எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு, உங்கள் கதைகளை படித்த ஒரு வாசகனின் கடிதம். திரு.ஜெயமோகன் அவர்களின் வலைத்தளம் வழியாகவே, வல்லினத்தில் நீங்கள் எழுதிய கதைகளை முன்னரே படித்திருக்கிறேன்.
இந்தியாவில் பிறந்த நான் , வருடம் 2002 இல் இருப்பது சிங்கப்பூரில்! புயலிலே ஒரு தோணி, சயாம் மரண ரயில் போன்ற நாவல்களை சிங்கையின் நூலகங்களில் வாசித்து உணர்ந்து இருக்கிறேன்.
சிங்கையில் இருப்பதாலோ என்னவோ, அந்த நாவல்களை எனக்கு நெருக்கமாக தோன்றியிருக்கிறது. உங்கள் எழுத்தும் அப்படியே தோன்றுகிறது.
இன்றுதான் இப்பொழுதுதான் டிராகன் கதையை வாசித்து முடித்தேன். பலவிதமான கலவையான உணர்வுகளை கிளர்த்தியது கதை! சயாம் மரண ரயில் நாவலின் ஒரு அடர்த்தியான கிளைக்கதை என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை!
கதையை பகுப்பாய்வு செய்து, அது தந்த உணர்வுகளை நான் இழக்க விரும்பாததால், என் கடிதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.
மிக்க நன்றி ! உங்கள் எழுத்துப்பணியில் வீரியமுடன் இயங்க இயற்கை நல்ஆசிகளை வழங்கட்டும்! மற்றபடி – இதுவே ஒரு எழுத்தாளருக்கு என் முதல் வாசகர் கடிதம் !
குணா
சிங்கப்பூர்
( சீனா – இப்போதைக்கு பணி நிமித்தமாக )