Category: குறுநாவல்

பட்டவன்

அங்கு ஒன்றாக சென்று கொண்டிருந்தோம். நானும் நடேசனும். நிறைந்த நிலவு. சீவிடுகளின் சத்தம். எப்பொழுதும் போல ஊரும் கரம்பையும்  வேறு வேறாவதன் அதிசயத்தை அப்பொழுதும் புதியதென உணர்ந்தேன். இரவுகளில் இந்த வேறுபாடு இன்னும் கூடுதலாக தெரிகிறது. விளக்குகள் அனைந்து ஊரே உறங்குவது போலவும் வயல்வெளி எதையோ நோக்கி திறந்திருப்பது போலவும் உள்ளது.  வானத்திலிருந்து பறவைகள் கிளைக்கு…

உயிர்மரம்

1 பூத்த மலர் சொரியும் பூவனத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லாம் குழந்தைகளும் சிறார் சிறுமிகளும். சிதறும் நெல்மணி கொத்தும் பறவைகள் என ஓசை. அங்கு அவர்கள் யாருக்கும் பெயரில்லை, பெயர் வைக்கும் வழக்கமும் அப்பொழுதில்லை. பெரிய உடல் கொண்டிருந்தவர்கள், விளையாடும் அக்குழந்தைகளை குட்டித் திரளாகவே பார்த்தனர். மக்கள் தங்களையும் திரளாகவே உணர்ந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும்…

விஷக் கிணறு

1 “சரியான…காட்டெருமை” வண்டியின் கதவடைத்து இறங்கும்போது முணுமுணுத்தது மீனாவின் காதில் விழாது என எண்ணிக்கொண்டேன். ஆனால் ஏதோ லேசாக விழுந்திருக்க வேண்டும். நான் இப்போதெல்லாம் பெரும்பாலும் முணுமுணுப்பதால்  இயல்பாகவே அதற்கு செவிகூரத்தொடங்கி இருந்தாள். பின்னிருக்கையிலிருந்து இறங்கியபடி “என்னப்பா”என்று முகத்தில் குழப்பத்தை தேக்கியபடி என்னை நோக்கினாள். “ஒண்ணுமில்லம்மா… வண்டி நல்லா தாட்டியமா இருக்குன்னு சொன்னேன்”என்றேன். “ஃபோர் வில்லர்…

உயிர்க்காடு -இறுதி பாகம்

திடுமென ஒலித்த ஒரு காரின் ஹார்ன் சத்தம் அவளை எழுப்பியது. ரோட்டைத் தாண்டி ஓடிய, ஒரு சிறுவிலங்கு அந்த வண்டியிலிருந்து தப்பி, அவள் இருக்கும் குகையை நோக்கிப்புகுந்து மறைந்தது. ‘இன்னும் ஏன் சில்வன் வரவில்லை என்று யோசனையுடன் ஆழ்ந்தாள் மெலிசா. இரவு பத்தரை மணி அளவில், அவளுடைய கைத்தொலைப்பேசிக்குச் செய்தி அனுப்பியிருந்தான் சில்வன். ‘இரவு 4…

உயிர்க்காடு

“நான் கீழேதான் போகிறேன், எலியாஸ் என்னைப் பொதுத் தொலைபேசியிலிருந்து, அவனுக்குப் போன் போடச்சொல்லியிருக்கிறான். இரு, வந்துவிடுகிறேன், அதற்குள்,  முடிந்தால் சூசனை இங்கிருந்து அனுப்பிவிடு. அவள் இங்கு இருந்தால், நடப்பது யாவற்றையும் அவள் தெரிந்துகொண்டால், உனக்கும் எனக்கும் எல்லாவிதத்திலும் பிரச்சனைதான்” என்று எரிந்து விழுந்தான் ரானே. “அவளை விடு, அவள் அதிகாலையில்தான் நன்றாகத் தூங்குவாள். அந்த அறையின்…

உயிர்க்காடு – 2

வேறு வழியில்லை, தான் கிளம்பித்தான் ஆகவேண்டும்’ என்று முடிவுசெய்தவுடனே, மனதளவில், யு.எஸ்.எஸ் ட்ரூமேனை, அவனேகூடத் தேற்றிக்கொள்ள முடியாதிருந்தான். இந்தவாழ்க்கையை சில மாதங்களுக்காகவது வாழ்ந்துபார்க்க வேண்டும் என்றுதான் அங்கு வந்திருந்தான் அவன். அங்கு வந்து, மூன்று வாரங்களாகிவிட்டன. மூன்று வாரங்களுக்குள் நான்கு மூத்த மருத்துவர்களும் ஆறு பயிற்சிமருத்துவர்களும் எட்டு செவிலியர்களும் அவனைச் செய்யாத பரிசோதனை எல்லாம் செய்து…

உயிர்க்காடு

ரானே திகைத்தான். என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. தலையை பெரிய உருளைக்குள்ளே விட்டு மாட்டிக்கொண்டது போல உடலும் மனமும் வலித்துக்கிடந்தன. இந்தநாள், நல்ல நாளாக விடியவில்லை. லேசாகத் தூறிக்கொண்டிருந்த வானம், மென்புழுக்கத்தை ஏற்றியதும் வியர்வையும் அதிகமாகியது. ‘எப்படி இதைச் சரிசெய்யப்போகிறோனோ’ என்று மிகவும் பதட்டமானான். மனதின் உள்ளுக்குள் ஒரு சுடுநீராவிக்குடிலுக்குள் அமர்ந்துள்ளது போலிருக்க, ’நான் யாருக்கும்…