
வல்லினம் குழுவினரால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ‘கலை இலக்கிய விழா’வின் உற்சாகம் இவ்வருடமும் தொடங்கிவிட்டது. வழக்கமான நூல் வெளியீடுகளோடு செப்டம்பர் மாதம் முழுக்கவே இலக்கிய கலந்துரையாடல்களாக நிகழ்த்த இவ்வருடம் வல்லினம் திட்டமிட்டுள்ளது. வல்லினம் பட்டறை ‘செம்பருத்தி’ இதழ் ஆதரவுடன் ‘வல்லினம்’ தொடர்ச்சியாக நடத்திவரும் பட்டறையுடன் இவ்வருட கலை இலக்கிய விழா தொடங்குகிறது. பேராசிரியர் அ. மார்க்ஸ்…