ம. நவீன் சார் அவர்களுக்கு,
‘மிருகம்’ சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது இடதுபுற கண்களில் கொஞ்சமாய் துளிக் கண்ணீர் தேங்கியிருந்ததைத் துடைத்துக் கொண்டேன். மிக மிகக் கொஞ்சமாய் தேங்கியிருந்தது.
Continue readingம. நவீன் சார் அவர்களுக்கு,
‘மிருகம்’ சிறுகதையைப் படித்து முடிக்கும் பொழுது இடதுபுற கண்களில் கொஞ்சமாய் துளிக் கண்ணீர் தேங்கியிருந்ததைத் துடைத்துக் கொண்டேன். மிக மிகக் கொஞ்சமாய் தேங்கியிருந்தது.
Continue readingநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்தவாரம் இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையை எனது தளத்தில் பதிவேற்றியப் பிறகு வாசகர்களிடமிருந்தும் சக நண்பர்களிடமிருந்தும் பல்வேறுவகையான கேள்விகளை எதிர்க்கொண்டேன். அதில் முதன்மையான கேள்வி ‘ஏன் இந்த அங்கத்திற்குச் சிறுகதைகளின் ஆன்மாவை அறிதல் எனத் தலைப்பிட்டிருக்கிறீர்கள்? சிறுகதையின் நுட்பங்களை அறிதல் என்றுதானே சொல்ல வேண்டும்’ என்பதாக இருந்தது.
Continue readingஅன்பு நவீன். 2024இல் முதல் கதையென நினைக்கிறேன். வழக்கமான உங்கள் பாணியில் இருந்து மாறுபட்ட கதை. நேரடியாக யதார்த்த பாணியில் எளிமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். ஆனால் அது எளிமையல்ல. புனைவு கைவசம் வந்த கலைஞன் மொழியை கையாளும் லாவகம். தகிக்கும் இடங்களை அசால்டாக கடந்து செல்கிறீர்கள். ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை.
ராம்
Continue readingபெருமழையின் காரணமாக சென்னை புத்தக் கண்காட்சி அரங்கில் நீர் புகுந்து சில பதிப்பகங்களின் நூல்கள் பாதிக்கப்பட்டன. அதில் யாவரும் பதிப்பகத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் நட்டம் எனக் கேள்விப்பட்டேன். நேற்று யாவரும் பதிப்பகத்திற்கு மலேசிய நண்பர்கள் சார்பாக 50,000 ரூபாய் அனுப்பி வைத்தோம். (நண்பர் அனைவருமாக கொடுத்த மொத்தத் தொகை 2750) இது தவிர என் முகநூலைப் பார்த்து சிங்கையைச் சேர்ந்த மதிப்பிற்குறிய அழகிய பாண்டியன் அவர்கள் தன் சார்பாக 10,000 ரூபாய் வழங்கினார். இத்தொகை யாவரும் பதிப்பகம் அடைந்த நட்டத்தில் இருந்து ஓரளவு மீண்டுவர உதவும் என நம்புகிறேன்.
Continue readingஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அவ்வாண்டு முழுவதும் நிகழ்ந்தவற்றை அல்லது நிகழ்த்தியவற்றைத் தொகுத்துப் பார்த்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரும் செயல். வேலைக்குச் செல்வது, வாசிப்பது, உலகியல் தேவைக்கான பணிகளில் இயங்குவது என்பதைக் கடந்து என்னை நானே முழுமைப் படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் அவை வரும் காலங்களில் எத்தகைய மாற்றங்களை என்னுள்ளும் மலேசிய இலக்கியச் சூழலிலும் உண்டாக்கும் என்பதையும் ஒருவழியாகப் புரிந்துகொள்ள இந்தத் தொகுத்தல் அவசியமாக உள்ளது. அதோடு நான் செய்யாமல் விட்ட செயல்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிவுறுத்துவதாகவும் உள்ளது. எப்போதும் நிலைத்த ஓர் எழுத்துப் படிவமாக புதிய ஆண்டு தொடங்கி தூண்டுதலாகவும் அமைகிறது.
Continue readingஒரு புனைவை எழுதிக்கொண்டிருக்கும்போது சந்திக்கும் அனுபவங்கள் எல்லாம் அந்தப் புனைவு தன்னை முழுமையாக்கிக்கொள்ள உருவாக்கித்தரும் வாய்ப்புகளோ என பல சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு. சரியாகச் சொல்வதென்றால் ‘பேய்ச்சி’க்குப் பிறகு எனக்குள் இவ்வெண்ணம் வலுவாகவே வேரூன்றியுள்ளது. இதை நான் மற்றவர்களிடம் சொல்லும்போது அதை மூடநம்பிக்கையாகவும் தற்செயல்களாகவும் சொல்லிக்கடப்பர். என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடிவதில்லை.
எனக்கு நெருக்கமாக தான் இது உருவாகி உள்ளது… மனசிலாயோ… எனக்கு நிர்மலா அக்கா தான் நினைவுக்கு வந்தார்… முழுக்க முழுக்க ஒரு தனிமை பயணத்தில் ஆன்ம வடிக்கால் தேடும் சூழல். கேரளாவுக்கு ஏற்கனவே சென்றிருந்ததால் வரிகள் அனைத்தும் காட்சிகளாகவே விரிந்தன. கூடவே தனிமை பயணம் என்பதால் என்னுடைய பெலாகா பயண அனுபவங்களும் இணைந்து கொண்டு அனுபவ சுகத்தை விரிவாக்கின.
Continue readingகேரளாவிற்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். முதலாவதாக கண்ணூரில் (Kannur) எனது தாய் தகப்பன் வழி சொந்தங்களைப் பார்த்துவிட்டு, முத்தப்பனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து படிப்படியாக கோழிக்கோடு, பாழக்காடு, திரிசூர், ஏரணாக்குழம், கோட்டயம், ஆழப்புழா, கொல்லம் கடைசியில் திருவானந்தபுரம் என்று ஒரு மாதத்திற்கு பயணம் செய்தேன். இரண்டாம் முறை கண்ணூர் மாத்திரம். எனவே, நவீன் கண்ட கேரளாவை நானும் கண்டிருந்தேன்.
Continue readingஇயற்கையோடும் செம்மண் வாசனையுடனும் கதையோட்டம் படிப்பதற்குச் சுவாரிசமாக இருந்தாலும். அவ்வூர் சப்த கன்னிகள் தோன்றிய விதத்தைப் படிக்கும் போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகிறதே எனலாம். ஒவ்வொரு கன்னியின் தோற்றக் கதை மனதில் திகில் வயப்பட செய்கிறார் கதையாசிரியார்.
Continue readingஇந்தப் புத்தாண்டில் நண்பர்களுடன் லங்காவி தீவில் இருக்கிறேன். லங்காவி உற்சாகத்துக்குக் குறைவில்லாத தீவு. பூலாவ் பெசார் போலவோ பங்கோர் போலவோ அங்கே செயலற்று அமருவதெல்லாம் சாத்தியப்படாது. 2021ஐ உற்சாகமாக வரவேற்க அந்தத் தீவில் தஞ்சமடைவதே சரியெனப்பட்டதால் ஒரு மாதத்திற்கு முன்பே இப்படி ஒரு பயணத்திட்டம் உருவானது. மேலும் எனது கொண்டாட்டம் என்பதே வருடத்தின் முதல் நாள் மட்டுமே. வேறு எந்த பண்டிகைகளையும் நான் கொண்டாடுவதில்லை.
Continue reading