
தினேசுவரி – RM 50.00
அ.பாண்டியன் – RM50.00
மாலா – RM 50.00
சே.அருணகிரிநாதன் – RM50.00
இளம்பூரணன் – RM 50.00
தர்மா – RM 50.00
K. கிருஷ்ணன் – RM50.00
வி.அருள்நாதன் RM100.00
த. குமாரசாமி – 50.00
சு.குணசீலன் – RM50.00
மு.வசந்தா-RM 50.00
ப.மணிமாறன்-RM100.00
மீரா – RM50.00
ரேவதி- RM50.00
வீ. புவனேஸ்வரி 100.00
சுதாகர் – RM100.00
முருகன் ராமன் – RM 50.00
தயாஜி – RM 50.00
கி. பழனி – RM 100.00
யாவரும் தொடர்ந்து உற்சாகமாக இயங்க வேண்டும். மலேசிய நவீன இலக்கியத்தையும் தன் பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். தமிழில் பதிப்பகம் நடத்தி யாரும் கோடிகளில் புரள்வதில்லை. தரமான பதிப்பகங்கள் அறிவுலகின் வலுவான தரப்பு. எனவே அவை சோர்வுறுவதும் பின்னடைவதும் எழுத்துலகத்தின் வீழ்ச்சியும்தான். அதை எழுத்தாளர்களும் வாசகர்களும் என்றுமே அனுமதிக்கக் கூடாது.
வணிக இலக்கியங்களில் இருந்து விலகி நின்று இன்று பல இளம் எழுத்தாளர்களின் முதல் நூல் வெளிவர யாவரும் காரணமாக உள்ளது. அது தொடர வேண்டும். ஒரு காலத்தின் வளமான முகங்களை அடையாளப்படுத்திய பதிப்பகமாக வரலாற்றில் இடம்பெற வேண்டும்.
வாழ்த்துகள்.