Author: எம்.ரிஷான் ஷெரீப்

கோணல் பிரார்த்தனை

சபா சித்தப்பாவிடம் கடிதத்தைக் கொடுத்தபோது, அவர் திடீரென, என் கண் முன்னே முதியவராக மாறி விட்டதைப் போலத் தோன்றினார். அவரது முகம் முழுமையாக மாறிப் போனதோடு, எனது தலைக்கு மேலாக தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தார்.

தெரியாதவை (சிங்கள மொழிப்பெயர்ப்புச் சிறுகதை)

சித்தாண்டி I “நாங்க திலீபவுக்கு சித்தாண்டியில கல்யாணம் முடிச்சுக் கொடுப்பமே.” “ஏனது?” “இஞ்ச பார்.  உன்னப் போலில்ல… சித்தாண்டிலதான் நல்ல வடிவான பொம்பளப்புள்ளகளக் கண்டிருக்குறன் நான்.” “அம்மா… இங்க பாருங்க… அப்பா சொல்றது கேட்குதா? சித்தாண்டித் திருவிழாக்களுக்கு மட்டும் அப்பாவை அனுப்பிட வேணாம்.” அப்பா திண்ணையில் அமர்ந்திருந்து வெற்றிலை பாக்கு இடிக்கும்போதுதான் இவ்வாறு என்னைக் கிண்டல்…

கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

அன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல்களும் எப்போதுமே…

கிணற்றிலிருந்து மீண்டவள்

“அதுக்கு உங்களை மாதிரி சீதேவியப் பெத்திருக்கணும்மா. எனக்கு அதுக்கெல்லாம் கொடுப்பின இல்ல.” தங்கம் என்னைப் பார்த்துக்கொண்டே உம்மாவிடம் சொன்னபோது எனது முகத்தில் என்ன உணர்ச்சியைக் கொண்டு வருவதென்று எனக்குத் தெரியவில்லை. அவள் சொன்னது ஒரு மெல்லிய புகையைப்போல, அந்த இடமெங்கிலும் பரவியது. அந்தச் சமையலறையை அடைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதைப் போலத்தோன்றியது. சில்லறைக்காசைச் சுரண்டுவது போல…

இரை

இரண்டாவது தடவை அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்திருக்கக் கூடாது. அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாகி விட்டது. முதல் தடவை எந்தப் பிரச்சினையும் இல்லை. தாகம் அடங்கவில்லை போலிருந்தது. இரண்டாவது தடவை படுத்துக் கொண்டே, இருட்டில் போத்தலை வாயில் சரித்தபோது அளவுக்கதிகமான தண்ணீர் வாய்க்குள் புகுந்து உடனடியாக விழுங்கிக் கொள்ளமுடியாமல் புரையேறி விட்டது. தொண்டை வழியே உள்ளே…

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். சிறையிலிருந்தபோது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டுசெல்லப் போதுமான பணம் கூட…