முட்டாளுடன் மூன்று நாட்கள்

அறத்தின் குரல் அதிராது – ஆசிர் லாவண்யா

இலக்கியப்பணியை முன்னெடுத்துச் செல்லும் எழுத்தாளர் நவீன் அவர்களுக்கு. இந்தக் கட்டுரையை எழுத நான் ஏறக்குறைய ஐந்து நாட்கள் ஆறு மணி நேரம் எடுத்துக்கொண்டேன். எனது பல பணிகளுக்கு மத்தியில் அவதூறுகளுக்கு எதிரான அறத்தைப் பேச ஒரு காரணம் உண்டு. பேய்ச்சி நாவல் குறித்து தொடங்கிய அவதூறுகள் இப்போது படிப்படியாக வளர்ந்து வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. ஒரு வாசகியாக அந்த பொய்மையில் கட்டுண்ட எளிய மனிதர்களை நோக்கி உண்மையைச் சொல்வதை என் கடமையாக நினைக்கிறேன். எனவே தயவு செய்து இதனை தங்கள் வலைத்தளத்தில் பதிவிட கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

– ஆசிர் லாவண்யா.

Continue reading

எதிர்வினை 6: மதி பையா பாவம் – கலை சேகர்

imagesஎன்ன மதியழகன்? தங்களிடமிருந்து எக்காரணம் கொண்டும் நேரடி பதில்கள் வரவே வாராதோ? என்னமோ கேட்டால் வேரென்னவோ சொல்றீங்க? அதுவும் நமக்குள் நடந்த வேறொரு உரையாடலின் படங்களை காட்சியகமாக்கி இருக்கிறீர்கள்! அவ்வளவு கோழையா நீங்கள் மதியழகன்?
சரி… அப்படியே நமக்குள் தொடர்பிலான ஒன்றை சொல்லனும் என்றாலும்… அதை சும்மா மேலோட்டமா சொல்லி சொதப்பக்கூடாது! வாசிக்கிறவங்களுக்கு கதை புரியாம போயிராதா? ஒரு இயக்குனர் நீங்க இப்படி சொதப்பலாமா?? உங்க கதையில் என் கதாபாத்திரத்தை கொஞ்சம் ‘க்ரெய் ஏரியா’வில் வைத்து விட்டீர்களே? இதனால்தான் உங்களுக்குப் புரோடியுசர் கிடைக்காமல் பட்டறை நடத்துவதாகப் பம்மாத்து காட்டுகிறீர்களா? மதி பையா பாவம். (இதை பிக்பாஸ் ஐஸ்வரியா சொல்லும் ஷாரிக் பையா பாவம் தொணியில் வாசிக்கவும்)

எதிர்வினை 5: கோழையின் குரல் – விஜயலட்சுமி

43950509_1462895410479425_4191337698016886784_nதியழகன் என்ற கோழை தன்னிடம் விவாதம் செய்ய வல்லினம் குழுவுக்கு தைரியம் இல்லை என்று கொக்கரித்துக் கொண்டிருந்தான். வல்லினத்தில் ஆகக் கடைசியாக இணைந்த நான் “சரி வா. நேரடியா விவாதிக்கலாம்” என்று மூன்று முறை அவனை அழைத்துவிட்டேன். வரமாட்டேன் என ஓடி ஒழிகிறான். அவனிடம் விவாதிக்க நான் பண்பாடு கற்க வேண்டுமாம். ஒரு கோழை, முட்டாள் சத்தமிட்டுதான் பேசுவான் என இன்று அறிந்துகொள்ள முடிந்தது. நான் ஓர்மையில் யாரையும் அழைப்பதில்லை. ஆனால், கருத்து விவாதத்தைமீறி தனிமனித அவதூறு செய்பவர்களுக்கு மரியாதை கொடுக்க அவசியமில்லை. தனிமனிதனான என்னிடமே விவாதத்துக்கு வர தயங்கும் அவன், வல்லினம் குழுவை விவாதத்துக்கு அழைப்பதெல்லாம் இவ்வருடத்தின் சிறந்த நகைச்சுவை. எனவே, இத்துடன் முடித்துக் கொள்கிறேன். கோழைகளை நோக்கி வாளை சுழற்ற முடியாது அல்லவா.

