கடவுளின் மலம்

நேற்றுதான் கடவுள்

தனது மலமும்

நாறுவதை

முதன் முதலாக உணர்ந்தார்.

அதை பூமிக்குத் தள்ளிவிட்டபோது

பக்தர்கள்

கன்னத்தில் போட்டுக்கொண்டனர்.

 

கடவுளின் மலத்தை

என்ன செய்வதென

பரிந்துரைகள் பறந்தன.

 

அதை கரைத்து ஊருக்கே

குடிக்கக் கொடுக்கலாம் என்றும்…

நீரில் கரைத்தால் சக்தி செத்துவிடும் என்பதால்

பஞ்சாமிர்தம் போல பசுமையோடு உண்ணலாம் என்றும்…

துணிக்குள் உருண்டை பிடித்து

தாயத்தாகச் சுற்றலாம் என்றும்…

நவபாசானம் போல

மலபாசானத்தில் சிலை வடிக்கலாம் என்றும்

ஆளாலுக்கு ஆலோசனைக் கூறினர்.

 

இறுதியில்

ஆண்டவனின் மலம்

அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு

ஒரு உருண்டை 2000 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டது.

 

புனிதமான மலத்தை

கையில் தொட

ஐயர்கள் நல்ல சம்பளத்துக்கு

அழைத்துவரப்பட்டனர்.

 

எவ்வளவு உருட்டி கொடுத்தும்

தீர்ந்து போகாததால்

மணிமேகலையின் அட்சயபாத்திரமாக

உள்ளூர் கவிஞர்களால்

மலமேடு வர்ணிக்கப்பட்டது.

 

அடியவர்களின் மலம் போல

ஆண்டவன் மலமும் நாறும் என்பதை

அறிந்திருந்த மக்கள்

தீர்ந்து போகாத

ஐயர் மலமும் நாறும் என்பதை

மறந்தே போனார்கள்.

நன்றி; குவர்னிகா , 2012

(Visited 208 times, 1 visits today)

One thought on “கடவுளின் மலம்

  1. வணக்கம். தயவு செய்து இறை நம்பிக்கை கொண்ட நம் நாட்டில் இப்படிப்பட்ட கவிதைகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் ஐயா.இன்னும் நம் நாட்டில் நம் இனம் சம்பந்தப்பட்ட எவ்வளவோ அவலங்கள் உள.அதை வெளிக்கொணரவும் ஐயா!

Leave a Reply to BEBE ABDULLAH from Seremban, Negeri Sembilan, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *