எதிர்வினை 6: மதி பையா பாவம் – கலை சேகர்

imagesஎன்ன மதியழகன்? தங்களிடமிருந்து எக்காரணம் கொண்டும் நேரடி பதில்கள் வரவே வாராதோ? என்னமோ கேட்டால் வேரென்னவோ சொல்றீங்க? அதுவும் நமக்குள் நடந்த வேறொரு உரையாடலின் படங்களை காட்சியகமாக்கி இருக்கிறீர்கள்! அவ்வளவு கோழையா நீங்கள் மதியழகன்?
சரி… அப்படியே நமக்குள் தொடர்பிலான ஒன்றை சொல்லனும் என்றாலும்… அதை சும்மா மேலோட்டமா சொல்லி சொதப்பக்கூடாது! வாசிக்கிறவங்களுக்கு கதை புரியாம போயிராதா? ஒரு இயக்குனர் நீங்க இப்படி சொதப்பலாமா?? உங்க கதையில் என் கதாபாத்திரத்தை கொஞ்சம் ‘க்ரெய் ஏரியா’வில் வைத்து விட்டீர்களே? இதனால்தான் உங்களுக்குப் புரோடியுசர் கிடைக்காமல் பட்டறை நடத்துவதாகப் பம்மாத்து காட்டுகிறீர்களா? மதி பையா பாவம். (இதை பிக்பாஸ் ஐஸ்வரியா சொல்லும் ஷாரிக் பையா பாவம் தொணியில் வாசிக்கவும்)

நீங்கள் தொடங்கியதால் நான் தொடர்கிறேன்! ஆமாம்…’வாசிப்பு பழக்கம்’ தொடர்பான உங்கள் ஆழமற்ற கட்டுரையால் கடுப்பாகி நான் உங்களை திட்டி என் முகநூலில் பதிவிட்டது முற்றிலும் உண்மை.
நீங்களாகவே என்னை ‘மெசேஜரில்’ தொடர்புகொண்டு ‘ஜி’ ‘ஜி’ எல்லாம் போட்டு சில விளக்கங்கள் சொன்னதும் உண்மை!
சரி நல்லவராக இருக்கிறாரே என்று …அந்த ‘திட்டல்’ பகுதியை என் முகநூலிலிருந்து அகற்றியதும் உண்மை!
அதற்கு பிறகு நாம் இருவரும் சில இலக்கிய உரையாடல்களில் ஈடுப்பட்டு நமது படைப்புகளை பற்றி பேசினோம். நான் எழுதியவை இருந்தால் வாசிக்க அனும்பும்படி கேட்டுக்கொண்டது தாங்கள் தான். நான் அனுப்பி வைத்ததும் உண்மைதான்.
அதெல்லாம் உண்மையென்பதால் நீங்கள் நல்லவரா? இதைச் செய்ததால் நான் உங்களின் அயோக்கியத்தனத்திற்கு சாதகமாக நிக்கணுமா? அல்லது எதிர்வினையாற்ற நவீன் வந்து தான் சொல்லனுமா? எங்கள் இருவருக்கும் அந்நிலை அவசியமற்றது!
உண்மையில் எனக்கு விளங்கவில்லை.
நீங்கள் குறுக்கு புத்திக்காரரா அல்லது அடிமுட்டாளா? இறுதியாக எழுதிய ‘தன்னிலை விளக்கத்தை’ வாசித்ததும் குழப்பம் வந்தது. உங்கள் தொலைப்பேசி உரையாடல் பற்றி நவீன் எழுதிய பதிவை நானும் அவர் புளோக்கில் வாசித்தேன். மீண்டும் மீண்டும் வாசித்து நுணுகி ஆராய்ந்தேன். அதில் சொல்லப்பட்டுள்ளது.
  •  உங்களுக்கு மா.இராமையாவை தெரியவில்லை. அவரை எனக்கு தெரியாதே என நீங்கள் நவீனிடம் ஒப்புக்கொண்டு விளக்கம் பெற்றுள்ளீர்கள். அதாவது மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய ஒருவரை, முதல் சிறுகதை தொகுதி பிரசுரித்த ஒருவரை உங்களுக்கு தெரியாது எனச்சொல்லும் நீங்கள் இலக்கிய விவாதம் என வருவதை அபத்தம் எனச்சொல்லியுள்ளார்.
  • உங்கள் கட்டுரைகள் காப்பிக்கடைகளில் நடக்கும் பேச்சு போல. அதை அறிவார்ந்த உலகம் பொருட்படுத்த வேண்டாம் என நீங்களே சொல்லியுள்ளதாக கூறியுள்ளார்.
உங்கள் இருவரின் தொலைபேசி உரையாடல் குறித்து இவை இரண்டு மட்டுமே நவீன் பதிவு செய்துள்ளார். இவை இரண்டுமே தனிமனித சாடல்கள் அல்ல. ஒன்று இலக்கியம் பேச வரும் உங்களுக்கு அதன் வரலாற்று அறிவு இல்லை. அடுத்து நீங்களே உங்கள் எழுத்து தரமற்றது என ஒப்புக்கொண்டுள்ளீர்கள். இதில் எங்குமே மிரட்டல் இல்லை. இலக்கிய விவாதமே உள்ளன.
