Tag: அ.பாண்டியன்

‘கரிப்புத் துளிகள்’ நாவலில் ஒரு பகுதி

(மிக விரைவில் வெளியீடு காணப்போகும் எழுத்தாளர் அ. பாண்டியன் எழுதிய கரிப்புத் துளிகள் நாவலின் ஒரு பகுதி) ஐயாவுவிடம் மறுபடியும் மறுபடியும் தேவதைகள் பற்றிக் கேட்பது சிறு பிள்ளைபோல இருக்கும் என்று தயங்கினான். ஆனாலும் மோதிச் சிதறும் அலையோசையும், நிலவொளி படிந்த கடற்கரையும், பெரு நிலவும், எங்கிருந்தோ கரையேறி வந்துகொண்டிருக்கும் கடலாமைகளும் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்தன.…

தருக்கத்தால் நிலைக்கொள்ளும் படைப்புலகம்

அ. பாண்டியனின் இலக்கியப் பங்களிப்பைப் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என மூன்று முக்கியமான புலத்திலிருந்து அணுகலாம். அவரது புனைவுகள் வரலாற்றின் நுணுக்கமான இடைவெளிகளை நிரப்புவதாலும்; அ-புனைவுகள் கொண்டுள்ள சீரான தருக்கப்பார்வையாலும் வலுவான தனித்த இடங்களை நிறுவிக்கொண்டவை. ஒரு குறுநாவல் சில சிறுகதைகதைகள் எழுதியுள்ள அ. பாண்டியனின் கட்டுரைகள் பலவும் மலேசிய…

புல்லின் விதைகள்

ஒருதுளி ஈரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றில் பறந்து வருகின்ற புல்லின் விதைகள் ஈரத்தைக் கவ்விப் பிடித்துத் துளிர்த்து விடுகிறது. அப்படிக் காற்றில் அலைந்து வரும் விதைகள் சிமிண்டு பாவிய தரையின் உடைவிடுக்கில் கூட பற்றிக்கொள்வதைக் கண்டிருக்கின்றேன். வரலாற்றுத் தருணங்களும் அவ்வாறானதுதான். அதன் கதையாடல்களுக்கு நடுவில் உயிர்ப்புள்ள நுண்மையான பகுதிகள் புனைவுக்கான சாரமாக எழுத்தாளர்களால் விதைக்கப்படுகிறது.…

‘ரிங்கிட்’ – மதிப்பு வீழாத நாணயம்

மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருடைய மரணம் நிகழ போவது அவருக்கு மட்டுமே தெரியும். அது எப்படி இருக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் செத்து மீண்டும் பிழைத்து வந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படியொரு நிகழ்வு நடக்கப்போவது இல்லை. பிறகு எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நல்ல எழுத்தாளனால் மட்டுமே சொல்ல…

ரிங்கிட் நாவல் விமர்சனம்: நிகழ்த்திக் காட்டும் வரலாறு

வரலாற்றுநாவல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிக் கூறுகிறார். ”வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான். அந்தத் திருப்பிச்சொல்லும் முறையில் நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் ஒழுங்கு, நிகழ்ச்சிகளைக் குறியீடுகளாக ஆக்கும் நுட்பம் போன்றவற்றினூடாக ஆசிரியன் உருவாக்கும் மையநோக்குதான் அதைக் கலைப்படைப்பாக ஆக்குகிறது”. இப்படியான ஒரு முயற்சியிலிருந்து சற்று விலகிப் போயிருக்கிறது ஆசிரியர் அ.பாண்டியனின் ‘ரிங்கிட்’ நாவல். வல்லினம் நடத்திய குறுநாவல்…