இன்றிரவு நான் தூங்கப்போகிறேன்

நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்

இவ்விரவில் தூங்கப்போகும் முன்
கதவுகளை சன்னல்களை அடைக்க வேண்டும்
காற்று அதன் ஓரங்களை உரசாமல் இருக்க
பாரங்களை நகர்த்தி முட்டுக்கொடுக்க வேண்டும்
தொலைக்காட்சி வானொலியிலிருந்து
ஓசை எழாமல் இருக்க
அதை முற்றிலும் சேதமுற செய்ய வேண்டும்
நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்.
நடுநிசியில் குரைத்து திடுக்கிடவைக்கும்
நாயை இன்று கொன்றுவிடலாம்
குறைந்தபட்சம் அதன் நாக்கை அறுத்துவிடலாம்
அல்லது
அதன் சங்கிலியை அவிழ்த்து
ஊரைவிட்டு ஓட வைக்கலாம்
நான் இவ்விரவில் தூங்கப்போகிறேன்

சுழலும் போது ஓசையெழுப்பும் மின்விசிரி
ஏர்கான் பெட்டி
எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்
காற்று தீண்டாத
அடைப்பு அறைக்குள்
இன்றிரவு நான் தூங்கப்போகிறேன்

சாலையில் கடக்கும் மோட்டார் ஒலி
ஹார்ன் சப்தம்
சைக்கிள் மணி
அத்தனையும் இன்றிரவு வீட்டை நெருங்க
தடைவிதிக்க வேண்டும்.
வீட்டின் சுற்றுப்புறம் முழுக்க
ஆணிகளை கொட்டிவைக்கலாம்
சாலையை இடித்து நீர் தேக்க வேண்டும்
சத்தமில்லாத இவ்விரவில்
நான் தூங்கப்போகிறேன்.

எனது கைத்தொலைப்பேசியை அடைக்க வேண்டும்
முடிந்தால்
அதை சுக்குநூறாக்கிவிடலாம்
இனி ஒருபோதும்
அது உயிரிபெற முடியாதபடி
அதன் மின்களத்தை நீரில் மிதக்க விடலாம்
எல்லாவித அலாரங்களையும் அமைதியாக்கும் முன்
கடிகாரங்களையும் கலற்றிவிடலாம்
இன்றிரவு நான் தூங்க வேண்டும்.

குரட்டை விடுபவர்கள்
தூங்குபோது காலைத்தூக்கிப் போடுபவர்கள்
நடுநிசியில் ஒன்னுக்கு எழுந்து போபவர்கள்
யாருடனோ யாருக்காகவோ
கனவில் பேசுபவர்கள்
என அனைவரையும்
கொன்றுவிட்டு

இன்றிரவாவது
நான் தூங்க வேண்டும்.

(Visited 200 times, 1 visits today)

One thought on “இன்றிரவு நான் தூங்கப்போகிறேன்

  1. sirupillayin pulambal…..
    thayavuseithu unmaiyaana ilakkiyavaathigalidam palagu…..
    therntha ilakkiyam varum.. ennangalai visaalamaakkuu….

Leave a Reply to Kavinyan from Kuala Lumpur, Kuala Lumpur, Malaysia Cancel reply

Your email address will not be published. Required fields are marked *