இமயமலைத் தொடரில் பத்தாவது உயர்ந்த சிகரமான அன்னப்பூர்ணாவை நோக்கி ஏறும் நடை பயணம் அன்று காலையிலேயே தொடங்கியது. நேபாளின் தலைநகரமான காத்மாண்டு நகர நெரிசலிலிருந்து எங்களின் பேருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு மலை பகுதிக்குள் நுழைய ஆரம்பித்தது. போதுவாக மலை பாதையில் பயணிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வாந்தி, தலைச்சுற்றல், பசியின்மை…
Author: கோகிலவாணி
காலச்சக்கரம்
ஒரு நாள், பிரபல ஓவியரான ராஜா ரவிவர்மா சந்தையில் நடந்து சென்றார். ஒரு இளம் வயது பெண்மணி அவர் அருகில் ஓடி வந்து, “நான் உங்களின் மிகப் பெரிய ரசிகை. உங்கள் ஓவியங்களுக்கு நான் அடிமை,” எனச் சொல்கிறாள். அதற்கு ரவிவர்மா சிறு புன்னகையுடன் தலையை மட்டும் அசைக்கிறார். சற்றும் தாமதிக்காமல், அந்தப் பெண்மணி அவளின்…
ஒரு கலைஞன்; ஓர் ஓவியம்; ஒரு திரைப்படம்
தங்கா ஒரு தொன்மையான ஓவியக் கலை. இது திபேத்திய பௌத்த ஓவியத்தின் ஒரு வடிவமாகும். பெளத்த மதத்தில் தங்கா ஓவியம் ஓர் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. இந்த ஓவியங்களைப் பருத்தி அல்லது பட்டுப் துணியில் வடிப்பர். பௌத்த மத தெய்வங்கள், புராணக் காட்சிகள் அல்லது மண்டலாக்ககளைச் சித்தரிப்பவை இந்த ஓவியங்கள். தங்கா ஓவியம் அழகான…
கடவுளும் கலையும்
குளியலை முடிப்பதற்குள் சனிரா பஜ்ராச்சார்யாவிடமிருந்து (chanira bajracharya) இரண்டு முறை அழைப்புகள் வந்திருந்தன. விரைவாகக் குளியலை முடித்து, மிகுந்த உற்சாகத்துடன் அவளுக்கு மீண்டும் அழைத்தேன். அவளின் குரலை முதன் முறையாகக் கேட்கப் போகிறேன்; எந்த இடையூறும் இருக்கக் கூடாது என உறுதி செய்து கொண்டே தொலைப்பேசியைக் காதில் ஒத்திக் கொண்டேன். இரு முறையும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.…
பச்சை நாயகி
நேபாள் என்றாலே எனக்குப் புத்தர்தான் நினைவுக்கு வருவார். நேபாளத்தில் புத்தர் பிறந்த இடம் லும்பினி. லும்பினி அதற்கு மட்டும் பிரபலம் அல்ல. பல நாட்டு புத்த நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பௌத்த மடாலயங்கள் லும்பினியில் உள்ளன. அங்குச் சென்றால், ஒவ்வொரு நாட்டிலும் பௌத்த மத வழிபாடுகள் எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன என்பதைக் காணலாம். பெரும்பாலோர் புத்தர் வழிபாடு…
மண்டலா – 2
மண்டலா 1 படிவம் நான்கில் அறிவியல் துறையில் (Science Stream) படிக்க தகுதியிருந்தாலும், கலையியல் துறையைத் (art stream) தேர்ந்தெடுத்திருக்கும் என்னை அடையாளம் காண டீச்சர் கோர் (Khor) அன்று வகுப்பறைக்கு வந்தார். அவர் கலைக் கல்வி பாட ஆசிரியர். ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரின் சுவரோவியம் பள்ளி முழுதும் நிரம்பியிருக்கும். நான் கலையியல்…
மண்டலா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுபாவிடமிருந்து ஒரு முகநூல் பதிவு. அவள் பதிவிட்டிருந்த படத்தைப் பார்த்ததும், பணிச்சுமையினால் ஏற்பட்ட களைப்பு எல்லாம் பறந்தோடியது. கண்கள் அகலமாக விரிந்தன. முகம் புன்னகையை ஏந்திக்கொண்டது. ஒரு குளத்தில் எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் மிதக்கும் நீர் மலர்கள் போல மனம் அவ்வளவு அமைதியானது. அவள் அனுப்பிய படத்தை மிக உன்னிப்பாகப்…
யோக முத்ரா
காலை 6.30 மணிக்கெல்லாம் கிளம்பி யோகா மெத்தையை (Yoga Mat) எடுத்துக் கொண்டு வீட்டின் பால்கனியைத் திறந்தேன். காலை பனியைப் பார்த்து அதிக நாளாகிவிட்டது. பனி எங்கும் படர்ந்திருந்தது. பனியைப் பார்த்ததும் மனதில் ஓர் அமைதி பிறந்தது. அது யோகா செய்வதற்கான மனநிலை. உடனே வாகனத்தை நோக்கி நடந்தேன். என் வாகனம் முழுக்க பனித்துளிகளால் ஈரமாக…
இசையும் வரியும்
தியாகராஜ சுவாமிகள் இயற்றிய ‘கலிகியுண்டேகதா’ எனும் கீரவாணி ராகத்தில் அமைத்த ஒரு புகழ் பெற்ற தெலுங்கு கிருதியைச் சங்கீத ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். அன்றையச் சங்கீத வகுப்பு கீரவாணி ராகத்தால் சுவாரசியமாக இருந்தது. ஆனால் என் மனதில் நிறைய குழப்பம்; கோபம். சங்கீத வகுப்பு தொடங்கும் முன் அம்மா என்னைத் திட்டியிருந்தார். என்னைத் திட்டினால் கூட…
கீரவாணி
காலையிலிருந்தே ஒரே காற்றும் மழையுமாக இருந்தது. சங்கீத வகுப்பு இருக்கும் நாளில் மழை பெய்தால் எனக்கு கொஞ்சம் சலிப்பு வரும். காரணம் சங்கீத ஆசிரியர் ஈப்போ மாநிலத்தைச் சேர்ந்தவர். குளிர் தாங்க மாட்டார். அதுவும் 1997-இல் கேமரன் மலை பசுமை மாறாமல் இருந்தக் காலம். “எப்படிதான் இந்தக் குளிருல இருக்கீங்களோ? அதுவும் குளிர் சட்டைக் கூட…