வணக்கம் மதியழகன்! நல்ல பெயர். ஆனால் அதிலுள்ள முதல் பகுதி உங்களிடம் இல்லையென நினைக்கிறேன். பிறகென்ன சார்? எந்த பிரச்னையோடு என்னத்தை முடிச்சு போடுகிறீர்கள். ஆபத்தானவர் ஐயா நீங்கள்.
மதியம் சில முக்கிய வேலைகளுக்கு மத்தியில் இந்த எங்களிட்ட கட்டுரையை ஒரே மூச்சில் வாசித்தேன். செத்தார் மதியழகன்… இலக்கிய வட்டாரத்தினர் கிழிகிழியென கிழிக்கப்பபோகிறார்கள் என நினைத்தேன். சற்று முன்பு ஆவலுடன் அழுத்திப் பார்த்தால் யாருமே எந்தவொரு கேள்வியும் எழுப்பவில்லை. ஏனிந்த கள்ள மௌனம்? புரியவில்லை. இந்த விடயத்தில் மௌனம் காப்பவர்கள் மதியழகனை விட ஆபத்தானவர்கள் என தோன்றுகிறது!
ஒரு இலக்கியவாதியை அவரின் படைப்பின் ரீதியாகவோ அல்லது… கருத்தின் ரீதியாகவோ எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள் அறிவுப்பூர்வமாக. அல்லது தங்களுடைய ஒரு சிறந்த படைப்பையாவது கண்ணில் காட்டுங்கள். பிறகு பேசுங்கள். இதுவரை படமே இயக்காமல் அதற்கான பட்டறைகள் நடத்துகிறீகள். நீங்கள் இதுவரை படம் இயக்கியதே இல்லை. நீண்டடட கட்டுரைகள் போல இது போலிதான் என தெரியாத அப்பாவிகள் வந்து கலந்துகொள்கிறார்கள் போல. அதுபோல இல்லை ஐயா இது. இதற்கு கொஞ்சம் வாசிப்பு அவசியம்.
அதெல்லாம் கூட நமக்கென்ன போகட்டும் என விட்டு விடலாம். ஆனால் இன்னொரு நல்ல வாசகி/எழுத்தாளினி தகாதபடி இழிவு படுத்தப் படும்போது தட்டிக்கேட்டு விட்டால் அவர் ஒரு பெண்மணி என்ற ஒரே காரணித்திற்காக “உனக்கும் அவளுக்கும் என்னலா உறவு?” என்று பொது ஊடகத்தில் கேள்வியொன்றை எழுப்பியுள்ளீர்களே? என்ன தைரியம்? இப்படி பேசிவிட்டால் அவர் வீட்டில் அவரை முடக்கிவிடுவார்கள். பொதுவெளியில் அனுமதிக்க மாட்டார்கள். அவர் பெயர், வாழ்வு உங்களை போன்றவர்களால் கெடக்கூடாதென சுற்றியுள்ளவர்களும் அமைதியடைந்து விடுவர். அப்போது நீங்கள் அனைவர் வாயை அடைத்துவிட்டதாக மார்த்தட்டலாம். பன்றி உள்ள குளத்தைக் கண்டு தள்ளி நடப்பது கோழைத்தனம் அல்ல. பன்றி வீரனும் அல்ல.
பொதுவெளியிலில் பெண்ணொருத்தி திறன் காட்டி நின்றுவிட்டால் அவளை நோக்கி வீசப்படும் அபத்தமான அவதூறுகளில் ஒன்று தான் வெட்கம் கெட்ட உங்கள் அந்த கேள்வி ரகம். ஆனால் அதற்கும் ஆதரவு சொல்லும் சக பெண்களையும் மௌனமாக இருப்பவர்களையும் என்னவென்று சொல்வது?
இந்த மோதலில் மதியழகனை நான் எப்படி பார்க்கிறேன் என்றால்…”அவர்கள் அளவிற்கு அறிவுப்பூர்வமாக மோத முடியவில்லை….நம்ம அளவிற்கு சேற்றுக்குள் இழுத்து அழுக்காக்கியாவது விடுவோம்” என்ற கதாப்பாத்திரமாக தான்! அபிஸ்து.
உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் நவீன் மூலம் பதில்கள் வைக்கப்பட்டு விட்டன.
உங்கள் கேள்வி: மலேசியாவில் தலித் இலக்கியம் உள்ளதா?
நவீன்: தலித் இலக்கியமென யாரும் வலிந்து எழுதுவதில்லை. விமர்சகர்கள் அவ்வாறு வகுக்கிறார்கள். மலேசியாவில் தலித் இலக்கியம் என கோட்பாடுகள் வகுக்கப்படவில்லை.
உங்கள் கேள்வி: வண்டி தலித் இலக்கியமா?
ம.நவீன்: வண்டி சிறுகதை 60-70களில் தமிழர்கள் மத்தியில் இருந்த சாதிய தீண்டாமையை பேசுகிறது. எனவே அது தலித் இலக்கிய வகைக்குள் அடங்கும். ஆனால் சாதிய ஒடுக்குமுறை மட்டும் தலித் இலக்கியமல்ல. அது குறிப்பிட்ட சாதி சார்ந்ததும் அல்ல. அது விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொதுவானது.
நீங்கள் வண்டி தலித் இலக்கியம் இல்லை என்றால் ஏன் இல்லை என்றும் மலேசியாவில் தலித் இலக்கிய மரபு இல்லை என்றால் ஏன் இல்லை என்றும் பேசலாம். ஆனால் நீங்கள் ‘அப்படி இருக்கக்கூடாது’ என்கிறீர்கள். ஆக அது உங்கள் விருப்பம். உங்கள் விருப்பத்தைச் சொல்வது வேறு இருப்பதை சொல்வது வேறு.
அறிவுள்ளவர்கள் நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டும் என்பது நமது ஆசைதான். ஆனால் அது நடப்பதில்லையே. அப்படித்தான் இதுவும்.
மதியழகன் நீங்கள் செய்திருக்க வேண்டியது, தலித் இலக்கியம் என்றால் என்னவென்று நீண்டடட கட்டுரை எழுதுவது. (ஆனால் சரியான தரவுகளோடு)
பின்னர் ஏன் வண்டி தலித் இலக்கியம் இல்லை என்றொரு நீண்டடட கட்டுரை எழுதுவது.
இறுதியாக மலேசியாவில் 60-70 களில் தீண்டாமையும் சாதியமும் இருந்ததா என்ற நீண்டடட கட்டுரை எழுதுவது. (ஆய்வுகளோடு)
இதெல்லாம் உங்களுக்கு சிரமம் மதியழகன். உங்களால் அவதூறும் ஆபாசமும் உமிழ முடியும். சேற்றை வாரி இறைக்க முடியும். ஆமாம் சேற்றில் புரல்வதுதானே உங்களுக்கு எளிது.
பின்குறிப்பு:
உங்களுக்கு இலக்கியம் குறித்து பிடுங்கி அடிக்கும் ஞானம் இருப்பதா சொல்லியிருக்கிறார் ங்க.அவ்வளவு ஞானம் இருந்தால் நானே ஈப்போவில் ஒரு உரையாடல் நிகழ்ச்சி வைக்கிறேன். நீங்கள்.வல்லினம் குழுவில் உள்ள ஒருவரிடம் இலக்கியம் குறித்து பொது விவாதம் செய்யலாம். அதை நேரடி ஒளிபரப்பும் செய்வோம்.
கலைசேகர், ஈப்போ
(Visited 78 times, 1 visits today)