Month: April 2010

என‌து நேர்காண‌ல்

மாற்றுப்பிர‌தி எனும் த‌ள‌த்தில் ந‌ண்ப‌ர் றியாஸ் குரானா நேர்காண‌ல் ஒன்று செய்தார். என‌து சில‌ க‌ருத்துக‌ளைப் ப‌கிர‌ அப்பேட்டி வாய்ப்பாக‌ இருந்த‌து.
ந‌ன்றி,
ம‌. ந‌வீன்

01.  உங்களை கொஞ்சம் அறிமுகம் செய்யுங்கள் தோழர்…

த‌மிழ்ப்ப‌ள்ளி ஆசிரிய‌னாக‌க் க‌ட‌ந்த‌ 5 ஆண்டுக‌ளாக‌ப் ப‌ணியாற்றுகிறேன். ஆசிரிய‌ர் தொழிலைப் பிடித்துத் தேர்வு செய்ய‌வில்லை. எதிர்கால‌ ம‌லேசிய‌ ச‌ந்த‌தியின‌ரையும் இந்த‌க் க‌ல்வித் திட்ட‌ம் சிந்திக்கும் ம‌னித‌ர்க‌ளாக‌ உருவாக்கும் வ‌கையில் அமைக்க‌ப்ப‌ட‌வில்லை. உய‌ர்ர‌க‌க் கூலிக‌ளை வேண்டுமானால் உருவாக்க‌லாம்.இந்நிலையில் ம‌லேசிய‌ அடித்த‌ட்டுத் த‌மிழ் ம‌க்க‌ளின் ம‌ன‌ம் செய‌ல்ப‌டும் வித‌த்தை அறிந்து கொள்ளும் க‌ட‌மை ஓர் எழுத்தாள‌னாக‌ என‌க்கு உண்டு என‌ ந‌ம்புகிறேன். தீவிர‌மாக‌ச் சிந்திக்கும் போக்கு உள்ள‌ ஓர் ச‌முதாய‌த்தை உருவாக்க‌த் த‌மிழ்ப்ப‌ள்ளி என‌க்கு ஓர் க‌ள‌மாக‌ உள்ள‌து. ஏற‌க்குறைய‌ நான் செய‌ல்ப‌டும் இல‌க்கிய‌ம், இத‌ழ், அக‌ப்ப‌க்க‌ம் என‌ அனைத்துமே இந்த‌ச் சிந்த‌னையை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌தே. Continue reading

திற‌ந்தே கிட‌க்கும் டைரி…42

இத‌ற்கிடையில் ந‌ய‌ன‌த்திற்கு நான் அனுப்பியிருந்த‌ க‌விதையும் பிர‌சுர‌ம் க‌ண்டிருந்த‌து. கோ.புண்ணிய‌வானின் சொல்லுக்குக் கிடைத்த‌ ம‌ரியாதை அது. ந‌ய‌ன‌த்திற்குச் சென்று அத‌ன் ஆசிரிய‌ரைக் காண‌ இந்த‌ ஒரு க‌விதை போதுமென‌ க‌ருதி ஓவிய‌ர் ராஜாவை அழைத்தேன். ‘ந‌ய‌ன‌ம்’ என்று சொன்ன‌வுட‌ன் ஓவிய‌ர் ராஜா ச‌ட்டென‌ ம‌றுத்தார். ந‌ய‌ன‌ம் ஆசிரிய‌ர் இராஜ‌குமார‌னின் இல‌க்கிய‌ ஆளுமையைப் ப‌ற்றி சிலாகித்துக் கூறிய‌வ‌ர் ,அவ‌ர் த‌னிமையில் இருக்க‌ விரும்புப‌வ‌ர் என்றும் புதிய‌வ‌ர்க‌ளைச் ச‌ந்திக்க‌ மாட்டார் என்றும் கூறினார். இராஜ‌குமார‌ன்தான் ‘புதுநில‌வு’ என‌ அறிந்த‌ போது என‌க்கு பெரும் அதிர்ச்சியாக‌ இருந்த‌து. Continue reading

திற‌ந்தே கிட‌க்கும் டைரி…41

ஒரு ப‌ள்ளி விடுமுறையில் கோலால‌ம்பூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்த‌து. என் வாழ்வில் முத‌ல் நீண்ட‌ ப‌ய‌ணம் அது. கோலால‌ம்பூரின் மேல் பெரும்ப‌லோர் போல் என‌க்கும் ஓர் ஈர்ப்பு இருந்த‌து. அடிக்க‌டி தொலைக்காட்சியில் பார்க்கு க‌ட்ட‌ட‌ங்க‌ள் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ வாழ்வு என‌ எல்லாமே லுனாஸில் ஒரு க‌ம்ப‌த்தில் இருந்த‌ என‌க்கு ஒரு அந்நிய‌ நாட்டின் க‌வ‌ர்ச்சியைக் கொடுத்த‌ப்ப‌டி இருக்கும். இவ‌ற்றையெல்லாம் மீறி நான் கோலால‌ம்பூருக்குச் செல்ல‌ வேறொரு விஷய‌மும் கார‌ண‌மாக‌ இருந்த‌து. அது ப‌த்திரிக்கை அலுவ‌ல‌க‌ம்.

Continue reading