Continue reading

எதிர்வினை 4: அறிவிலார் தீங்கு – விஜயலட்சுமி

indexமதியழகன் – நவீன் விவாதத்தை வாசித்தேன்.  கடைசியாக நேற்று அவர் என்னைப் பற்றி செய்த அவதூறையும் நண்பர்கள் அனுப்பினர். அனுப்பியிருக்க வேண்டாம். முட்டாள்களின் புலம்பலை, நேரடி வாதத்திற்கு வரத்தயங்கும் கோழைகளின் முகநூல் பதிவை வாசிப்பது வீண்.

நான் கராத்தே சண்டைப் போட்டிகளைப் பார்ப்பதுண்டு. அதில் படுபயங்கரமாக அடிப்பட்டு கோதாவில் இருந்து வெளியே விழும் ஒருவர் வெளியே நின்றபடி ஒற்றை விரலைக் காட்டி, கொச்சை மொழி பேசி, கத்தி, திட்டி என்ன செய்தாலும் அது பத்திரிகை செய்திதான். அது சுற்றி உள்ளவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. ஆனால் அவன் எப்போதுமே வீரனாகிவிட முடியாது. அது தோற்று அவமானம் அடைந்தவர்களின் கூச்சல். அந்தக்கூச்சலுக்குக் கைத்தட்ட ஆள் இருக்கும். குரங்கு குட்டிக்கரணம் அடிக்கும் போது கைத்தட்டுவதில்லையா.

Continue reading

எதிர்வினை 3: நட்பு நீக்கம் – அ.பாண்டியன்

imagesமதியழகன் நான் உங்களை என் முகநூல் நட்பில் இருந்து நீக்குகிறேன்.

இப்படி அறிவிப்பை எழுதிய பிறகு உங்களை நீக்குவதே சரியாக இருக்கும். அதன்வழி, பயந்தவன், நேர்மையற்றவன், கோழை என்ற வசைகளை நீங்கள் விரையமாக்காமல் இருக்கலாம் அல்லவா.

அதற்கு முன்…

Continue reading

எதிர்வினை 2: மதியழகன் எனும் மனநோயாளி – சரவண தீர்த்தா

imagesமுகநூலில் வல்லினத்துக்கு எதிராகப் பிதற்றிக் கொண்டிருக்கும் மதியழகன் எனும் நபர், வல்லினத்தின் தோற்றுனரான நவீனையும் வல்லினக் குழுவினரையும் குறிவைத்து பித்துப் பிடித்தவர் போல் எழுதிக் கொண்டு வருவதை இன்று பொறுமையாக வாசித்தேன். பைத்தியங்கள் இப்படித்தான் எழுதுமா? என்று கேட்கும் அளவுக்கு அவருடை முகநூல் எழுத்து எல்லையை மீறி, அவரையே அவர் முட்டாள் எனக்காட்டிக்கொண்டு ஆடும் அளவுக்குச் சென்றுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவருக்கு லைக்கிடும் நண்பர்கள் அவரது குரங்கு சேஷ்டைகள் தொடர வேண்டும் என விரும்பியே உசுப்பேத்துகின்றனர். அவர்களும் பொழுது போக வேண்டும் இல்லையா? ஆனால் குரங்குகளுக்கு தான் ஒரு கேலிப்பொருள் என எப்போதும் தெரிவதில்லை. சிலசமையம் அது குறியைக் காட்டி பொதுவில் மூத்திரம் அடிக்கும். அனைவரும் ரசித்துச் சிரிப்பர். மதியழகன் அதைதான் செய்கிறார். விவாதம் என்ன சுச்சா பெய்கிறார். அதை லைக்கிட்டு ரசிக்கின்றனர்.

எதிர்வினை 1 : கள்ள மௌனமும் இலக்கிய உலகமும் – கலை சேகர்

indexவணக்கம் மதியழகன்! நல்ல பெயர். ஆனால் அதிலுள்ள முதல் பகுதி உங்களிடம் இல்லையென நினைக்கிறேன். பிறகென்ன சார்? எந்த பிரச்னையோடு என்னத்தை முடிச்சு போடுகிறீர்கள். ஆபத்தானவர் ஐயா நீங்கள்.
மதியம் சில முக்கிய வேலைகளுக்கு மத்தியில் இந்த எங்களிட்ட கட்டுரையை ஒரே மூச்சில் வாசித்தேன். செத்தார் மதியழகன்… இலக்கிய வட்டாரத்தினர் கிழிகிழியென கிழிக்கப்பபோகிறார்கள் என நினைத்தேன். சற்று முன்பு ஆவலுடன் அழுத்திப் பார்த்தால் யாருமே எந்தவொரு கேள்வியும் எழுப்பவில்லை. ஏனிந்த கள்ள மௌனம்? புரியவில்லை. இந்த விடயத்தில் மௌனம் காப்பவர்கள் மதியழகனை விட ஆபத்தானவர்கள் என தோன்றுகிறது!