நீங்கள் எழுதியுள்ளவை இப்படி உள்ளன.
  • விஜயலட்சுமியை அரைவேக்காடு என்றவுடன் நவீன் கோபம் கொண்டு கத்தினார்.
  • பேய் பிடித்தது போல தொடர்ந்து கத்தினார்.
  • பேசும்போது திக்கினார்.
இவை மூன்றும் தனிமனித தாக்குதல். ஒருவரை அரைவேக்காடு என்றது. ஒருவரை திக்குவாய் என்றது.
இப்போதுவரை நவீன் தான் கத்தியதையும், திக்கியதையும், தன் தோழரை அரைவேக்காடு என்றவுடன் கோபம் அடைந்ததையும் பொய் என எங்குமே சொல்லவில்லை. அதேபோல நீங்கள் விஜயலட்சுமியை தொலைபேசி தொடர்பில் அவமதித்ததாக எங்குமே அவர் பதிவு செய்யவும் இல்லை. இதையெல்லாம் சொன்னவர் நீங்கள். இப்போது ப்ளேட்டை அப்படியே திருப்பி போட்டு நவீன் அவ்வாறு அவதூறு சொன்னதாகவும் அதை இல்லை என நிரூபிக்க ஆதாரம் தேவை என்றும் ஆடியோ கேட்கிறீர்கள். மதியழகன் உங்களிடம் இல்லாத ‘மதி’ குழம்பியுள்ளது. சுற்றி நின்று அடிக்கிறார்கள் அல்லவா. இப்போது உங்களுக்கு தேவை கொஞ்சம் ஓய்வு. முடிந்தால் யோகா செய்யுங்கள்.
நவீன் சொல்லாத ஒரு வார்த்தையை நீங்களே சொல்லி, (விஜியை அரைவேக்காடு என சொன்னேன்) என நீங்களே முந்தைய பதிவில் ஒப்புக்கொண்டு இப்போது நான் விஜியை அவமதிப்பதாக நவீன் ஆடியோவில் உள்ளதாகச் சொல்கிறார் என்பதெல்லாம் நீங்கள் எடுக்காத – எப்படியும் எடுக்கவே போகாத சினிமா ஸ்கிரிப்டா. படம் ஃப்ளப் ஆகிவிடும் பீப் அழகன். (மதியழகன் எனச்சொல்ல கஷ்டமா இருக்கு)
நீங்கள் ஆடியோவை கேட்க ஒரு நியாயம் இருக்கலாம். அதாவது ‘எனக்கு மா.இராமையாவின் ஆளுமை முழுமையாக தெரியும். நான் என் கட்டுரையை காப்பிக்கடை உரையாடல் என சொல்லவே இல்லை. எனவே நவீன் சொல்லியுள்ளது பொய். அதனால் அவர் அதை நிரூபிக்க வேண்டும்’ எனலாம்.
நீங்கள் உங்கள் முகத்தில் பூசிக்கொண்ட மலத்துக்கு இன்னொருவரிடம் தண்ணீர் கேட்கிறீர்கள். இதில் கதையை அப்படியே மாற்றி புதிய ஸ்கிரிப்ட் எழுதுகிறீர்கள். இதனால்தான் மதியழகன் உங்களால் படம் இயக்கவே முடியவில்லை.
மதியழகன், முதலில் நீங்கள் விஜியை நவீனை விவாதிக்க வாங்க வாங்க என்கிறீர்கள். நான் பேசினால் பதில் சொல்லமாட்டேன். அதற்கு எதிர்வினை இல்லை என ஜாகா வாங்குகிறீர்கள். அவர்கள் இருவரிடம்தான்  பேசுவேன் என்கிறீர்கள். அப்புறம் விஜயலட்சுமியும் நேரடியாக பேச அழைத்தால் ‘மாட்டேன் மாட்டேன் போ’ என பயந்துகொண்டு முகநூலில் பேசுவேன் என்கிறீர்கள். காரணம் உங்களிடம் கருத்தில்லை. முகநூல் என்றால் அரக்க பரக்க பலரை அழைத்து இணையத்தில் தேடி பதில் கூறலாம் இல்லையா. என்னா வில்லத்தனம். கருத்தே திருட்டு என்றால் உங்கள் திரைக்கதை கொரிய படத்தில் இருந்து சுட்டதுதானே. மதி பையா ரொம்ப பாவம்.
ஆக மொத்தத்தில் ஒன்று தெரிகிறது. நீங்கள் எழுதிய நீண்டட கட்டுரைகளும் அரைவேக்காட்டு தனமானவை. நீங்கள் ஆற்றும் எதிர்வினைகளும் அரைவேக்காட்டுத்தனமானவை. நேற்று உங்கள் கணிப்புகள் பற்றிய போலித்தனத்தை உடைத்தெரிந்த சரவணதீர்த்தாவின் கட்டுரை படித்தேன். அதைப்பற்றி சத்தமே இல்லை. நல்ல ஆளய்யா நீங்கள். எப்படி அசிங்கமே படாத மாதிரி தெளிவாக நடிக்கிறீர்கள்.
கலைசேகர், ஈப்போ
(Visited 70 times, 1 visits today)