எனவே ஆணாக இருப்போம்

மாநாட்டின் இறுதியில்

தங்கள் ஆண் என நிரூபிக்க

ஆகச்சிறந்த ஒரே வழியாக

ஆண்குறியை வெளியே தொங்கவிடுவது

சட்டமாக்கப்பட்டது.

 

வெளியில் வெறிச்சோடி கிடக்கும்

ஆண்குறிக்கு

இனி ஜிப் தேவையில்லை என ஒரு சாரார் மகிழ்ந்தனர்.

 

 

 

இனி எந்த பெண்களையும்

மீசை முறுக்கி

பயமுறுத்த தேவையில்லை

 

நெஞ்சை

விரித்துக்காட்ட வேண்டியதில்லையென

 

இளைஞர்கள் கூட்டம்

மீசையை மழித்து மூச்சை தம் பிடிக்காமல் நடந்தனர்.

 

 

வசதி வாய்ப்பு உள்ளவர்கள்

பச்சை குத்தியோ

அடியில் பட்டுத்துணி கட்டியோ

ஆண்குறியை அழகு செய்தனர்.

 

ஆண்குறிக்கு

பிரத்தியேக நகைகள்

உருவாகப்பட்டன…

 

முதலில் சங்கடமாக இருந்தாலும்

சில ஆண்டுகளில்

ஆண்களுக்கும் பெண்களுக்கும்

ஆண்குறியின் அடையாளம்

இயல்பானது.

 

அது

குழந்தைகளின் விளையாட்டு சாதனமானது

அது

கூச்சத்தை இழந்தது

அது

விரைப்பதை மறந்தது

 

மழையின் போதுமட்டும்

ஈரம் படாமல் இருக்க

ஆணுரைகள் பயன்படுத்தப்பட்ட ஒரு

புதிய காலத்தில்

 

பெண்கள்

தங்கள் காதலிகளை

அடையாளம் கண்டனர்.

 

(Visited 163 times, 1 visits today)

3 thoughts on “எனவே ஆணாக இருப்போம்

  1. என்ன கருத்து…என்ன அழமான சிந்தனை…மெதுவாக ஆண்கள் ஆண்மை இழப்பார்கள் …கால ஓட்டத்தில் என்பதை சொல்ல எத்தனிக்கிர்கள். அது எல்லாம் சரி, படைப்பு பலரின் கவனம் கவர இவ்வளவு அற்ப விசயத்தை இவ்வளவு தாழ்ந்து எழுதினால் தான் இலக்கிய உலகின் பார்வை உங்கள் படைப்பின் மீது திரும்பும் என்ற அளவுக்கும் தமிழ் இலக்கிய உலகம் தரம் தாழ்ந்து கொண்டு இருக்கிறதா..அல்லது எதோ இது ஒரு எதேச்சையான தனித்துவ கணக்கில் எடுக்க வேண்டிய அவசியமற்ற சிறு முரண்பாடு என்று எடுத்து கொள்வதா? இலக்கிய வாதிகள் பதிலை பதிவு செயுங்களேன்.

  2. கவிதை வாசிப்புக்கு நன்றாகவே இருந்தது.யதார்தம் என்ற முறையில் எழுத கூச்ச செய்யும் சொற்களைப் பயன் படுத்தினால் அவைதான் நவினமோ என்ற கேள்வியை என் மனம் முன்வைக்கிறது.இறுதியில் ஒரின சேர்க்கையை(lesbian)சொன்ன விதம் சிறப்பு.ஏன் இவைகளை நம் நாட்டுப் பத்திரிகையில் அனுப்பி வையுங்கள்……?

    உங்கள் கவிதை நம் நாட்டு தமிழ் இலக்கியவதிகளுக்கும் வாசகர்களுக்கும் நல்ல ஒரு பட்டிமன்றத்துக்கு வழிவகுக்கும்….(உங்களுக்கு கண்டிப்பாக ஆண் வாசகர்கள் ஒரு அமைப்பே உண்டாக்கிவிடுவார்…..முக்கியமாக இளையோர்கள்… .வாழ்த்துகள்…)

  3. இந்த விபரங்களுக்கு எல்லாம் தைரியம் கொள்வதில் அர்த்தமில்லை ஐயா. சமூக பிரச்சனைகளை எழுத, அதற்கு வழிகாட்டும் படைப்புகளை எழுதுங்கள்.சங்கம் வைத்து தமிழை வளர்த்த நம் முன்னோர் வெட்கப்படுவார்கள்…?

Leave a Reply to BEBE ABDULLAH from Seremban, Negeri Sembilan, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *