கேரளாவிற்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். முதலாவதாக கண்ணூரில் (Kannur) எனது தாய் தகப்பன் வழி சொந்தங்களைப் பார்த்துவிட்டு, முத்தப்பனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து படிப்படியாக கோழிக்கோடு, பாழக்காடு, திரிசூர், ஏரணாக்குழம், கோட்டயம், ஆழப்புழா, கொல்லம் கடைசியில் திருவானந்தபுரம் என்று ஒரு மாதத்திற்கு பயணம் செய்தேன். இரண்டாம் முறை கண்ணூர் மாத்திரம். எனவே, நவீன் கண்ட கேரளாவை நானும் கண்டிருந்தேன்.
ஆனால்,நவீனுடைய கண்களும் மனதும் பாய்ந்தது போல என் மனம் பாயவில்லை கேரளாவின் மீது. நவீன் தன்னை பயணி அல்ல, தான் வெறும் எழுத்தாளன் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தார். உண்மை அதுவல்ல. நவீன் என்கிற எழுத்தாளனுள்ளே ஒரு யாத்திரிகனை அடயாளம் கண்டேன். யாத்திரிகர்களுக்கான மட்டுமே உரித்தான ஒரு style, யாத்திரிகர்களுக்கான மட்டுமே உரித்தான பண்பு , யாத்திரிகர்களுக்கான மட்டுமே உரித்தான நிதானம், இவை அனைத்தையும் அவர் எழுத்தில் கண்டேன். அவைதான், இந்த மனசிலாயோ புத்தகத்திற்கான வெற்றி என்றும் சொல்வேன்.குறிப்பாக, தாயார் பாதம் பக்கம் 53, என்னை மிகவும் கவர்ந்தது. டெய்ஸி போன்ற தாய்மார்களின் அரவணைப்பு இது போன்ற பிராயாணங்களில் போற்றத்தக்கச் செயல் என்றாலும், அந்த இடத்தில் நவீன் என்கிற யாத்திரிகனின் மறுசெயல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, என மனதை மெலிதாய் கிள்ளிச்சென்றது.நவீன் எழுதியிருப்பது: அர்ச்சனை செய்த பூவை அவர் கையில் கொடுத்து “ உங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் ஆகும். இது அவருக்குக்காகச் செய்த அர்ச்சனை” என்றேன்.இந்த புத்தகத்தின் உச்சம் இந்த இடம் என்றே சொல்வேன்.
“மனசிலாயோ എനിക്ക് മനസ്സിലായി നവീൻ.”
அன்புடன்,சுரேஷ் நாராயணன்.