மதியழகன் என்பது புனைப்பெயர்தான் – ம.நவீன்

indexமதியழகன் தன் முகநூலில் எனது நேர்காணலை முட்டாள்தனமானது என்பதாகக் குறிப்பு ஒன்றை இன்றைக்கு எழுதியுள்ளார். அதற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். உழைப்பை அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாதுதான். அவரது அதிகபட்ச உழைப்பே ஒரு கட்டுரை எழுதும் முன் பலரையும் அழைத்துக் கருத்துக்கேட்டு தொகுப்பதுதான். மலேசியத் தமிழர்களின் வாசிப்பு குறித்த கட்டுரை எழுதும்போது என்னை அழைத்தவர் “மா.இராமையா என்பவர் யார்? நான் கேள்விப்பட்டதே இல்லையே?” எனக்கேட்டபோது அவர்தான் மலேசியாவின் முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார் எனக்கூறி விளக்கம் கொடுத்தபோது “அப்படியா? அப்படியா? எனக்குத் தெரியாதே” எனக்கேட்டுக்கொண்டவரின் அறியாமை இன்னமும் மனதில் அகலாமல் உள்ளது. ஆனால் மலேசியாவில் மிக நீண்டகாலம் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு மூத்த எழுத்தாளரின் பெயரையும் தான் அறிந்திராததைப் பற்றிய குற்ற உணர்வோ வெட்கமோ கொஞ்சமும் இல்லாமல் அதை தனது அசட்டுச் சிரிப்பின் வழி கடந்துகொண்டிருந்தார்.

Continue reading

மதியழகன் குறிப்புகள் : போலி அறிவுவாதப் புற்று – ம.நவீன்

பகுதி 1

கலை இலக்கிய விழா பணிகளின்போது பொதுவாக வேறு சங்கதிகளில் ஈடுபடுவதில்லை. அது Michael-Rosen-Quackery-Watchநேரத்தைச் சன்னஞ்சன்னமாக உறிஞ்சும். அதே மனநிலையில்தான் மதியழகன் முனியாண்டி தன் முகநூலில் எழுதியுள்ள குறிப்பை ஒரு முகநூல் பதிவாக மட்டுமே எண்ணி புறக்கணிக்க நினைத்தேன். எளிய கலந்துரையாடலுக்குக்கூடத் தகுதியற்ற பிதற்றல்கள் அவை. குறிப்புகளை ஒட்டி விஜயலட்சுமி எழுப்பிய சில அடிப்படையான கேள்விகளை அவர்  ‘கிறுக்கல்கள்’ எனப் புறம்தள்ளி விட்டிருந்தார். சரி என அவரது முந்தைய சில குறிப்புகளை வாசித்தபோது கடும் அதிர்ச்சி. கட்டுரையைவிட அதைப் பாராட்டி எழுதப்பட்ட கருத்துகள் மேலும் குழப்பங்களையே உண்டு செய்தன. முகநூலில் போலி புத்திஜீவிகள் எவ்வாறு உருவாகின்றனர் என மதியழகன் முனியாண்டியின் முகநூலை வளம்வந்தால் போதும் எனப்புரிந்தது. எதையும் சிந்திக்க முடியாத ஒரு தரப்பு இளைஞர்கள் எத்தனை பரிதாபமாக இவ்வாறான அரைவேக்காட்டு எழுத்துமுறையில் சிக்கிக்கொள்கின்றனர் எனவும் அறிய முடிந்தது.  எனவே, இந்தக் எதிர்வினை அல்லது விளக்கம் மதியழகனுக்கு மட்டுமல்ல. மதியழகனால் வெகு எளிதில் இந்த எதிர்வினையைக் கடந்து செல்ல முடியும். அதற்கு அவரிடம் Mark Zuckerberg முகநூலில் உருவாக்கிக்கொடுத்த கிண்டல் சிரிப்பு சின்னம், ‘ஹஹஹ..’ என சத்தமிட்டு சிரிக்கும் பாவனை, இது ஒரு மாற்றுக்கருத்து என்ற பெருந்தன்மையான வசனங்கள் உதவக்கூடும். எனவே கொஞ்சம் மேம்பட்டு சிந்திக்கும் ஆர்வம் இருந்தால் பிற வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.

Continue reading