மோகங்கள்

எம்.ஏ.இளஞ்செல்வன் நாவல்கள்: பாலுணர்வின் கிளர்ச்சி

1

மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ.இளஞ்செல்வனின் ஆளுமை வலுவானது. மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூலை (நெருப்புப் பூக்கள் – 1979) வெளியிட்டவர். நவீன இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி மலேசியாவில் முதல் புதுக்கவிதை கருத்தரங்கை (1979) நடத்தியவர்.  அந்தக் கருத்தரங்கில் இருபத்து இரண்டு கவிஞர்களின் புதுக்கவிதைகளை நூலாகத் தொகுத்து (புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள் – 1979) நவீன இலக்கியச் சிந்தனை மூலம் வெளியிட்டார். மலேசியாவில் புதுக்கவிதை வளரத்தொடங்கிய அந்தக் காலத்தில் மரபுக்கவிஞர்களிடமிருந்து வந்த விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றியதன் வழி அன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். அவ்வகையில் இளைஞர்கள் தொடர்ந்து புதுக்கவிதையில் ஆர்வம் காட்ட ஒரு கவர்ச்சியான முன்னோடியாக இருந்தவர். ஆம்! இளஞ்செல்வனிடம் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்தது. ‘இந்தியன் மூவி நியூஸ் எனும் சினிமா இதழில் வெளிவந்த எம்.ஏ.இளஞ்செல்வனின் படைப்புகளுடன் பிரசுரமாகும் அவரது படங்கள் நட்சத்திர முகத்துக்கு ஈடானது’ என கோ.புண்ணியவானின் பதிவு கவனிக்கத்தக்கது (மறக்கப்பட்ட ஆளுமை).

Continue reading