இதற்கிடையில் நயனத்திற்கு நான் அனுப்பியிருந்த கவிதையும் பிரசுரம் கண்டிருந்தது. கோ.புண்ணியவானின் சொல்லுக்குக் கிடைத்த மரியாதை அது. நயனத்திற்குச் சென்று அதன் ஆசிரியரைக் காண இந்த ஒரு கவிதை போதுமென கருதி ஓவியர் ராஜாவை அழைத்தேன். ‘நயனம்’ என்று சொன்னவுடன் ஓவியர் ராஜா சட்டென மறுத்தார். நயனம் ஆசிரியர் இராஜகுமாரனின் இலக்கிய ஆளுமையைப் பற்றி சிலாகித்துக் கூறியவர் ,அவர் தனிமையில் இருக்க விரும்புபவர் என்றும் புதியவர்களைச் சந்திக்க மாட்டார் என்றும் கூறினார். இராஜகுமாரன்தான் ‘புதுநிலவு’ என அறிந்த போது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
நயனத்தின் மிகவும் இரசித்துப் படித்தவை புதுநிலவின் கவிதைகள். ஒரு வகையான ஏக்கம் ததும்பும் சொற்களோடு வெளிப்பட்ட அக்கவிதைகள் இளம் வாசகர்களை கவர்வதாய் இருந்தன. இராஜகுமாரந்தான் புதுநிலவு எனத் தெரிந்தபோது அவரைச் சந்திக்க மேலும் என் தீவிரம் அதிகரித்தது. ஓவியர் ராஜா பிடிவாதமாக மறுக்கவே அவர் சகோதரர் ஆதி.குமணனைப் பார்க்க வேண்டும் என்றேன். ஓவியர் ராஜாவுக்கு தர்ம சங்கடமாகியிருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் மலேசிய நண்பனுக்கு அழைத்துச் சென்றார்.
நாங்கள் போன நேரம் ஆதி.குமணன் அங்கு இல்லை என்ற தகவல் வந்தது. ஆனால் பரபரப்பாக ஒருவர் வெளிப்பட்டார். எங்களை ஏறிட்டுப் பார்த்தவர் “என்ன விசயம்?” என்றார். அவர் பேச்சே உஷ்ணமாக இருந்தது. ஓவியர் ராஜாவும் சற்று தடுமாறி “ஆதி.குமணனைப் பார்த்து குஜராத் நிதி கொடுக்கலாம் என வந்தோம்” என்றார். “எங்கிட்டயும் கொடுக்கலாம்” என்றவர் சட்டென நன்கொடை கொடுக்கும் புத்தகத்தின் என் பெயரைப் பதிந்து கொண்டார். நான் ஐம்பது ரிங்கிட்டை மனதில் அழுதுகொண்டே கொடுத்தேன். ஓவியர் ராஜா அந்த நபரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவர் மலேசிய நண்பனுக்குத் தூண் போன்றவர்… தலைமை நிருபர் என்றெல்லாம் கூற அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
வெளியில் வந்ததும் “ஏன் அவரிடமெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டும்” என ராஜாவிடம் கூறினேன். அதற்கு ஓவியர் ராஜா “அப்படி சொல்லாதே அவர் முக்கியமான ஆள்” என்றார். “யாராக இருந்தால் என்ன கனிவாகப் பேசவில்லையே” என்றேன். பின்பு அவர் பெயரை விசாரித்து பெ.இராஜேந்திரன் என அறிந்து கொண்டேன். அப்போது அவர் மலேசிய எழுத்தாளர் சங்க செயலாளராக இருந்தார்.
பின் நாட்களில் எனது பல மணி நேரங்களையும் பல நாட்களையும் இதே பெ.இராஜேந்திர னோடுதான் கழிப்பேன் என்று அப்போது நான் உணர்ந்திருக்கவில்லை.
தொடரும்
nanbare…
vanakkam. tangkalin tirenthe kidakum diary romba naalaai tirante kidakirathu, melum ethuvum ezutapadaamal.
todarnthu ezuthungkal aiyaa, vaasippitku kaatirukiren.
thirenthe kidakkum dairy… yen innum nirappapadamal
irukkirathu…?
thiranthe kidakkum dairy…. innum niraiya aachiriyanggalum marmangkalum irukkumo? padikka aaval thoondukirathu… Navin nerattai othukki ezthunggal…aduttavar diaryai paddikkakkoodathu enbar. aanaal intha diaryyil padikka vendiya niraiya anubavangkal ullana… so plz continue…