“நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக் கதை என செல்வம் சொல்வதே எனக்குக் கடும் கோபத்தை மூட்டியது. நான் ஒன்றும் பேசவில்லை. வார்த்தைகள் ஏதும் தடித்துவிட்டால் குலதெய்வத்தைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லாமல் போய்விடலாம். என்னைப்போலவே கோபக்காரன்.
நிமிர்ந்து பொன்னியின் படத்தைப் பார்த்தேன். கடந்த தீபாவளிக்கு இரண்டு கால்களும் இருக்கும்போது துடைத்தது. கனகாம்பர மாலை காய்ந்து பழுப்புச் சங்கிலியாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் அவளுக்குக் கடைசி மாலையாக இருக்கலாம். செல்வம் என் படத்தைப் பொன்னிக்குப் பக்கத்தில் மாட்டிவைத்தாலே பெரிய கொடுப்பினைதான். நினைவு வந்தால் பார்த்துக்கொள்ள படங்களைக் கைப்பேசியில் சேகரிக்கும் தலைமுறை அவன். நான் நினைவுகள் உருவாகப் படங்களைச் சுவர்களில் மாட்டிவைப்பவன்.


பக்கிரி உள்ளே நுழைந்ததும் வீட்டிலிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். வந்து ஒருமாதம் ஆகவில்லை. அதற்குள் சாமியின் மனதில் இடம்பிடித்துவிட்ட பக்கிரியின்மேல் அவர்களுக்குக் கோபமும் பொறாமையும் ஏற்பட்டது. வெற்றிலை சிவப்பு உதடுவரை ஒழுகியிருந்தது. கால்களில் பலமிழந்தவனைப்போல சடாரென அமர்ந்தான்.

ருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக இருந்த மசாஜ் நிலையங்களைப் பார்ப்பதுண்டு. கடும் முதுகு வலியில் அதன் போஸ்டர்களும் அறிவிப்புகளும் மசாஜ் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினாலும் கூச்சம் வந்து தடுத்துக் கொண்டிருந்தன.