
இயற்கையோடும் செம்மண் வாசனையுடனும் கதையோட்டம் படிப்பதற்குச் சுவாரிசமாக இருந்தாலும். அவ்வூர் சப்த கன்னிகள் தோன்றிய விதத்தைப் படிக்கும் போது மனம் அதிர்ச்சிக்குள்ளாகிறதே எனலாம். ஒவ்வொரு கன்னியின் தோற்றக் கதை மனதில் திகில் வயப்பட செய்கிறார் கதையாசிரியார்.
மாரியின் பேச்சில் என்னதான் கரடுமுரடு வெளிப்பட்டாலும் மனதில் இரக்க குணம் இருப்பதைப் பசிவின் இறப்பைக் கூறும் தருணத்தில் படிப்போரின் மனதை நெகிழ வைப்பதன் மூலம் உணரவைக்கிறார். சரண் தன்னுள் ஏற்படும் அச்சத்தை வெயிபடுத்தாமல் பல உத்திகளைக் கையாண்டு மாரியிடமிருந்து கன்னிகளைப் பற்றிய தகவலை வாங்குவதிலே குறிகோளாக செயல்பட வைக்கிறார் எழுத்தாளர். மாரி ஒவ்வொரு சம்பவங்களையும் கன்னிகளுடன் தொடர்புபடுத்தி கூறும் விதமும் ஆர்வமும் புவனா கதையில் காட்டிய விதம் படிப்போர் மனதில் அவருக்கும் அக்கதையில் சற்று தொடர்பு இருக்குமோ என்று எண்ணவைக்கிறார் கதையாசிரியர்.
புஷ்பவள்ளி