Month: February 2010

திற‌ந்தே கிட‌க்கும் டைரி…38

இள‌ஞ்செல்வ‌ன் இல்லாத‌ வெறுமையை போக‌ போக‌த்தான் என்னால் உண‌ர‌ முடிந்த‌து. சிறுக‌தை ப‌ற்றியோ க‌விதை ப‌ற்றியோ இல‌க்கிய‌ம் ப‌ற்றியோ பேச ஆளில்லாம‌ல் த‌வித்தேன். சுற்றியிருந்த‌ அனைவ‌ருமே இல‌க்கிய‌ வாச‌ம் இல்லாம‌ல்தான் இருந்த‌ன‌ர். அம்மா தொட‌ர்க‌தைக‌ள் ப‌ற்றி பேச‌ ம‌ட்டுமே ஆர்வ‌மாக‌ இருந்தார்.அதுவ‌ரையில் என்னுட‌ன் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பேசிக்கொண்டிருந்த‌ கும‌ர‌ன் அண்ண‌ன் க‌ல்லூரி ப‌டிப்பில் தீவிர‌மாக‌ இருந்தார்.நான் உரையாட‌ ம‌னித‌ர்க‌ளைத் தீவிர‌மாக‌த் தேடிக்கொண்டிருக்கும் போது கோ.புண்ணிய‌வானின் நினைவு வ‌ந்த‌து. Continue reading

திறந்தே கிடக்கும் டைரி – 37

இள‌ஞ்செல்வ‌னின் ம‌ர‌ண‌ம் குறித்து பேசுவ‌து பெரும் த‌டையாக‌வே இன்னும் ம‌ன‌தில் இருக்கிற‌து.ஒவ்வொரு முறை அவ‌ர் ப‌ற்றி பேசும் பொழுதும் அவ‌ர‌து ம‌ர‌ண‌த்தில் வ‌ந்து முடியும் உரையாட‌ல்க‌ள் அமைதியிழ‌க்க‌ வைக்கிற‌து. அவ‌ர‌து இல‌க்கிய‌ம் குறித்து விம‌ர்சிக்க‌வோ இன்றைய‌ வாசிப்பில் த‌ர‌ம் பார்க்க‌வோ வாச‌க‌ர்க‌ளுக்கு எல்லா உரிமையும் உண்டு.ஆனால் நான் வெறும் இல‌க்கிய‌வாதியாக‌ ம‌ட்டும் இள‌ஞ்செல்வ‌னைப் பார்க்க‌வில்லை.கையில் ஒரு வெள்ளிக்காப்போடும் , க‌ழுத்தில் அரை இஞ்ச் த‌டிப்புக்கு ஒரு வெள்ளிச்ச‌ங்கிலியும் எந்நேர‌மும் க‌றுப்பு ப‌னிய‌னோடும்  க‌ண்ணில் திமிர் பிடித்து சுற்றிக்கொண்டிருந்த‌ என்னை இள‌ஞ்செல்வ‌‌னைப் போல் அணுகிய‌வ‌ர் அப்போது யாரும் இல்லை.என‌க்குள் இல‌க்கிய‌ம் உள்ள‌து என‌ காட்டிய‌வ‌ர் இள‌ஞ்செல்வ‌ன்.அதையும் மீறி ந‌வீன‌ இல‌க்கிய‌த்தின் ந‌க‌ர்ச்சிக்கு அவ‌ர் ப‌ங்க‌ளிப்பு க‌ணிச‌மான‌து என்ப‌தை யாராளும் ம‌றுக்க‌ இய‌லாது.

Continue reading