அண்மையில் மை ஸ்கில்ஸ் அறவாரியம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களை தங்கள் அரவணைப்பில் வைத்து, அவர்களை மீள்உருவாக்கம் செய்யும் முயற்சியில் இருக்கும் அந்த அறவாரியத்தின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பூச்சோங் முரளி போன்ற சிலரால் பரப்பப்பட்டது. சமூகத்தில் பல நல்ல செயல்திட்டங்களை உருவாக்கி முன்னெடுக்கும் வழக்கறிஞர் பசுபதி அவர்கள்மேல் கொண்ட தனிப்பட்ட காழ்ப்பால் பூச்சோங் முரளி பலமுறை இதுபோன்ற அவதூறுகளைப் பலகாலமாகப் பரப்பி வந்தது நாம் அறிந்ததே. இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பரவிக்கொண்டிருந்த சூழலில் இது அவதூறு பரப்பும் நோக்கம் என்று உறுதியாக நம்ப தண்டிக்கப்பட்ட மாணவனின் தந்தையே சாட்சியாக நேர்காணல் வழங்கியுள்ளார்.
ஆங்கில நாளேடுகளில் வந்த அந்தச் செய்தியின் தமிழ் வடிவம்:
http://www.freemalaysiatoday.com/category/nation/2016/02/13/father-defends-ngo-chief-in-slapping-video/
சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்த எம்.சுப்பிரமணியம், தன் மகன் அறையப்படுவதாக வெளிவந்த காணொளியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் செய்ததில் தவறில்லை என்று கூறியுள்ளார். “என் மகன் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறான், அவன் ஒழுங்குக்குள் கொண்டுவரப்பட வேண்டியது மிக அவசியம்” என்று பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
கிள்ளானில் அமைந்துள்ள மை-ஸ்கில் அறவாரியம் எனப்படும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரான எஸ். செல்வமலர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவ்விளைஞனின் தந்தை இச்சம்பவத்தின் மூலம் யாரும் மை-ஸ்கில் நிறுவனத்திற்குக் களங்கம் கற்பிக்க முயற்சி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், அவர் தனது மகனுக்குக் கற்றல் குறைபாடு இருந்ததாகவும், அதனால் கிள்ளானில் உள்ள மை-ஸ்கில் நிறுவனத்தில் அணிச்சல் (கேக்) செய்யும் பயிற்சியில் அவனைச் சேர்த்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதிலிருந்து அவனுடைய நடத்தையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவர் கூறினார்.
இணையத்தளத்தில் செல்வமலர் அவ்விளைஞனைக் அறையும்படியான காணொளியொன்று பலரால் பகிரப்பட்டது. அதில், வகுப்பில் உள்ள ஒரு பெண்ணை அவன் தாக்கினானா என்று செல்வமலர் கேட்க அவ்விளைஞன் அமைதியாக நிற்கிறான். பிறகு செல்வமலர் அவனுடைய கண்ணாடியைக் கழற்றும்படி சொல்கிறார், அவ்விளைஞன் கண்ணாடியைக் கழற்றியதும் அவனைப் சிலமுறை அறைகிறார்.
இதனிடையே தான் அவனைத் தண்டித்தது தனிப்பட்ட விரோதத்தினாலல்ல என்று செல்வமலர் கூறினார். அவ்விளைஞன் ஏற்கெனவே வகுப்பறையில் உள்ளவர்களைத் தாக்கியிருப்பதாகவும், தான் அவனை அடித்தது அவன்மீது கொண்ட கோபத்தால் அல்லவென்றும் தெரிவித்தார். “அவன் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்ததாலேயே அவனைத் தண்டிக்க வேண்டியதாயிற்று, அடித்தவுடன் அவன் தன்னுடைய விளக்கங்களைத் தெரிவித்தான்.” என்றார் அவர்.
மேலும் அவர், மை-ஸ்கில் நிறுவனமானது இளைஞர்களை வேலைக்குத் தயார் செய்கிறது என்றும் கடுமையான பயிற்சிகளுக்குப் பின்பே அவர்களை வேலைக்கு அனுப்புகிறது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, வியாழக்கிழமையன்று பி.கே.ஆர். கெலானா ஜயா பிரிவின் செயலாளர் முரளி சுப்ரமணியம் அந்நிறுவனர் மீது குழந்தைகள் வதைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்திருந்தார்.
சமூக கவன ஈர்ப்புக்காக முரளி இவ்வாறு செய்வது புதிதில்லை என சமூக ஆர்வளர்கள் கருத்து தெரிவித்தனர்.