மாலை ஐந்து மணிக்கு வேன் புறப்படுவதாகத் திட்டம். எதிரில் பாதையை மறைத்து நின்ற கார் ஒதுங்கிச் செல்ல காத்திருந்ததில் 5.15 ஆனது. வழியெங்கும் சாலை நெரிசல். களைக்கப்பட்ட கோலிக் குண்டுகள் போல வாகனங்கள் நான்கு பக்கமும் உருண்டு தங்களுக்கான பாதைகளில் புகுந்தன. அப்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். எந்த நெருக்கடியான சூழலிலும் ‘ஹாரன்’ சத்தம் வாகனங்களிலிருந்து எழவே இல்லை. மக்கள் இயல்பாகவே ஒருவகை புரிந்துணர்வுடன் செயல்பட்டனர். எரிச்சலும் பரபரப்பும் இன்னும் ஒரு தொற்றுவியாதியாக அங்குப் பரவாமல் இருந்தது.
Continue reading